தீபாவளியை முன்னிட்டு, சேலம் கோ - ஆப்டெக்ஸ் தங்கம் பட்டு மாளிகையில், 30 சதவீத சிறப்பு தள்ளுபடி விற்பனை தொடக்க விழா நேற்று நடந்தது. கலெக்டர் கார்மேகம் தொடங்கி வைத்தார்.
புது வடிவமைப்புகளில் அசல் ஜரிகையுடன் கூடிய காஞ்சிபுரம், ஆரணி, தஞ்சாவூர், சேலம் பட்டு புடவைகள், மென் பட்டு புடவைகள் அதிகளவில் விற்பனைக்கு குவிக்கப்பட்டுள்ளன. அனைத்து ரக காட்டன் புடவை, ஆர்கானிக், களம்காரி காட்டன் புடவைகளும் உள்ளன. கோ - ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் ஏற்றுமதி ரகமான ஏப்ரான், குல்ட் மெத்தை, கையுறை, டேபுள் மேட், ஸ்கிரீன் துணி, தலையணை உறையுடன் கூடிய படுக்கை விரிப்பு, இலவம்பஞ்சு மெத்தை, தலையணைகளும் உள்ளன.
தீபாவளியை முன்னிட்டு தமிழக அரசு கைத்தறி ரகங்களுக்கு, 30 சதவீதம் சிறப்பு தள்ளுபடி அறிவித்துள்ளது. அத்துடன் அனைத்து விடுமுறை நாளிலும் விற்பனை நிலையம் செயல்படும். நடப்பாண்டு விற்பனை இலக்கு, 7 கோடி ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மண்டல மேலாளர் காங்கேயவேலு, மேலாளர் பாலமுருகன் உள்பட பலர் உடனிருந்தனர்.