வாய் பேச்சில் வாள் வீசும் இளந்தளிர் முகிலா---

Added : செப் 25, 2022 | |
Advertisement
'நாநல மென்னும் நலனுடைமை அந்நலம்யாநலத்து உள்ளதுாஉம் அன்று'' என்பது குறள். நாவன்மை என்ற சிறப்பை பெற்றிருப்பது ஒரு தனிச்சிறப்பு. அந்த சிறப்பு மற்றெந்த சிறப்பிற்குள்ளும் அடங்காத ஒரு தனி சிறப்பாகும் என தெய்வப்புலவர் திருவள்ளுவர் குறிப்பிட்டுள்ளார். அவரது கூற்று போல திறமை மிக்க பேச்சாளர்கள் அரசியல், பொது வாழ்வு, கலை, இலக்கியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஆதிக்கம்
வாய் பேச்சில் வாள் வீசும்  இளந்தளிர் முகிலா---


'நாநல மென்னும் நலனுடைமை அந்நலம்

யாநலத்து உள்ளதுாஉம் அன்று'' என்பது குறள். நாவன்மை என்ற சிறப்பை பெற்றிருப்பது ஒரு தனிச்சிறப்பு. அந்த சிறப்பு மற்றெந்த சிறப்பிற்குள்ளும் அடங்காத ஒரு தனி சிறப்பாகும் என தெய்வப்புலவர் திருவள்ளுவர் குறிப்பிட்டுள்ளார். அவரது கூற்று போல திறமை மிக்க பேச்சாளர்கள் அரசியல், பொது வாழ்வு, கலை, இலக்கியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஆதிக்கம் செலுத்துகின்றனர்.



அந்த வரிசையில், ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி ஜெ.முகிலாபாண்டி பிரியா 13, தேன் சிந்தும் மழலை பேச்சாற்றலால் கேட்போர் மனதை கவர்ந்து 50க்கும் மேற்பட்ட விருது, பதக்கங்களை அள்ளி குவித்துள்ளார். கலை விழாக்கள், பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்று விவசாயம், தமிழின் பெருமை, பொதுவான விஷயங்களை கம்பீரமாக,தெளிவான தமிழ் நடையில் பேசுகிறார். சிறுவர் முதல் பெரியோர் வரை முகிலாவின் பேச்சிற்கு ரசிகர்கள்.தாயின் கண்ணுக்கு கண்ணாகமூளை காய்ச்சலால் பார்வை இழந்த தாய் அமுத லட்சுமியை கண்ணுக்கு கண்ணாக பராமரித்து வருகிறார். இவரது தந்தை ஜெயகரிகால துரை நாட்டுப்புற கலைஞராக இருந்து தற்போது கூலி வேலை செய்கிறார்.


முகிலா கூறியது:

எனது நான்கு வயதில் பள்ளி தமிழ் ஆசிரியர் மூலம் பேச்சாற்றலை வளர்த்துக்கொண்டேன். அப்போது தான் அம்மா மூளைக்காய்ச்சலால் கண்பார்வையை இழந்தார். தந்தை கிராமிய கலைநிகழ்ச்சிகளில் ஆடிப்பாடி வருமானம் ஈட்டினார்.கொரோனா தாக்கத்தால் கலை நிகழ்ச்சிகள் தடைபட்டதால் தற்போது பெயின்டிங் தொழில் செய்கிறார். அதில் கிடைக்கும் வருமானத்தில் குடும்பத்தை நடத்தி வருகிறார்.நான் கீழக்கரை மஹ்துாமியா மேல்நிலைப்பள்ளியில் 8ம் வகுப்பு படிக்கிறேன்.எதிர்காலத்தில் தனி அடையாளத்துடன் சிறந்த பேச்சாளராகவும், ஐ.ஏ.எஸ்., படித்து மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற லட்சியத்துடன் படிக்கிறேன், என்றார்.


குடும்பத்தின் வறுமையிலும் முகிலா தனது காந்த பேச்சால் அனைவரையும் கவர்ந்து பள்ளிக்கும், ராமநாதபுரம் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்து வருகிறார்.இவரது கல்விச் செலவை ஏற்று, பேச்சாற்றலை ஊக்கப்படுத்த தமிழக அரசும், நல் உள்ளம் படைத்தோரும் உதவ வேண்டும். -தொடர்புக்கு: 96292 67146


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X