கடலில் மூழ்குமா சென்னை?

Updated : செப் 25, 2022 | Added : செப் 25, 2022 | கருத்துகள் (30) | |
Advertisement
கடல் மட்ட உயர்வு காரணமாக, 2100க்குள் சென்னையின், 16 சதவீத நில பரப்புகள் நீரில் மூழ்கும் அபாயம் இருப்பதாக மாநகராட்சியின் கால நிலை மாற்ற செயல்திட்ட வரைவு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அடுத்த ஐந்தாண்டுகளில் கடல் மட்டம், 7 செ.மீ., அளவுக்கு உயரும், இதனால், 100 மீட்டர் கடலோர பகுதிகள் மூழ்கும் வாய்ப்புகள் உள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் பயன்பாட்டில்
கடல், சென்னை, பருவநிலை மாற்றம், பாதிப்பு, வழி, மூழ்குமா

கடல் மட்ட உயர்வு காரணமாக, 2100க்குள் சென்னையின், 16 சதவீத நில பரப்புகள் நீரில் மூழ்கும் அபாயம் இருப்பதாக மாநகராட்சியின் கால நிலை மாற்ற செயல்திட்ட வரைவு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அடுத்த ஐந்தாண்டுகளில் கடல் மட்டம், 7 செ.மீ., அளவுக்கு உயரும், இதனால், 100 மீட்டர் கடலோர பகுதிகள் மூழ்கும் வாய்ப்புகள் உள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் பயன்பாட்டில் கூடுதல் கவனம் செலுத்தினால் மட்டுமே இந்த பாதிப்பை தடுக்க முடியும் என, வல்லுனர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


latest tamil news


புவி வெப்பமாதலை குறைக்கும் நோக்கில், 2015ல் எட்டப்பட்ட பாரீஸ் உடன்படிக்கை அடிப்படையில் உலக அளவில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இந்தியாவில் கால நிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ள, எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.இதன் அடிப்படையில், சென்னையில் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள ஏற்ற நடவடிக்கைகளுக்கான செயல்திட்டம் தயாரிக்கும் பணியில் மாநகராட்சி ஈடுபட்டுள்ளது. இதற்காக 'சி40 கூட்டமைப்பு' என்ற தன்னார்வ அமைப்புடன் இணைந்து, காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு, அந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.


latest tamil news


Advertisement16 சதவீத நில பரப்பு மூழ்கும்

மாநகராட்சியில் கால நிலை மாற்ற செயல்திட்ட வரைவு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:கடந்த, 2018 - 19 நிலவரப்படி, சென்னையின் கரியமில வாயு வெளியீடு, 1,430 கோடி கிலோவாக உள்ளது. இது அதிகரிக்கும் நிலையில், புயல், வெள்ளம், வெப்பம் அதிகரிப்பால் தண்ணீர் தட்டுப்பாடு, கடல் மட்டம் உயர்வு போன்ற பாதிப்புகள் ஏற்படும்.இதன் காரணமாக, 2100ம் ஆண்டில் சென்னை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட, 426 சதுர கி.மீ., பரப்பில் 16 சதவீதமான, 67 சதுர கி.மீ., பரப்பளவு மூழ்கும் நிலை ஏற்படும். இதனால், சென்னையில், 10 லட்சம் பேர் பாதிக்கப்படுவர். இதில், 2.6 லட்சம் அளவுக்கு குடிசை பகுதி மக்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.அடுத்த, ஐந்தாண்டுகளில் கடல்மட்டம், 7 செ.மீ., அளவுக்கு உயரும், இதனால், 100 மீட்டர் கடலோர பகுதிகள் மூழ்கும் வாய்ப்புகள் உள்ளன.இந்த பாதிப்புகளை சமாளிக்க, 100 சதவீத புதுப்பிக்கத்தக்க மின்சார பயன்பாடு அதிகரிக்க வேண்டும். அனல்மின் நிலையங்களுக்கு மாற்றாக, புதுப்பிக்கத் தக்க எரிசக்தி உற்பத்தி, வீடுகளில் சோலார் மின் சக்தி பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும். குறைந்த மின்சாரத்தை பயன்படுத்தும் கட்டமைப்புகளை செயல்படுத்த வேண்டும்.பெட்ரோல், டீசல் பயன்பாடற்ற பொது போக்குவரத்தை ஊக்குவிக்கும் வகையில், பொது போக்குவரத்து, நடைபயணம், சைக்கிள் போக்குவரத்து பயன்பாட்டை, 80 சதவீதம் உயர்த்த வேண்டும். மாநகரில் சேகரமாகும் திட கழிவுகளை 100 சதவீதம் தரம் பிரித்து அளித்தல், கழிவுகள் மறு சுழற்சி செய்யும் வசதிகளை அதிகரித்தல், வெள்ள தடுப்புக்கு ஏற்ற வகையில் மழைநீர் வடிகால் கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


