புதுச்சேரியில் கடல் அரிப்பால் கரையும் செயற்கை மணல் பரப்பு

Updated : செப் 25, 2022 | Added : செப் 25, 2022 | |
Advertisement
புதுச்சேரி: புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள செயற்கை மணல் பரப்பு கடல் அரிப்பால் கரைந்து வருகிறது.புதுச்சேரியில் கடற்கரை சாலையில் 1.5 கி.மீ., தொலைவிற்கு புரொமெனேட் பீச்' என்றழைக்கப்படும் அழகிய கடற்கரை உள்ளது. கடந்த காலங்களில் இயற்கை மணற்பரப்பால் சூழப்பட்ட இக்கடற் கரையில், சுற்றுலா பயணிகள், பொது மக்கள் மணலில் அமர்ந்து, மகிழ்ச்சியுடன் பொழுதை கழித்தனர். கடல்

புதுச்சேரி: புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள செயற்கை மணல் பரப்பு கடல் அரிப்பால் கரைந்து வருகிறது.

புதுச்சேரியில் கடற்கரை சாலையில் 1.5 கி.மீ., தொலைவிற்கு புரொமெனேட் பீச்' என்றழைக்கப்படும் அழகிய கடற்கரை உள்ளது. கடந்த காலங்களில் இயற்கை மணற்பரப்பால் சூழப்பட்ட இக்கடற் கரையில், சுற்றுலா பயணிகள், பொது மக்கள் மணலில் அமர்ந்து, மகிழ்ச்சியுடன் பொழுதை கழித்தனர். கடல் அரிப்புக்கு, இயற்கை மணல் பரப்பு இரையானது.

அதையடுத்து, கடல் அரிப்பைத் தடுக்க, பழைய துறைமுகம் துவங்கி, வைத்திக்குப்பம் வரை கடற்கரையோரம் முழுவதும் பெரிய அளவிலான கருங்கற்கள் கொட்டப்பட்டதால், மணல் பரப்பை காண்பது அரிதானது.



latest tamil news




சுற்றுலா பயணிகளை கவர்வதற்காக, கடற்கரையில் செயற்கையாக மணல் பரப்பை உருவாக்கும் முயற்சியில் புதுச்சேரி அரசு இறங்கியது. இதன்படி தேங்காய்திட்டு துறைமுகத்தில் இருந்து துார்வாரப்பட்ட மணல், குழாய் மூலம் தலைமை செயலகம் அருகே கொட்டப்பட்டு செயற்கை மணற்பரப்பு உருவாக்கப்பட்டது.

இது வெற்றியடைந்ததை தொடர்ந்து சீகல்ஸ் ஓட்டல் பழைய துறைமுகம் அருகே மற்றொரு செயற்கை மணற்பரப்பு உருவாக்கப்பட்டது. இங்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை செயற்கை மணற்பரப்பில் விளையாடி மகிழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த சில வாரமாக இப்பகுதியில் கடும் கடல் அரிப்பு ஏற்பட்டு, மணற்பரப்பு முழுவதும் கடலில் அடித்து செல்லப்பட்டு பள்ளதாக்கு போன்று காணப்படுகிறது. இது சுற்றுலா பயணிகளை ஏமாற்றமடைய செய்துள்ளது.கடல் அரிப்பு குறைந்ததும், தேங்காய்திட்டு துறைமுகத்தில் துார்வாரப்படும் மணலை கொட்டி, மீண்டும் செயற்கை மணற்பரப்பினை உருவாக்க புதுச்சேரி அரசு திட்டமிட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X