மகாளய அமாவாசை: கோயில்களில் குவிந்த பக்தர்கள்.. புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம்

Updated : செப் 25, 2022 | Added : செப் 25, 2022 | கருத்துகள் (7) | |
Advertisement
மதுரை: மகாளய அமாவாசையொட்டி, கடல், புண்ணிய நதிகள், நீர் நிலைகளில், ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர்.சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலர் மேதகு ராணி டி எஸ் கே மதுராந்தக நாச்சியார் அவர்கள் நிர்வாகத்திற்கு உட்பட்ட மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் புரட்டாசி மாதம் மகாளய அமாவாசை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதற்கு நீண்ட வரிசையில்
மகாளய அமாவாசை, கோயில், பக்தர்கள், புனித நீராடல், முன்னோர்கள், தர்ப்பணம்,

மதுரை: மகாளய அமாவாசையொட்டி, கடல், புண்ணிய நதிகள், நீர் நிலைகளில், ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர்.

சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலர் மேதகு ராணி டி எஸ் கே மதுராந்தக நாச்சியார் அவர்கள் நிர்வாகத்திற்கு உட்பட்ட மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் புரட்டாசி மாதம் மகாளய அமாவாசை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதற்கு நீண்ட வரிசையில் இருந்து தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.



சென்னையில், மெரினா, எலியட்ஸ் கடற்கரை, திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், மாம்பலம், நங்கநல்லூர், திருவான்மியூர், வேளச்சேரி, தாம்பரம் பகுதிகளில் உள்ள நீர் நிலைகளில், ஏராளமானோர் திரண்டு, முன்னோருக்கு தர்ப்பணம் செய்தனர்.


latest tamil news



ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர். புரட்டாசி மகாளய அமாவாசை அன்று திதி பூஜை செய்தால், முன்னோர் ஆன்மா சாந்தியடையும் என்பது நம்பிக்கை. மகாளய அமாவாசையான இன்று (செப்., 25) ராமேஸ்வரம் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்தனர். அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி, திதி, தர்ப்பணம் செய்தனர். கோவிலுக்குள் உள்ள, 22 தீர்த்தங்களில் நீராடினர்.



கன்னியாகுமரியில் அதிகாலை முதல், பக்தர்கள் குவியத் துவங்கினர். அவர்கள் முக்கடல் சங்கமிக்கும் சங்கிலித்துறை கடற்கரையில், புனித நீராடினர். பின், கடற்கரையில், முன்னோருக்கு தர்ப்பணம் கொடுத்து, வழிபட்டனர். காலை முதலே, பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து, நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.



தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் மகாளய அமாவாசையையொட்டி, காவேரி புஷ்ப மண்டப படித்துறையில், ஏராளமானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தும், ஆற்றில் புனித நீராடியும் வழிபட்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankaseshan - mumbai,இந்தியா
25-செப்-202222:47:12 IST Report Abuse
sankaseshan மக்களுக்கு முன்னோரைப்பற்றிய நினைவு அவர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை மறக்காமல் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது
Rate this:
Cancel
sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
25-செப்-202213:37:17 IST Report Abuse
sankaranarayanan எ.ராசாவே நீலகிரியில் ரகசியமாக ஒரு அருவியில் அவருடைய மூதாதையர்களுக்கு பிண்டம் கொடையூத்தாக கேள்வி.
Rate this:
Cancel
Fastrack - Redmond,இந்தியா
25-செப்-202212:44:14 IST Report Abuse
Fastrack மெரினாவில் பிண்டம் கொடுத்தாங்களோ
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X