ராஜாவுக்கு ஒரு நியாயம்; செங்கோட்டையனுக்கு ஒரு நியாயமா...?

Updated : செப் 25, 2022 | Added : செப் 25, 2022 | கருத்துகள் (8) | |
Advertisement
இந்திய கம்யூ., கட்சி மாநில செயலர் முத்தரசன் பேட்டி: ஹிந்துக்கள் குறித்து ராஜா கூறியது, அவருடைய சொந்த கருத்து அல்ல. பல்வேறு புத்தகங்களில், இது குறித்து எழுதியிருப்பதை தான் அவர் பேசினார். அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஜாதி அரசியல் பேசி இருந்தால், தேர்தல் ஆணையம் அவருடைய, எம்.எல்.ஏ., பதவியை பறிக்க வேண்டும்.ராஜாவுக்கு ஒரு நியாயம்; செங்கோட்டையனுக்கு ஒரு
முத்தரசன், அழகிரி, அன்புமணி, அன்பழகன்


இந்திய கம்யூ., கட்சி மாநில செயலர் முத்தரசன் பேட்டி:

ஹிந்துக்கள் குறித்து ராஜா கூறியது, அவருடைய சொந்த கருத்து அல்ல. பல்வேறு புத்தகங்களில், இது குறித்து எழுதியிருப்பதை தான் அவர் பேசினார். அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஜாதி அரசியல் பேசி இருந்தால், தேர்தல் ஆணையம் அவருடைய, எம்.எல்.ஏ., பதவியை பறிக்க வேண்டும்.

ராஜாவுக்கு ஒரு நியாயம்; செங்கோட்டையனுக்கு ஒரு நியாயமா...? சந்தர்ப்பவாத அரசியலுக்கு சாட்சாத் உதாரணம் நீங்க தான்!
தமிழக பா.ஜ., துணை தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை:

'பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா அமைப்பு மீதான ஒடுக்குமுறை, முஸ்லிம்களுக்கு மட்டுமின்றி, அனைத்து தரப்பு ஜனநாயக சக்திகளுக்கும் எதிரான நடவடிக்கை. சிறுபான்மை யின வெறுப்பு அரசியலை, சனாதன சங்பரிவார் அரசு கைவிட வேண்டும்' என, திருமாவளவன் தெரிவித்து உள்ளார். ஜனநாயக நடவடிக்கைகளுக்கு எதிரான, அடிப்படை வாத, பயங்கரவாத தீய சக்திகளுக்கு ஆதரவான நிலைப்பாடே இது. இவ்வாறான பெரும்பான்மை வெறுப்பு அரசியலை, போலி மதச்சார்பின்மை பேசும், ஜாதிய கட்சிகள் நிறுத்த வேண்டும்.

அவங்க பொழப்பே அதுல தானே ஓடுது... அடிமடியிலயே கைவைக்கிறீங்களே!
அ.தி.மு.க., முன்னாள் செய்தி தொடர்பாளர் மருது அழகுராஜ் அறிக்கை:

'பன்னீர்செல்வம் வீட்டில் மட்டும் ஏன் இன்னும், 'ரெய்டு' நடக்கவில்லை' என, பழனிசாமியின் மதுரை முகவர் உதயகுமார் கேள்வி எழுப்பி உள்ளார்.

விரல் சப்பியவரை விட்டு விட்டு, வேடிக்கை பார்த்தவர் மீது எரிச்சல் படக்கூடாது.விரல் சப்பியவரை வேடிக்கை பார்த்தது மட்டும் தப்பில்லையா, என்ன?
தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி அறிக்கை:

பா.ஜ., ஆட்சியில், பண பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின்படி வழக்குப் பதிவு செய்யப்பட்ட, 5,422 பேரில், 23 பேர் தான் தண்டிக்கப்பட்டு உள்ளனர். மேலும், சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்பு சட்டமான, 'உபா' சட்டத்தின் வாயிலாக, பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இதற்கு காரணம் பழிவாங்கும் நோக்கமே தவிர, குற்றவாளிகளை கண்டுபிடித்து, தண்டிப்பது அல்ல.

நம்ம ஊர் சட்டத்துல எத்தனை சந்து, பொந்துகள் இருக்கு... ஒரு வழக்கு முடிவுக்கு வர எத்தனை மாமாங்கம் ஆகும்னு தங்களுக்கு தெரியாதா?
அரசியல் விமர்சகரும், வழக்கறிஞருமான ரவீந்திரன் துரைசாமி பேட்டி:

'கவுண்டர்கள் மட்டுமே, அ.தி.மு.க.,வில் முதல்வராக முடியும்' என, பொதுவெளியில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேசுகிறார். இதனால், அ.தி.மு.க., ஆட்சியில் அமைச்சராகும் வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில் இருக்கக் கூடிய, பல்வேறு சமூகங்களை சேர்ந்தவர்களும், பா.ஜ., மற்றும் நாம் தமிழர் கட்சிகளை நோக்கி பயணிக்க தயாராகி விட்டனர்.

