திருப்பூரில் கஞ்சா விற்பனை 'கனஜோர்': 'கணக்கு' காட்ட மட்டுமே வழக்குப்பதிவு

Added : செப் 25, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
திருப்பூர்: திருப்பூர் மாநகர பகுதியில் கஞ்சா, குட்கா விற்பனை விவகாரத்தில், போலீசார் கண்துடைப்புக்கு கைது நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.தமிழகத்தில் டி.ஜி.பி., சைலேந்திரபாபு உத்தரவின் பேரில், 'ஆபரேஷன் கஞ்சா' வேட்டை துவக்கப்பட்டது. மாநகரம், மாவட்டம் வாரியாக தனிப்படை போலீசார் அமைத்து தேடி வருகின்றனர். சிறையில் இருந்து வெளியே வந்த பழைய குற்றவாளிகள், அண்டை
திருப்பூர், கஞ்சா விற்பனை, கனஜோர்,  கணக்கு, வழக்குப்பதிவு, சுணக்கம், போலீசார்

திருப்பூர்: திருப்பூர் மாநகர பகுதியில் கஞ்சா, குட்கா விற்பனை விவகாரத்தில், போலீசார் கண்துடைப்புக்கு கைது நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.தமிழகத்தில் டி.ஜி.பி., சைலேந்திரபாபு உத்தரவின் பேரில், 'ஆபரேஷன் கஞ்சா' வேட்டை துவக்கப்பட்டது. மாநகரம், மாவட்டம் வாரியாக தனிப்படை போலீசார் அமைத்து தேடி வருகின்றனர். சிறையில் இருந்து வெளியே வந்த பழைய குற்றவாளிகள், அண்டை மாநிலங்களில் இருந்து கஞ்சாவை கடத்தி வரும் கும்பலை கைது செய்கின்றனர்.


'கண்ணாமூச்சி'

அவ்வகையில், திருப்பூர் மாநகர போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கஞ்சா, குட்கா உள்ளிட்டவை குறித்து போலீசார் ஆய்வு செய்கின்றனர். டி.ஜி.பி., உத்தரவுக்கு பின்னரும், இன்னும் பெரியளவில் மாநகர போலீசார் பிடிக்கவில்லை. அவ்வப்போது, பெயருக்கு கஞ்சா வழக்கு பதிவு செய்து வருகின்றனர்.இதன் பின்னணியில் இருக்கும் நபர்கள், எங்கிருந்து 'சப்ளை' உள்ளிட்ட முழுமையாக போலீசார் விசாரணை செய்வதில்லை. பெரும்பாலும், வெளி மாவட்டம், மாநிலங்களில் இருந்து கஞ்சா, குட்கா கொண்டு வரப்பட்டு பல இடங்களில் விற்கப்படுகிறது. ஸ்டேஷன் வாரியாக போலீசார் சிலர், இதையெல்லாம் அறிந்தும், உயரதிகாரிகளிடம் கணக்கு காட்டவே வழக்குப்பதிவு செய்கின்றனர்.சமீப காலமாக கைது செய்யப்படும் நபர்கள், ஏற்கனவே கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து வெளியே வந்த நபர்களை, மீண்டும் கணக்கு காட்ட கைது செய்கின்றனர். இதனால், 'திமிலங்கள்' எழுதி தப்பி விடுகின்றன.


கமிஷனர் எச்சரிக்கை

திருப்பூர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சமீபத்தில் நடந்த கூட்டத்தில், கமிஷனர் பிரபாகரன் பேசிய போது, ''நகரில் கஞ்சா, குட்கா, லாட்டரி, மது விற்பனை போன்றவை இருக்க கூடாது. கமிஷனரின் தனிப்படை போலீஸ், கண்டறிந்து பிடித்தால், அந்த போலீஸ் எல்லைக்கு உட்பட்ட ரோந்து போலீசார், ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர், பொறுப்பு போலீசார் என, அனைவரின் மீது, 'சஸ்பெண்ட்' நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்று எச்சரித்தார்.உயரதிகாரியின் உத்தரவு காரணமாக, ஸ்டேஷன் போலீசார் தற்போது, கண்துடைப்புக்கு பெயருக்கு கைது நடவடிக்கை எடுப்பது வெட்ட வெளிச்சமாக தெரிகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
25-செப்-202210:57:21 IST Report Abuse
NicoleThomson வடமாவட்டத்தில் இருந்து அதிகம் வந்து புழங்குவோர் இருக்கும் இடங்களில் இந்த நடவடிக்கை இருக்கட்டும் , பாகிஸ்தானிய ஆதரவினரும் இதனை அதிகம் பயன்படுத்துவதாக தோன்றுகிறது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X