இது உங்கள் இடம்: விரட்டும் நாள் வெகு தூரத்தில் இல்லை!

Updated : செப் 25, 2022 | Added : செப் 25, 2022 | கருத்துகள் (80) | |
Advertisement
உலக, நாடு, தமிழக நடப்புகள் குறித்து வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம் ஆர்.சுப்பு, சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தி.மு.க., அரசு பதவியேற்றது முதல், ஆரவல்லி, சூரவல்லி ஆட்சியைப் போல, மக்களை துன்புறுத்தும் வகையில், ஒவ்வொரு வரியாக உயர்த்தி, கசக்கி பிழிந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், மக்கள் வெகுண்டெழுந்து போராட்டம் எதுவும் நடத்தி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone


உலக, நாடு, தமிழக நடப்புகள் குறித்து வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்ஆர்.சுப்பு, சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:

தி.மு.க., அரசு பதவியேற்றது முதல், ஆரவல்லி, சூரவல்லி ஆட்சியைப் போல, மக்களை துன்புறுத்தும் வகையில், ஒவ்வொரு வரியாக உயர்த்தி, கசக்கி பிழிந்து கொண்டிருக்கிறது.latest tamil newsஇந்நிலையில், மக்கள் வெகுண்டெழுந்து போராட்டம் எதுவும் நடத்தி விடக் கூடாது என்பதற்காக, ஸ்டாலின் அரசு கையில் எடுத்திருக்கும் ஆயுதம் தான், ஹிந்து மத எதிர்ப்பு மற்றும் சனாதனம் உள்ளிட்டவை. தமிழகத்தில் திராவிடம் என்ற வார்த்தையானது, அரசியல் கட்சிகளின் பெயர்களில் தவிர, வேறு எங்கும் புழக்கத்தில் இல்லை; கிடையவும் கிடையாது.

அது போன்றதே சனாதனம் என்ற வார்த்தை. ஹிந்து மதத்தில் எங்கும், எதிலும் புழக்கத்தில் இல்லாத வார்த்தையை வைத்து, கம்பு சுத்தி சிலம்பம் ஆடுகிறது கழக அரசு; அதையும் நேரடியாக செய்யாமல், கழக முன்னோடிகள் வாயிலாக செய்து வருகிறது. 'நாங்கள் ஹிந்து மதத்திற்கு எதிரானவர்கள் இல்லை; ஹிந்து மதத்தின் பெயரால் கூறப்படும் சனாதனத்திற்கு தான் எதிரானவர்கள்' என்று அறைகூவலிடும், தி.மு.க., - எம்.பி., ஆண்டிமுத்து ராஜா அவர்களே...சனாதனம் என்ற வார்த்தையை யார், எங்கே உபயோகிக்கின்றனர்... தகுந்த ஆதாரங்களோடு நிரூபியுங்கள் பார்க்கலாம்.

நீங்கள் ஹிந்து மதத்திற்கு எதிரானவர்கள் இல்லை என்றால், அந்த ஹிந்து மதம் பற்றி ஏன் அடிக்கடி விமர்சிக்க வேண்டும்; ஏகடியம் பேசி எள்ளி நகையாட வேண்டும்? ஆக, மக்களின் எதிர்ப்பை திசை திருப்ப, கழகம் தற்போது கையில் எடுத்திருக்கும் ஆயுதம் தான் சனாதனம். 'மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, ஈரை பேனாக்கி, பேனை பெருமாளாக்கு வதில் வல்லவர்' என்பார், தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்.


latest tamil newsஅந்தக் கூற்றை மெய்யாக்கும் வகையில், 'பிராமணீயத்துக்குத் தான் கழகம் எதிரி; பிராமணர்களுக்கு அல்ல' என்பார், கருணாநிதி. இது எப்படி எனில், 'நாங்கள் அரிசிக்கு தான் எதிரி; சோற்றுக்கு அல்ல' என்று சொல்வது போன்றது. அப்படிப்பட்ட ஒரு வாசகத்தை தான், தற்போது ஆ.ராஜாவும், கையில் எடுத்து, 'நாங்கள் ஹிந்து மதத்திற்கு எதிரானவர்கள் இல்லை; சனாதனத்திற்கு தான் எதிரானவர்கள்' என்று கூறி வருகிறார்.

புழக்கத்தில் இல்லாத வார்த்தையை வைத்து, வேடிக்கை காட்டுவதில் கழகத்தினர் கைதேர்ந்தவர்கள். எந்த வார்த்தை ஆயுதம் வாயிலாக, தங்களை தற்காத்துக் கொள்ள தி.மு.க.,வினர் முற்படுகின்றனரோ, அந்த ஆயுதமே அவர்களை திருப்பித் தாக்கி, விரட்டும் நாள் வெகு துாரத்தில் இல்லை என்பது மட்டும் நிதர்சனம்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (80)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Aarkay - Pondy,இந்தியா
26-செப்-202200:01:31 IST Report Abuse
Aarkay நிறைய மதம் மாறிய அல்லேலூயா கூட்டம், இட ஒதுக்கீடு சலுகைகளுக்காக இன்னமும் இந்துக்கள் என்றே தங்களை பதிவு செய்துகொண்டு இந்துப்பெயரிலேயே, சட்டத்திற்கு புறம்பாக சலுகைகளை அனுபவித்துக்கொண்டிருக்கின்றனர். இந்த கோல்மால் காரணமாக இவர்கள் என்றே கணக்கெடுக்கப்படுகின்றனர். உண்மையில் பார்த்தால், இந்துக்கள் சதவிகிதம் அறியப்பட்டதைவிட குறைவே தங்கள் பேச்சின் முதலிலும், இறுதியிலும் பிற மதத்தினர் தங்கள் குறியீடுகளை சொல்வதைப்போல இந்துக்களும் இனி, ஜெய் ஸ்ரீராம் போன்ற சொற்களை பயன்படுத்துவது தவறல்ல. மற்றவருக்கு இல்லாத கூச்சமும், நடுநிலையும் நமக்கெதற்கு?
Rate this:
Cancel
Vijay - Chennai,இந்தியா
25-செப்-202223:30:23 IST Report Abuse
Vijay இவனுங்க குண்டு வைப்பாங்க, ஹவாலா பரிமாற்றம் செய்வாங்க, லவ் ஜிகாத் செய்வாங்க, சூவில் தங்கம் கடத்துவாங்க ஆனால் யாரும் சோதனை செய்ய கூடாதாம். அப்படி சோதனை செய்தால் பெட்ரோல் குண்டு போடுவாங்க. நல்லா இருக்குடா உங்கள் நியாயம். என்ன செய்வது எவ்வளவு பட்டாலும் ஹிந்துக்களுக்கு சூடு சுரனை வருவதில்லையே. குவாட்டருக்கும் இலவசத்துக்கும் அடிமையாகி திமுகவுக்கு ஓட்டு போட்ட மானம் கெட்ட ஜென்மங்கள்.
Rate this:
Cancel
Sathya -  ( Posted via: Dinamalar Android App )
25-செப்-202221:38:04 IST Report Abuse
Sathya Writing his name itself Sin. When you grow in scandals you will be like this. He is inhuman and Nilgiri people should be punished for voting him.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X