புதுடில்லி : டில்லி உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் நாச வேலையில் ஈடுபட சதித் திட்டம் தீட்டியதாக, மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து, என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு முகமையின் செய்தி தொடர்பாளர் நேற்று தெரிவித்ததாவது:டில்லியைச் சேர்ந்த நீரஜ் செராவத், ஹரியானாவைச் சேர்ந்த நரேஷ் சவுத்திரி மற்றும் பஞ்சாபைச் சேர்ந்த பூபிந்தர் சிங் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள், கொலை, பணம் பறிப்பு, பயங்கரவாதச் செயல்களில் மக்களை ஈடுபடுத்துவது உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்தனர். மேலும், இதற்காக, போதை மருந்து மற்றும் ஆயுதக் கடத்தலில் ஈடுபட்டு, பணம் திரட்டினர்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.