பாரம்பரிய பட்டு... தீபாவளிக்கு ஹிட்டு...

Added : செப் 25, 2022 | |
Advertisement
பண்டிகை என்றாலே பெண்களுக்கு பட்டுன்னு ஞாபகத்திற்கு வருவது பளபளக்கும் பட்டுச்சேலைகள் தானே... வழக்கமான பட்டுச்சேலைகளை கட்டினால் எப்படிங்க... இந்த தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் படங்கள் சூப்பர் ஹிட் ஆகுதோ இல்லையோ நாங்கள் மதுரையில் அறிமுகம் செய்யும் பாரம்பரிய பட்டு ஹிட் ஆகப்போகிறது என்கிறார் மதுரையின் பேஷன் டிசைனர் திவ்யலட்சுமி...''மதுரையில் கல்லுாரி முடித்த பின்
பாரம்பரிய பட்டு, தீபாவளி, ஹிட்டு,

பண்டிகை என்றாலே பெண்களுக்கு பட்டுன்னு ஞாபகத்திற்கு வருவது பளபளக்கும் பட்டுச்சேலைகள் தானே... வழக்கமான பட்டுச்சேலைகளை கட்டினால் எப்படிங்க... இந்த தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் படங்கள் சூப்பர் ஹிட் ஆகுதோ இல்லையோ நாங்கள் மதுரையில் அறிமுகம் செய்யும் பாரம்பரிய பட்டு ஹிட் ஆகப்போகிறது என்கிறார் மதுரையின் பேஷன் டிசைனர்

திவ்யலட்சுமி...


''மதுரையில் கல்லுாரி முடித்த பின் கோவையில் பேஷன் டிசைனிங், தையல் தொழில்நுட்ப கலைபடித்தேன். அதற்கு பின் பேஷன் டிசைனராக தொடரலாம் என நினைத்தேன்.

பாரம்பரிய ஆடை வடிவமைப்பாளர்கள், கைவினைக் கலைஞர், ஸ்டார்ட் அப் கார்மென்ட்ஸ் நடத்தும் பெண்களை ஒருங்கிணைத்து கண்காட்சி நடத்தலாம். பேஷன் டிசைனிங் நுணுக்கம் தெரியும் என்பதால் அந்த முயற்சியில் வெற்றி கிடைத்தது.

அந்த வெற்றி பயணத்தில் தான் 'மீனாட்சி பேஷன் பஜார்' பெயரில் தமிழகம் முழுவதும் ஆடை கண்காட்சி நடத்துகிறேன். இதில் மதுரை, கோவை, திருப்பூர் என பல நகரங்களில் உள்ள பாரம்பரிய ஆடை வடிவமைப்பாளர்கள், கைவினைக் கலைஞர்கள் இடம்பெறுகிறார்கள்.

மதுரையில் பெண்கள் வெர்ஸ்டன் ஆடைகள் அணிய தயக்கம் காட்டுவதால் 'இந்தோ வெர்ஸ்டர்ன்' ஆடைகளை பெரியளவில் காட்சிக்கு வைப்போம்.

இந்த தீபாவளிக்காக வரும் வாரம் மதுரையில் நடக்கும் கண்காட்சியில் செட்டிநாடு, கத்வால், போச்சம்பள்ளி, பைத்தானி, கத்தான், பனாரஸ் என புத்தம் புதிய பட்டுச்சேலைகளை அறிமுகம் செய்கிறோம்.

தஞ்சை ஓவியம் வரைந்த பிரின்டட் சேலைகளும், பெண்களுக்கான அழகு சாதனங்கள், டிசைனர் ஜூவல்லரிகளையும் காட்சிப்படுத்துகிறோம்'' என்றார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X