மிரட்டும் மினியேச்சர் மனித முகங்கள்

Added : செப் 25, 2022 | |
Advertisement
ஈரோடு பெருந்துறையைச் சேர்ந்த ஆனந்தமாதவன்- அஞ்சு தம்பதியர் தேங்காய் சிரட்டை, இளநீர் மட்டையில் சின்னஞ்சிறு மினியேச்சர் வடிவில் மனித முகங்களை செதுக்கி சித்திரம் போல தருகின்றனர்.நுாலிழை அளவுள்ள வெள்ளி நகை செய்யும் கருவியும் கொஞ்சம் கற்பனையும் கலைநயமும் முதலீடாக கொண்டு வாடிக்கையாளர்களை பிரமிக்க வைக்கின்றனர். கீ செயினில் மனித உருவங்கள், காதணிகளில் சின்னஞ்சிறு மனித
மிரட்டும் மினியேச்சர்  மனித முகங்கள்

ஈரோடு பெருந்துறையைச் சேர்ந்த ஆனந்தமாதவன்- அஞ்சு தம்பதியர் தேங்காய் சிரட்டை, இளநீர் மட்டையில் சின்னஞ்சிறு மினியேச்சர் வடிவில் மனித முகங்களை செதுக்கி சித்திரம் போல தருகின்றனர்.

நுாலிழை அளவுள்ள வெள்ளி நகை செய்யும் கருவியும் கொஞ்சம் கற்பனையும் கலைநயமும் முதலீடாக கொண்டு வாடிக்கையாளர்களை பிரமிக்க வைக்கின்றனர். கீ செயினில் மனித உருவங்கள், காதணிகளில் சின்னஞ்சிறு மனித முகங்கள், நெக்லஸில் கலைபடைப்புகள் நேர்த்தியாக செதுக்கப்பட்டுள்ளன.

''மூன்றாண்டுகளுக்கு முன் விளையாட்டாய் தொடங்கினோம். வாழ்வாதாரமாய் மாறிவிட்டது. தேங்காய் சிரட்டையை தேய்த்து பளபளப்பாக்கினால் கருப்பு நிறமாகும். இளநீர் மட்டையை தேய்த்தால் பளபளப்பான தந்த நிறம் கிடைக்கும். இரண்டு நிறங்களை தவிர வேறெந்த நிறங்களையும் சேர்ப்பதில்லை. கருப்பு, தந்த நிறங்களை மாற்றி மாற்றி சேர்த்து குட்டி குட்டியாக செஸ் காய்களை உருவாக்கிய போது ஒருவாரம் பிடித்தது.

சிறிய, மிக நுணுக்கமான ஒவ்வொரு வேலைப்பாட்டுக்கும் ஒருநாள் ஆகும். எல்லோரும் செய்வது போல என்பதில் இருந்து நாங்கள் தனித்துவமாக செய்வது தான் வாடிக்கையாளர்களை தேடி வரவைக்கிறது.

எங்களின் மாஸ்டர் பீஸ் மனித முகங்களை மினியேச்சர் சித்திரமாக செதுக்குவது தான். தம்பதி போட்டோ, குழந்தைகள் போட்டோக்களை அனுப்பினால் கருப்பு வெள்ளையாக்கி அந்த வடிவத்தை சிரட்டையிலும், இளநீர் மட்டையிலும் செதுக்குவோம். சிரட்டையை அடிப்படையாக கொண்டு மட்டையில் உருவங்கள் செதுக்கும் போது மிக அழகாக மாறிவிடும். இதற்கு பொறுமை தேவை. கொஞ்சம் அசந்தாலும் முகங்களின் அமைப்பு மாறிவிடும். மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிக்க வேண்டும். வரைந்த முகங்களை மரத்தண்டின் மீது வைத்து திருமணநாள், பிறந்தநாள் வாசகங்களையும் செதுக்கி வைக்கும் போது மனம் நிறைவாக இருக்கும் என்றனர்.

தொடர்புக்கு: 77082 63675

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X