சிலை கடத்தல் வழக்கு: உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

Updated : செப் 25, 2022 | Added : செப் 25, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
மதுரை : சிலை கடத்தல் வழக்கில் கும்பகோணம் நீதிமன்றத்தில் சாட்சிகளிடம் மறு விசாரணை கோரி சர்வதேச சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் சந்திர கபூர் தொடர்ந்த வழக்கில் அவரது தரப்பு வழக்கறிஞர் ஆஜராகாவிடில் தள்ளுபடி செய்யப்படும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை எச்சரித்தது.அமெரிக்கா நியூயார்க்கில் கலைக்கூடம் நடத்தியவர் சுபாஷ் சந்திர கபூர். இந்தியாவிலிருந்து பல நாடுகளுக்கு சிலைகளை
சிலை கடத்தல் வழக்கு: உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

மதுரை : சிலை கடத்தல் வழக்கில் கும்பகோணம் நீதிமன்றத்தில் சாட்சிகளிடம் மறு விசாரணை கோரி சர்வதேச சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் சந்திர கபூர் தொடர்ந்த வழக்கில் அவரது தரப்பு வழக்கறிஞர் ஆஜராகாவிடில் தள்ளுபடி செய்யப்படும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை எச்சரித்தது.

அமெரிக்கா நியூயார்க்கில் கலைக்கூடம் நடத்தியவர் சுபாஷ் சந்திர கபூர். இந்தியாவிலிருந்து பல நாடுகளுக்கு சிலைகளை கடத்தியதாக கைது செய்யப்பட்டார். இவருக்கு எதிராக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் தொடர்ந்த வழக்கு கும்பகோணம் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அங்கு சாட்சிகளிடம் மீண்டும் குறுக்கு விசாரணை செய்ய உத்தரவிடக்கோரி சுபாஷ் சந்திர கபூர் மனு செய்தார். அந்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து அவர் உயர்நீதிமன்றத்தில் மனு செய்தார்.நீதிபதி சதி குமார் சுகுமார குருப்: மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் விசாரணையை ஒத்திவைக்குமாறு கோரினார்.



அரசுத் தரப்பு வழக்கறிஞர்,' இவ்வழக்கு 2008 ல் பதிவு செய்யப்பட்டது. 2017 ல் இறுதி அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் கையாண்ட தந்திரத்தால் வழக்கு தற்போதுவரை நிலுவையில் உள்ளது,' என்றார்.விசாரணை முடிந்து 5 ஆண்டுகளுக்குப் பிறகு அரசுத் தரப்பு சாட்சிகளிடம் மறு விசாரணை நடத்த உத்தரவிடுமாறு கோருவது வழக்கை இழுத்தடிக்கும் தந்திரம் அன்றி வேறில்லை எனக்கூறி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் தாக்கல் செய்த மனுவை கும்பகோணம் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அது ஏற்புடையதே. மனுதாரர் மனுவும் தள்ளுபடியானதால் இந்நீதிமன்றத்தை நாடியுள்ளார்.



அரசு வழக்கறிஞரின் கவனத்திற்கு கொண்டுவராமல் மனுதாரர் தரப்பில் வழக்கை ஒத்திவைக்குமாறு கோரப்பட்டது. செப்.,27 ல் மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ஆஜராக வேண்டும். தவறினால் இவ்வழக்கில் தகுந்த முடிவுக்கு வரும்படி கும்பகோணம் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டு தள்ளுபடி செய்யப்படும் என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
25-செப்-202213:37:43 IST Report Abuse
அசோக்ராஜ் அடுத்து சுப்ரீம் பஞ்சாயத்தில் மேல் முறையீடு செய்யப்படும்.மூன்று வருடம் கழித்து கேஸ் நீதிபதி முன்பு வரும்போது குற்றப்பத்திரிகை சரியாகப் புரியவில்லை. தமிழில் மொழி பெயர்த்து தர வேண்டும். அது வரை இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்று கோரப்படும். நீதி கிடைக்கும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X