3 குழந்தைகளின் தாயை கடத்தி மதமாற்றம்!

Added : செப் 25, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
கராச்சி : பாகிஸ்தானின் ஹிந்து மதத்தை சேர்ந்த மூன்று குழந்தைகளின் தாயான ஒரு பெண் மற்றும் இரண்டு சிறுமியர் கடத்தப்பட்டு, கட்டாயமாக முஸ்லிம் மதத்துக்கு மாற்றப்பட்டனர். பின், முஸ்லிம் மதத்தை சேர்ந்தவருக்கு கட்டாய திருமணமும் செய்து வைக்கப்பட்டனர்.நம் அண்டை நாடான பாகிஸ்தானின் சிந்து மாகாணம் நசர்பூரில் வசிக்கும் மீனா மேக்வர்,14, என்ற சிறுமி சமீபத்தில் கடத்திச்
3 குழந்தைகளின் தாயை கடத்தி மதமாற்றம்!


கராச்சி : பாகிஸ்தானின் ஹிந்து மதத்தை சேர்ந்த மூன்று குழந்தைகளின் தாயான ஒரு பெண் மற்றும் இரண்டு சிறுமியர் கடத்தப்பட்டு, கட்டாயமாக முஸ்லிம் மதத்துக்கு மாற்றப்பட்டனர். பின், முஸ்லிம் மதத்தை சேர்ந்தவருக்கு கட்டாய திருமணமும் செய்து வைக்கப்பட்டனர்.

நம் அண்டை நாடான பாகிஸ்தானின் சிந்து மாகாணம் நசர்பூரில் வசிக்கும் மீனா மேக்வர்,14, என்ற சிறுமி சமீபத்தில் கடத்திச் செல்லப்பட்டு, முஸ்லிம் மதத்துக்கு மாற்றப்பட்டார். பின், முஸ்லிம் இளைஞருக்கு கட்டாய திருமணமும் செய்து வைக்கப்பட்டார்.



இதேபோல், மிர்புர்காஸ் நகர மார்க்கெட்டுக்கு சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த மற்றொரு ஹிந்து சிறுமியும் கடத்தப்பட்டு கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டு முஸ்லிம் இளைஞருக்கு கட்டாய திருமணம் செய்து வைக்கப்பட்டார்.இந்நிலையில், அதே நகரில் வசித்த மூன்று குழந்தைகளின் தாயான ஹிந்து மதத்தைச் சேர்ந்த பெண்ணை கடத்திச் சென்று கட்டாயப்படுத்தி முஸ்லிம் மதத்துக்கு மாற்றியுள்ளனர்.



பின், முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த ஒருவருக்கு திருமணமும் செய்து வைத்துள்ளனர். இதுகுறித்து, அந்தப் பெண்ணின் கணவர் கொடுத்த புகாரை போலீசார் வாங்க மறுத்து விட்டனர்.பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில்தான் ஹிந்துக்கள அதிக அளவில் வசிக்கின்றனர். அதேபோல் கட்டாய மதமாற்றம் மற்றும் திருமணமும் இங்குதான் அதிகமாக நடக்கிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
25-செப்-202213:25:37 IST Report Abuse
N SASIKUMAR YADHAV என்னவோ பெரிய உத்தமன் மாதிரி ஐநா சபையில் ஊளையிட்டான் பாகிஸுதான் அதிபரு. முதலில் அவனோட நாட்டை பார்க்காமல் அண்டை நாட்டில் மோப்பம் பிடிக்கிறான். பண்டமாற்று முறைபோல பாகிஸ்தானில் இருக்கும் இந்துக்களை நாம் அழைத்து கொண்டு இங்கு சொகுசாக வாழ்ந்துக்கொண்டிக்கும் பாகிஸ்தான் ஆதரவாளர்களை அங்கே அனுப்பிவிடலாம்
Rate this:
Cancel
HONDA -  ( Posted via: Dinamalar Android App )
25-செப்-202210:56:34 IST Report Abuse
HONDA பாகிஸ்தானை உலகமே ஒதுக்காதா
Rate this:
Cancel
VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா
25-செப்-202208:03:39 IST Report Abuse
VENKATASUBRAMANIAN இங்கேயே போலீசார் புகார் வாங்க மறுக்கிறார்கள்.பாகிஸ்தானில் நடப்பதில் ஆச்சரியம் இல்லை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X