latest tamil news

கடல் மட்டம் உயர்வது எப்படி?

அண்ணா பல்கலை புவியியல் துறை பேராசிரியர் எல். இளங்கோ கூறியதாவது:கடல் மட்ட உயர்வு என்பது திடீரென இன்று புதிதாக உருவாகும் நிகழ்வு அல்ல. இயற்கையில் இயல்பு நிலையில் சென்னையில் கடல் மட்டம் ஆண்டுக்கு, 2 மி.மீ., வரை உயர்கிறது. இந்த அடிப்படையில் ஓராண்டுக்கு, இரண்டு ஆண்டுக்கு, மூன்றாண்டுக்கு என்று, 50 முதல் 100 ஆண்டுகளுக்கான மதிப்பீடுகள் கணிக்கப்படுகின்றன.கடலின் புவியியல் தன்மை அடிப்படையில், கடல் மட்டம் ஒவ்வொரு வினாடியும் உயர்கிறது. கடல் மட்டத்தில் ஏற்படும் உயர்வு என்பது, அதனுடன் இணைந்த பகிங்ஹாம் கால்வாய், கூவம், அடையாறு ஆகிய நீர் வழித்தடங்களில், 3 கி.மீ., தொலைவு வரை எதிரொலிக்கும். இந்த பகுதிகளில் இதன் தாக்கத்தை எப்படி சமாளிப்பது என்பதற்கான வழிமுறைகளை கண்டுபிடிக்க வேண்டும்.நிலத்துக்கு மேல் பகுதியில் மட்டுமல்லாது, நிலத்துக்கு அடியிலும் இதன் பாதிப்புகள் இருக்கும் என்பதை மக்கள் உணர வேண்டும். சென்னையில், பகிங்ஹாம் கால்வாயில் இருந்து கடற்கரை வரையிலான பகுதிகளில் மேல் மட்ட நிலத்தடி நீர் அதிகமாக உறிஞ்சப்பட்டால், கடல் நீரின் தாக்கம் வெகுவாக அதிகரிக்கும். அதிதீவிர மழையின் காரணமாக நிலத்தில் இறங்கும் நன்னீர் அளவு அதிகரிக்கும் போது, கடல் நீர் ஊடுருவல் தடுக்கப்படும்.சூழலியலை பாதிக்காத வகையில் வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்துவதன் வாயிலாக இது போன்ற பாதிப்புகளை கடந்து செல்ல முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.சென்னை காலநிலை மாற்றம் தொடர்பான அறிக்கை https://chennaicorporation.gov.in/gcc/pdf/CCAP_GCC_CSCL_Website.pdf என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் வகையிலான வீடுகள், காலநிலை மாற்றத்தால் சுகாதாரத்தில் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பாக நாளைக்குள், chennaiclimateactionplan@gmail.com என்ற மின்னஞ்சலில் தங்களது கருத்துகளை தெரிவிக்கலாம்.
latest tamil news


மெரினா கட்டுமானங்களில் அரசின் நிலைப்பாடு?

