அறக்கட்டளையை மத நிறுவனமாக அறிவித்த அறநிலைய உத்தரவு ரத்து

Updated : செப் 25, 2022 | Added : செப் 25, 2022 | கருத்துகள் (5) | |
Advertisement
சென்னை : அறக்கட்டளையை மத நிறுவனமாக அறிவித்த, அறநிலையத் துறை உதவி கமிஷனரின் உத்தரவை, சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.சென்னை, முகப்பேரில் சந்தான சீனிவாச பெருமாள் கோவில் உள்ளது. இந்தக் கோவிலை, அறக்கட்டளை நிர்வகித்து வந்தது. 2010ல், அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ், இக்கோவில் வந்தது. 2014ல், கோவிலுக்கு நிர்வாக அதிகாரியை, அறநிலையத் துறை உதவி கமிஷனர்
அறக்கட்டளை, மத நிறுவனம், அறிவிப்பு,  அறநிலையத்துறை,  உத்தரவு,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone


சென்னை : அறக்கட்டளையை மத நிறுவனமாக அறிவித்த, அறநிலையத் துறை உதவி கமிஷனரின் உத்தரவை, சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.



சென்னை, முகப்பேரில் சந்தான சீனிவாச பெருமாள் கோவில் உள்ளது. இந்தக் கோவிலை, அறக்கட்டளை நிர்வகித்து வந்தது. 2010ல், அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ், இக்கோவில் வந்தது. 2014ல், கோவிலுக்கு நிர்வாக அதிகாரியை, அறநிலையத் துறை உதவி கமிஷனர் நியமித்தார்.அறக்கட்டளையின் கணக்கு வழக்குகளை சமர்பிக்கும்படி, உதவி கமிஷனர் அனுப்பிய நோட்டீசை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது.


latest tamil news



நோட்டீசுக்கு அளிக்கும் பதிலை பரிசீலித்து, தகுந்த உத்தரவு பிறப்பிக்கும்படி, உதவி கமிஷனருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.இதையடுத்து, சந்தான சீனிவாச பெருமாள் கோவில் அறக்கட்டளையை மத நிறுவனமாக அறிவித்து, தக்காரை நியமித்து, அறநிலையத் துறை உதவி கமிஷனர் 2015ல் உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை எதிர்த்து, அறக்கட்டளையின் அறங்காவலரான வெங்கடேஸ்வரன் என்பவர், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.



'பொது தர்ம அறக்கட்டளையை எடுப்பதற்கு, உதவி கமிஷனருக்கு அதிகாரம் இல்லை' என, மனுவில் கூறப்பட்டது.உதவி கமிஷனர் தாக்கல் செய்த பதில் மனுவில் கூறியுள்ளதாவது:தக்கார் வசம் கோவில் நிர்வாகம் ஒப்படைக்கப்பட்ட பின், அவர் அறிக்கை தாக்கல் செய்தார். அதில், 9 மாதங்களில் கோவிலுக்கு, 1.35 கோடி ரூபாய் வந்துள்ளது. ஆனால், 20 ஆண்டுகளுக்கும் மேலாக கோவில் நிர்வாகத்தை கவனித்த அறக்கட்டளை, 43 ஆயிரம் ரூபாய் மட்டுமே கோவில் வருமானம் எனக்கூறி ஒப்படைத்தது.



கடவுளின் பெயரில் டிபாசிட் செய்யாமல், அறக்கட்டளை பெயரில், கோவில் நிதியை டிபாசிட் செய்தனர். கோவில் நிதியில் முறைகேடு நடந்திருப்பதை பரிசீலித்த பின், மத நிறுவனமாக அறிவிக்கப்பட்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டது.மனுவை விசாரித்த நீதிபதி சதீஷ்குமார் பிறப்பித்த உத்தரவு:ஒரு நிறுவனத்தை, மத நிறுவனமாக அறிவிக்க வேண்டும் என்றால், சட்டத்தில் உள்ள நடைமுறைப்படி தான் மேற்கொள்ள முடியும். அறங்காவலர்களையும், தக்காரையும் நியமிக்கும் அதிகாரம், உதவி கமிஷனருக்கு உள்ளது.



அந்த அதிகாரத்தை செயல்படுத்த வேண்டும் என்றால், அந்த நிறுவனம் மத நிறுவனமாக இருக்க வேண்டும்.எனவே, மத நிறுவனமாக அறிவிக்கப்பட்ட நிறுவனத்தில், உதவி கமிஷனர் தன் அதிகாரத்தை செயல்படுத்தலாம். ஆனால், மத நிறுவனமா என்பதை, அவரால் முடிவு செய்ய முடியாது. அதற்கான அதிகாரம், இணை கமிஷனர் அல்லது துணை கமிஷனருக்கு தான் உள்ளது.நிர்வாக அதிகாரியின் அறிக்கை, நிதி முறைகேடு நடந்திருப்பதை உணர்த்துகிறது. அதனால், அறநிலையத் துறை சட்டப்படி, உரிய விசாரணை நடத்தியிருக்க வேண்டும்;



இந்தப் பிரச்னையில், இணை கமிஷனர் அல்லது துணை கமிஷனர் முடிவு எடுப்பதற்காக, அவர்களுக்கு உதவி கமிஷனர் அனுப்பியிருக்க வேண்டும்.இணை கமிஷனர் அல்லது துணை கமிஷனருக்கான அதிகாரத்தை, உதவி கமிஷனர் எடுத்திருக்கக் கூடாது. எனவே, அவரது உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.இந்த அறக்கட்டளை, மத நிறுவனமா, இல்லையா என்பது குறித்து, சட்டப்படி இணை கமிஷனர் முடிவெடுக்க வேண்டும். சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி, உரிய நடைமுறையை பின்பற்றி, நான்கு மாதங்களில் முடிவெடுக்க வேண்டும்.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nellai tamilan - Tirunelveli,இந்தியா
25-செப்-202211:55:03 IST Report Abuse
Nellai tamilan அறநிலையத் துறை எப்போது ஒழிந்து போகும் என்று தெரியவில்லை
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
25-செப்-202211:41:22 IST Report Abuse
Bhaskaran ..காசு கிடைத்தால் கூட விட மாட்டார்கள் போலிருக்கு
Rate this:
Cancel
raja - Cotonou,பெனின்
25-செப்-202211:08:01 IST Report Abuse
raja கேடுகெட்ட துக்ளக் ஆட்சியில் இந்த மாதிரி கோமாளித்தனம் நிறைய இருக்கும்......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X