சிறுபான்மையினருக்கு நன்மை செய்யாத தி.மு.க.,: இப்ராஹிம் குற்றச்சாட்டு

Updated : செப் 25, 2022 | Added : செப் 25, 2022 | கருத்துகள் (18) | |
Advertisement
கோவை: ''தி.மு.க., ஆட்சியில், சிறுபான்மையினருக்கு எந்த நலத்திட்ட உதவிகளும் செயல்படுத்தவில்லை,'' என, பா.ஜ., சிறுபான்மையினர் அணி தேசிய செயலாளர் வேலுார் இப்ராஹிம் குற்றம்சாட்டினார்.மத நல்லிணக்க செயல்பாடுகளின் ஒரு பகுதியாக, நேற்று கோவை வந்த வேலுார் இப்ராஹிம், கிறிஸ்தவ பாதிரியார் பிரின்ஸ் தளியத்தை சந்தித்து பேச்சு நடத்தினார். சிறுபான்மையினர் நலன் கருதி, பா.ஜ., அரசு

கோவை: ''தி.மு.க., ஆட்சியில், சிறுபான்மையினருக்கு எந்த நலத்திட்ட உதவிகளும் செயல்படுத்தவில்லை,'' என, பா.ஜ., சிறுபான்மையினர் அணி தேசிய செயலாளர் வேலுார் இப்ராஹிம் குற்றம்சாட்டினார்.மத நல்லிணக்க செயல்பாடுகளின் ஒரு பகுதியாக, நேற்று கோவை வந்த வேலுார் இப்ராஹிம், கிறிஸ்தவ பாதிரியார் பிரின்ஸ் தளியத்தை சந்தித்து பேச்சு நடத்தினார். சிறுபான்மையினர் நலன் கருதி, பா.ஜ., அரசு செயல்படுத்தும் திட்டங்கள் பற்றி விளக்கினார்.



latest tamil news




வேலுார் இப்ராஹிம் கூறியதாவது:
சிறுபான்மை மக்களை பா.ஜ., கட்சியில் இணைக்கும் நோக்கத்துடன், கோவை வந்துள்ளேன். தற்போது 20 பேர் இணைந்துள்ளனர். மேலும் பலர், இம்மாத இறுதியில் நடக்கும் விழாவில், பாதிரியார் பிரின்ஸ் தளியத் முன்னிலையில் கட்சியில் இணைகின்றனர்.தமிழகத்தில் கஞ்சா விற்பனை தொடர்ந்து நடக்கிறது. பாலியல் கொடுமைகள் இந்த ஆட்சியில் அதிகரித்துள்ளன.

தி.மு.க., அரசு சிறுபான்மையினருக்கு எந்த நன்மையும் செய்யவில்லை. ஆனால், மத்திய அரசு ஏராளமான நன்மைகளை செய்துள்ளது. பிரதமர் மோடி, சிறுபான்மையினர் கல்விக்காக மட்டும், 5,126 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார்.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.


latest tamil news





போனில்கொலை மிரட்டல்



'போனில் கொலை மிரட்டல் விடுத்த நபர் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கோரி, பா.ஜ., சிறுபான்மையினர் அணி தேசிய செயலாளர் வேலுார் இப்ராஹிம், கோவை மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தார்.அவரது புகார் விவரம்:

நான் கோவை கணபதியில் இருந்தபோது, என் மொபைல் எண்ணுக்கு 'வாட்ஸ் ஆப்' வாயிலாக, ஆடியோ மெசேஜ் வந்தது. ஆண் குரலில் பதிவு செய்யப்பட்டிருந்த அதில், எனக்கு கொலை மிரட்டல் விடப்பட்டிருந்தது. எனக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் அவர் தெரிவித்துள்ளார்.புகாரை பெற்றுக் கொண்ட கமிஷனர் பாலகிருஷ்ணன், அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vena Suna - Coimbatore,இந்தியா
25-செப்-202223:51:51 IST Report Abuse
Vena Suna இப்ராஹிம் அன்னான் வாழ்க....அடுத்த எம்பீ ஆகா விரைவில் ஆவார்...
Rate this:
Cancel
Duruvesan - Dharmapuri,இந்தியா
25-செப்-202220:30:16 IST Report Abuse
Duruvesan தவறு, கர்த்தரின் சீடர் விடியல் sir ஆட்சியில் ஹிந்துக்கள் மட்டுமே வஞ்சிக்க படுகிறார்கள்
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
25-செப்-202214:00:44 IST Report Abuse
Vena Suna எம்ஜிஆர் கருணாநிதி ஆயுசோடு இருந்திருந்தால் திமுக காலி. பாவிகள் தானே நன்றாக இருக்கிறார்கள் நிறைய நாள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X