கடல் மட்ட உயர்வு, கடலோர மணல் படிவு அதிகரிப்பு போன்ற பாதிப்புகள் அதிகமாக உள்ள மெரினாவில் புதிய கட்டுமானங்களில் அரசே கவனம் செலுத்துவது குறித்து, சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். இது குறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறியதாவது:சென்னையில் கடல் மட்ட உயர்வு குறித்த அபாயத்தை விளக்கும் வகையில் செயல் திட்ட அறிக்கையை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. தமிழக அரசும் கால நிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ளும் செயல் திட்ட பணிகளை முடுக்கி விட்டுள்ளது.அதே நேரம் இதற்கு எதிர் திசையில் செல்வது போல தமிழக அரசின் சில செயல்பாடுகள் அமைந்துள்ளன. குறிப்பாக, சென்னை மெரினா கடற்கரை பகுதியில் மணல் படிவது வெகுவாக அதிகரித்து வருவதாக மத்திய அரசின் தேசிய கடலோர பாதுகாப்பு ஆய்வு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.கடல் மட்ட உயர்வு, கடலோர மணல் படிவு அதிகரிப்பு போன்ற பாதிப்புகள் அதிகமாக உள்ள மெரினாவில் கடலில், 137 அடி உயரத்துக்கு முன்னாள் முதல்வர் கருணாநிதிக்காக பேனா நினைவு சின்னம், 80 கோடி ரூபாயில் அமைப்பது சரியா என்ற கேள்வி எழுகிறது.செயல் திட்ட வரைவு அறிக்கையில் குறிப்பிட்டபடி, கடல் மட்டம் உயர்ந்தால், மெரினாவில் என்னென்ன பகுதிகள் மூழ்கும் என்று பார்த்து, அதை தடுக்க வேண்டிய அரசு, பேனா நினைவு சின்னத்துக்காக முழு கவனத்தையும் செலவிடுவது சரியா என்ற கேள்வி எழுகிறது.கடலோர பகுதிகளில் இது போன்ற புதிய திட்டங்களை உருவாக்கும் போது, அரசின் கால நிலை மாற்ற செயல் திட்டம் குறித்து அதிகாரிகள் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். கடலோர பகுதிகளில் புதிய கட்டுமான திட்டங்களை அனுமதிப்பது, மக்கள் நெரிசல் அதிகரிப்பதற்கான வழிமுறைகளை அரசே தவிர்த்தால் தான் மாநகராட்சியின் செயல் திட்டம் முழுமை பெறும்.இவ்வாறு அவர் கூறினர்.latest tamil newslatest tamil newslatest tamil newslatest tamil news


வெப்பத்தடுப்பு வழி என்ன?

துல்லியமற்ற செயல்திட்டம்இது குறித்து ஜி.ஐ.எஸ்., எனப்படும் புவியிட தகவல் அமைப்பு துறை வல்லுனரும், கட்டுமான பொறியாளருமான தயானந்த் கிருஷ்ணன் கூறியதாவது:மக்கள் மின்சாரத்தை பயன்படுத்துவது, பெட்ரோல் உள்ளிட்ட பொருட்களை போக்குவரத்துக்கு பயன்படுத்துவதே காலநிலை மாற்ற பிரச்னைக்கு அடிப்படை காரணமாக குறிப்பிடப்பட்டு உள்ளது. மக்கள் மின்சாரத்தை பயன்படுத்துவதை குறைத்தால் அனல் மின் நிலையங்களால் ஏற்படும் பாதிப்புகள் குறைந்துவிடுமா என்ற கேள்வி எழுகிறது. இதற்கு மாற்றாக, புதுப்பிக்க தக்க எரிசக்தி முறையின் மின்சாரத்தை மக்களே தயாரித்து பயன்பத்திக்கொள்ள வேண்டும் என்ற நோக்கில் இந்த அறிக்கை அமைந்துள்ளது. சோலார் உள்ளிட்ட வசதிகளை பயன்படுத்தும் போது அதற்கான பொருட்கள் தயாரிப்பு, மறுசுழற்சி முறைக்கான வாய்ப்புகளை கருத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகிறது.இதே போன்று, பெட்ரோல் பயன்பாட்டை குறைக்க பொது போக்குவரத்து பயன்பாட்டை அதிகரிக்க வலியுறுத்தப்படுகிறது. இதற்கான துல்லியமான செயல்திட்டம் என்ன, வழிமுறைகள் என்ன என்பது இந்த அறிக்கையில் இன்னும் துல்லியமாக குறிப்பிடப்பட்டு இருக்க வேண்டும். பெட்ரோல் போன்ற பொருட்களுக்கு மாற்று வழி என்ன என்பதில் கூடுதல் தெளிவு தேவைப்படுகிறது.சென்னையில் வெள்ள நீர் வடிகால் வசதிகளை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கில் தான் இந்த அறிக்கையில் தரவுகள் அமைந்துள்ளன. புவி வெப்பமாவதில் தனி நபர் அளவிலான பங்களிப்பு என்ன, அதை குறைப்பதில் தனி நபர் அளவில் என்ன செய்ய வேண்டும் என்ற அளவுக்கு இந்த செயல்திட்டம் துல்லியமாக வேண்டும்.அப்போது தான் இதில் குறிப்பிடப்பட்ட இலக்குகளை உரிய முறையில் எட்ட வழி பிறக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.
latest tamil news


