கடத்தல் வழக்கில் ஆயுள் ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு

Updated : செப் 25, 2022 | Added : செப் 25, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
மதுரை : துாத்துக்குடியில் பணம் பறிக்கும் நோக்கில் ஒரு சிறுவனை கடத்தியதாக பதிவான வழக்கில் 6 பேருக்கு எதிரான குற்றச்சாட்டை அரசுத் தரப்பு நிரூபிக்கத் தவறியதால், அவர்களுக்கு கீழமை நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனையை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ரத்து செய்தது. சம்பந்தப்பட்ட விசாரணை அதிகாரியிடம் எதிர்காலத்தில் எந்த ஒரு கிரிமினல் வழக்கு விசாரணையையும் ஒப்படைக்காமல்
கடத்தல் வழக்கில் ஆயுள் ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை : துாத்துக்குடியில் பணம் பறிக்கும் நோக்கில் ஒரு சிறுவனை கடத்தியதாக பதிவான வழக்கில் 6 பேருக்கு எதிரான குற்றச்சாட்டை அரசுத் தரப்பு நிரூபிக்கத் தவறியதால், அவர்களுக்கு கீழமை நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனையை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ரத்து செய்தது. சம்பந்தப்பட்ட விசாரணை அதிகாரியிடம் எதிர்காலத்தில் எந்த ஒரு கிரிமினல் வழக்கு விசாரணையையும் ஒப்படைக்காமல் இருப்பது நல்லது. அவரது விசாரணையில் நடந்த குறைபாடுகள் குறித்து உயரதிகாரிகள் விசாரிக்க வேண்டும் என உத்தரவிட்டது.

துாத்துக்குடியில் 2011 ல் 4 வயது சிறுவனை ரூ.5 கோடி கேட்டு கடத்தியதாக பாலகருப்பசாமி, மாரியப்பன், மகேஷ், லட்சுமி காந்தன், ஜெகநாதன், முருகேஷ் மீது துாத்துக்குடி தெற்கு போலீசார் வழக்குப் பதிந்தனர். பாலகருப்பசாமி உட்பட 6 பேருக்கும் துாத்துக்குடி நீதிமன்றம் 2019 ல் ஆயுள் தண்டனை விதித்தது. இதை எதிர்த்து 6 பேரும் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.நீதிபதிகள் ஜெ.நிஷாபானு, என்.ஆனந்த் வெங்கடேஷ் அமர்வு: மனுதாரர்கள் கைதானபின் அவர்களின் கைரேகைளை கைரேகை நிபுணர் பதிவு செய்துள்ளார். இதுபோன்ற சூழலில் மாஜிஸ்திரேட் முன்னிலையில் கைரேகையை பதிவு செய்வது நம்பத் தகுந்ததாக இருக்கும். அவ்வாறு செய்யவில்லை. அவரிடமிருந்து உத்தரவும் பெறவில்லை. கைதானவர்களின் அலைபேசி அழைப்பு விபரங்களை சம்பந்தப்பட்ட சேவை நிறுவனத்திடம் விசாரணை அதிகாரி சேகரிக்கவில்லை. அலைபேசிகளை நிபுணர்களின் ஆய்விற்கு அனுப்பவில்லை.மாஜிஸ்திரேட் முன்னிலையில் சிறுவன் ஆஜர்படுத்தப்பட்டார். மாஜிஸ்திரேட்டின் பல கேள்விகளை புரிந்து கொண்டு, அதற்கு பதிலளிக்கும் திறன் சிறுவனுக்கு இல்லை. பல கேள்விகளுக்கு பெற்றோர் அல்லது போலீசார் மூலமே தெளிவுபடுத்தி பதில் அளித்துள்ளார்.எந்தக் கோணத்தில் பார்த்தாலும் மனுதாரர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு நிரூபிக்க அரசுத் தரப்பு தவறிவிட்டது. விசாரணையில் குளறுபடி நடந்துள்ளது.



மனுதாரர்கள் அனைத்து குற்றச்சாட்டுக்களிலிருந்தும் விடுவிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு கீழமை நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனை ரத்து செய்யப்படுகிறது.சம்பந்தப்பட்ட விசாரணை அதிகாரியிடம் எதிர்காலத்தில் எந்த ஒரு கிரிமினல் வழக்கு விசாரணையையும் ஒப்படைக்காமல் இருப்பது நல்லது. அவரது விசாரணையில் நடந்த குறைபாடுகள் குறித்து உயரதிகாரிகள் விசாரிக்க வேண்டும் என்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
25-செப்-202209:33:30 IST Report Abuse
Natarajan Ramanathan எல்லாம் சரி. தவறான வாதங்களை கேட்டு ஆறு பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்த கீழமை நீதிபதிக்கு என்ன தண்டனை?? அவரைஅட்லீஸ்ட் பணிநீக்கம் செய்யலாமே
Rate this:
Cancel
Sankar Ramu - Carmel,யூ.எஸ்.ஏ
25-செப்-202208:35:08 IST Report Abuse
Sankar Ramu அட பாவிங்களா. இதை ஏன் கோர்ட்டே எடுத்து நடத்த கூடாது. போலிஸ் காசுக்காக பண்ணதும் கோர்ட் அவர்களை விடுதலை செய்ததும் ஒன்றே
Rate this:
Cancel
a natanasabapathy - vadalur,இந்தியா
25-செப்-202208:34:38 IST Report Abuse
a natanasabapathy அருமையான தீர்ப்பு குற்றவாளிகளின் மனம் மகிழ்ந்து இருக்கும். மீண்டும் வேறு ஒரு அதிகாரி மூலம் மறு விசாரணை க்கு உத்திரவு பிறப்பித்து இருக்கலாம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X