யாரும் மறந்தும் கூட, தி.மு.க., பக்கம் போக தயாரில்லை பாருங்க!
பா.ம.க., தலைவர் அன்புமணி அறிக்கை:

புகையிலை பொருட்களின் பயன்பாட்டை குறைக்கும் வகையில், அவற்றின் மீது அதிக வரி விதிக்கும் முறையை, நான் மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தபோது அறிமுகப்படுத்தினேன். ஆனால், அந்த நடைமுறை தொடரவில்லை. சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருட்களின் சில்லறை விலையில், 75 சதவீதம் வரியாக இருக்க வேண்டும் என, உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. ஆனால், இந்தியாவில், 52 சதவீதம் மட்டுமே வரி விதிக்கப்படுகிறது. இப்போது, 15 ரூபாய்க்கு விற்கப்படும் ஒரு சிகரெட் விலையை, குறைந்தது, 22 ரூபாயாக உயர்த்த வேண்டும். அப்போது தான் புகையிலை பயன்பாட்டை குறைக்க முடியும்.


latest tamil newsவிலையை ஏத்திட்டா, அந்த மன உளைச்சல்லயே, 'புகை' பிரியர்கள் கூடுதலா ஒரு, 'தம்'மை போட்டுட்டு போயிடுவாங்க!
தமிழக பா.ஜ., விவசாய அணி தலைவர் ஜி.கே.நாகராஜ் அறிக்கை:

ஹிந்துக்களுக்கு எதிரான ஆ.ராஜாவின் பேச்சு கண்டிக்கத்தக்கது. பிரிவினைவாதத்தை துாண்டி, அரசியல் ஆதாயம் தேடும், அவரது வேஷத்தை வெளிப்படுத்த வேண்டும். அவர் பேசிய பேச்சுக்கு, ஹிந்து மக்களிடம் பகிரங்கமாக பாவ மன்னிப்பு கேட்க வேண்டும்.

மன்னிப்பு கேட்டால், பிரச்னை முடிவுக்கு வந்துடுமே... முடியக் கூடாது என்பது தானே, ஆளுங் கட்சி தரப்பின் திட்டமாக உள்ளது!
பாலக்கோடு தொகுதி அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., அன்பழகன் பேச்சு:

அ.தி.மு.க., வுக்கு எத்தனையோ இடையூறுகள் வந்த போதும், அதை எதிர்கொண்டு சிறப்பான ஆட்சி நடத்தியவர் முன்னாள் முதல்வர் பழனிசாமி. 17 மாத ஆட்சியில், மக்களுக்கு தி.மு.க., அரசு எதையும் செய்யவில்லை.

இன்னும், 43 மாதங்கள் இருக்கே... ஏதாவது செய்வாங்கன்னு காத்திருப்போம்!
தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்க தலைவர் கார்த்தீஸ்வரன் அறிக்கை:

ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு பல்வேறு பணிகள், பொறுப்புகளை திணித்த வண்ணம் உள்ளனர். அதனால், பெரும்பாலான டாக்டர்கள், உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் கடும் சோர்வை சந்தித்துஉள்ளனர். தற்போது, பரவும் காய்ச்சலால் பணி சுமையும் அதிகரித்துள்ளது. எனவே, டாக்டர்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும்.

நோய்ப்பிணி தீர்க்கும் மருத்துவர்களுக்கே, வைத்தியம் தேவைப்படுது போலிருக்குதே!
தமிழக பா.ஜ., ஊடக பிரிவு முன்னாள் தலைவர் பிரசாத் அறிக்கை:

ராஜாவின் ஆபாச பேச்சை அங்கீகரிப்பது போல, முதல்வர் ஸ்டாலின் அமைதியாக இருப்பதன் வாயிலாக, தி.மு.க.,வின் கோர முகத்தை மக்கள் அறிந்து கொண்டதால் தான், நீலகிரி லோக்சபா தொகுதியில் ஹிந்து முன்னணி விடுத்த கடையடைப்பு போராட்டம் பெரும் வெற்றி பெற்றுஉள்ளது.

கண்டிப்பா, அடுத்த முறை அங்கு ராஜா போட்டியிட மாட்டார், பாருங்க!


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Aarkay - Pondy,இந்தியா
26-செப்-202200:18:40 IST Report Abuse
Aarkay முகவரியை தொலைக்காமல், கிடைக்கும் ஒன்றிரண்டு சீட்டுகளை இழக்காமல் இருக்க உண்டியல் குலுக்கிகள் என்னெவெல்லாம் செய்ய வேண்டியுள்ளது பாவம்.
Rate this:
Cancel
25-செப்-202221:41:07 IST Report Abuse
பேசும் தமிழன் நுபுர் ஷர்மா அவர்களும் புத்தகத்தில் உள்ளதை தானே கூறினார்..... அப்போது இப்படி சப்பை கட்டு கட்டவில்லையே ஏன்???
Rate this:
Cancel
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
25-செப்-202221:25:11 IST Report Abuse
Ramesh Sargam ஆ.ராஜா 2G ஊழலில் பல ஆயிரம் கோடி 'சம்பாதித்தார்'. செங்கோட்டையன் அவ்வளவு 'சம்பாதித்தாரா"? அவரவர் 'சம்பாதிக்கும் திறமைக்கு' ஏற்ப நியாயம் வேறுபடும்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X