வெள்ள அபாயமும் அதிகரிப்பு

பருவநிலை தீவிர தன்மையால், வேளச்சேரி உள்ளிட்ட சில பகுதிகள், 15 நாட்கள் வரை வெள்ளத்தில் மூழ்கி இருக்க வாய்ப்புள்ளதாக, அண்ணா பல்கலையின் கால நிலை மாற்ற மற்றும் பேரிடர் மேலாண்மை மைய பேராசிரியர் ஆ.ராமச்சந்திரன் கூறியள்ளார்.அவர் கூறியதாவது:நகர்ப்புற வளர்ச்சியால் கரியமில வாயு வெளியீடு அதிகரித்து வருகிறது. இதில், அனல் மின் உற்பத்திக்காக நிலக்கரி எரிப்பால், 70 சதவீதமும், பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருட்களை அடிப்படையாக கொண்ட போக்குவரத்து காரணமாக, 30 சதவீதமும் கரியமில வாயுக்கள் வெளியிடப்படுகின்றன.இவ்வாறு புவியின் வெப்பம் அதிகரிப்பால் பனி பாறைகள் உருகும் நிலையில், கடல் மட்டம் படிப்படியாக அதிகரிக்கிறது. ஆனால், சென்னையில் கடல் மட்ட உயர்வால் நேரடியாக பெரிய பாதிப்பு ஏற்பட்டதில்லை. கடல் மட்ட உயர்வை சமாளிக்கும் வகையில் தான் சென்னையின் அமைப்பு உள்ளது.அதே நேரத்தில், கால நிலை மாற்றத்தால் பருவநிலை தீவிரத்தன்மை என்ற புதிய சூழல் உருவாகி உள்ளது. சென்னையில் ஒரு நாளில் அதிகபட்ச மழை பொழிவு, 6 முதல் 9 செ.மீ., வரை இருந்தது. இது தற்போது, 29 முதல் 40 செ.மீ., வரை அதிகரித்துள்ளது.சென்னையில் ஆண்டு மொத்த மழை அளவு 120 செ.மீ., என்று வரையறுக்கப்பட்ட நிலையில், 2015ல் ஒரே நாளில் 41 செ.மீ., அளவுக்கு மழை பெய்தது. ஒரே நாளில் இவ்வளவு அதிகமாக மழை பொழிந்தால், அந்த நீர் வெளியேறுவதற்கான முறையான வடிகால் வசதி இல்லை.எதிர்காலத்தில் இது போன்ற பருவநிலை தீவிர தன்மையால், வேளச்சேரி உள்ளிட்ட சில பகுதிகள், 15 நாட்கள் வரை வெள்ளத்தில் மூழ்கி இருக்க வாய்ப்புள்ளது. வருங்காலங்களில், முன்கூட்டியே கணிக்க முடியாத அளவுக்கு அதிதீவிர மழை, புயல் பாதிப்புகளை எதிர்கொள்ள மக்கள் தயாராக வேண்டிய சூழல் உருவாகி உள்ளது. இதை கருத்தில் வைத்து காலநிலை மாற்றத்துக்கான நமது செயல் திட்டம் இருக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.பருவநிலை தீவிர தன்மையால், வேளச்சேரி உள்ளிட்ட சில பகுதிகள், 15 நாட்கள் வரை வெள்ளத்தில் மூழ்கி இருக்க வாய்ப்புள்ளதாக, அண்ணா பல்கலையின் கால நிலை மாற்ற மற்றும் பேரிடர் மேலாண்மை மைய பேராசிரியர் ஆ.ராமச்சந்திரன் கூறியள்ளார்.அவர் கூறியதாவது:நகர்ப்புற வளர்ச்சியால் கரியமில வாயு வெளியீடு அதிகரித்து வருகிறது. இதில், அனல் மின் உற்பத்திக்காக நிலக்கரி எரிப்பால், 70 சதவீதமும், பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருட்களை அடிப்படையாக கொண்ட போக்குவரத்து காரணமாக, 30 சதவீதமும் கரியமில வாயுக்கள் வெளியிடப்படுகின்றன.இவ்வாறு புவியின் வெப்பம் அதிகரிப்பால் பனி பாறைகள் உருகும் நிலையில், கடல் மட்டம் படிப்படியாக அதிகரிக்கிறது. ஆனால், சென்னையில் கடல் மட்ட உயர்வால் நேரடியாக பெரிய பாதிப்பு ஏற்பட்டதில்லை. கடல் மட்ட உயர்வை சமாளிக்கும் வகையில் தான் சென்னையின் அமைப்பு உள்ளது.அதே நேரத்தில், கால நிலை மாற்றத்தால் பருவநிலை தீவிரத்தன்மை என்ற புதிய சூழல் உருவாகி உள்ளது. சென்னையில் ஒரு நாளில் அதிகபட்ச மழை பொழிவு, 6 முதல் 9 செ.மீ., வரை இருந்தது. இது தற்போது, 29 முதல் 40 செ.மீ., வரை அதிகரித்துள்ளது.சென்னையில் ஆண்டு மொத்த மழை அளவு 120 செ.மீ., என்று வரையறுக்கப்பட்ட நிலையில், 2015ல் ஒரே நாளில் 41 செ.மீ., அளவுக்கு மழை பெய்தது. ஒரே நாளில் இவ்வளவு அதிகமாக மழை பொழிந்தால், அந்த நீர் வெளியேறுவதற்கான முறையான வடிகால் வசதி இல்லை.எதிர்காலத்தில் இது போன்ற பருவநிலை தீவிர தன்மையால், வேளச்சேரி உள்ளிட்ட சில பகுதிகள், 15 நாட்கள் வரை வெள்ளத்தில் மூழ்கி இருக்க வாய்ப்புள்ளது. வருங்காலங்களில், முன்கூட்டியே கணிக்க முடியாத அளவுக்கு அதிதீவிர மழை, புயல் பாதிப்புகளை எதிர்கொள்ள மக்கள் தயாராக வேண்டிய சூழல் உருவாகி உள்ளது. இதை கருத்தில் வைத்து காலநிலை மாற்றத்துக்கான நமது செயல் திட்டம் இருக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.- நமது நிருபர் --

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
25-செப்-202221:49:52 IST Report Abuse
அசோக்ராஜ் அச்சச்சோ. மரீனா இடுகாட்டை போர்க்கால அடிப்படையில் ஓங்கோலுக்கு மாற்ற வேண்டும். அங்கும் ஆபிரகாமிய தெலுங்கு அரசு இருப்பதால் ஒத்துழைப்பு உண்டு. பேனாவை விஜயவாடா கடலில் வைக்க தங்கமுடி பொறுப்பு எடுத்துக் கொள்வார்.
Rate this:
Cancel
THINAKAREN KARAMANI - Vellore,இந்தியா
25-செப்-202221:07:53 IST Report Abuse
THINAKAREN KARAMANI விஞ்ஞானத்தின் அதிவேக வளர்ச்சியில் இந்த 'புவி வெப்ப' மயமாதலை அவ்வளவு ஈஸியாகத் தடுக்க முடியாது. விஞ்ஞான வளர்ச்சியும் புவி வெப்பமயமாதாலும் ஒன்றுக்கு ஒன்றுப் பின்னிப்பிணைந்து. எனவே இயற்கையின் கோபத்தை தடுப்பது மிகவும் கடினமான செயலாகும். இயற்கை இயற்கையாகவே ஒரு அதிசயமான மாறுதலை உண்டாக்கி நம்மையெல்லாம் நல்லபடியாக வாழவைக்க வேண்டும் என்று இறைவனைப் பிரார்த்திப்போம். THINAKAREN KARAMANI, VELLORE, INDIA.
Rate this:
Cancel
PalaniKuppuswamy - sanjose,இந்தியா
25-செப்-202220:07:02 IST Report Abuse
PalaniKuppuswamy ,,,,,
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X