அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவு: நிதியமைச்சர் விளக்கம்

Updated : செப் 25, 2022 | Added : செப் 25, 2022 | கருத்துகள் (47) | |
Advertisement
புனே: மற்ற கரன்சிகளுடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு "மிக நன்றாக" உள்ளது என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு கடும் சரிவை கண்டது. ஒரு டாலருக்கு நிகரான மதிப்பு 80 ரூபாயை தாண்டியது. இது இந்திய ரூபாயின் மதிப்பில் வரலாறு காணாத வீழ்ச்சி, ஒரு டாலருக்கு நிகராக 39 காசுகள் சரிந்து இந்திய
அமெரிக்கடாலர், இந்தியரூபாய், மதிப்பு,  சரிவு, நிதியமைச்சர், விளக்கம், IndiaFinanceMinister, NirmalaSitharaman, Nirmala, Sitharaman, DefenceAsRupee, RecordLow

புனே: மற்ற கரன்சிகளுடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு "மிக நன்றாக" உள்ளது என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.


அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு கடும் சரிவை கண்டது. ஒரு டாலருக்கு நிகரான மதிப்பு 80 ரூபாயை தாண்டியது. இது இந்திய ரூபாயின் மதிப்பில் வரலாறு காணாத வீழ்ச்சி, ஒரு டாலருக்கு நிகராக 39 காசுகள் சரிந்து இந்திய ரூபாயின் மதிப்பு முதல் முறையாக 81-ஐ தாண்டி 81.27 ஆக உள்ளது.


அமெரிக்க பெடரல் ரிசர்வ் பெஞ்ச்மார்க் வட்டி விகிதங்களை 75 பிபிஎஸ் உயர்த்தியது முதல் இந்திய ரூபாய் மதிப்பு சரிவடைந்துள்ளது. இந்திய ரூபாய் மதிப்பு சரிவால் வெளிநாட்டுப் பயணச் செலவு அதிகமாகும் அபாயம் உள்ளது.


வெளிநாடுகளில் படிக்கும் இந்திய மாணவர்களின் கல்விச் செலவு கணிசமாக உயர வாய்ப்புள்ளது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வீழ்ச்சி பொருள்களின் விலைவாசி உயர்வுக்கு வழிவகுக்க வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.இந்நிலையில், இது குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருப்பதாவது:latest tamil news* மற்ற நாணயங்களை ஒப்பிடுகையில், ஏற்ற, இறக்கம் அடையாமல் இருந்தால் அது இந்திய ரூபாயாகும்.


* மற்ற கரன்சிகளுடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு "மிக நன்றாக" உள்ளது.


*. ரிசர்வ் வங்கியும் நிதி அமைச்சகமும் முன்னேற்றங்களை மிக உன்னிப்பாகக் கவனித்து வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.


முன்னதாக உக்ரைனுக்கு எதிரான போரில் 3 லட்சம் வீரர்களை திரட்டப் போவதாக ரஷ்யா அறிவித்திருந்தது. இந்த காரணங்களால், அமெரிக்க டாலரின் மதிப்பு 20 ஆண்டுகளில் இல்லாத உச்சத்துக்கு சென்றது. அதனால், ரூபாய் உள்ளிட்ட ஆசிய நாடுகளின் நாணயங்கள் மதிப்பு கடுமையான சரிவை சந்தித்தது என்று அன்னிய செலாவணி வர்த்தகர்கள் தரப்பில் தெரிவித்தனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (47)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramaswami Sampath - mumbai,இந்தியா
26-செப்-202205:40:49 IST Report Abuse
Ramaswami Sampath பொருளாதார நிபுணர்கள் இதை ஏற்றுக்கொண்டார்களா? தனக்கு சாதகமானவற்றை மட்டும் மற்ற நாடுகளுடன் ஒப்பிட்டுப்பார்த்து தானே தன்னை மெச்சிக்கொள்வது .
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
25-செப்-202223:56:21 IST Report Abuse
Vena Suna இலவசங்கள் கொடுக்க கொடுக்க பண மதிப்பு கம்மி ஆகி விடும்.இட ஒதுக்கீடால் திறமை இல்லாதவர்க்ள படிக்கின்றனர். இவர்கள் திறமை இல்லாமல் வேளைகளில் சேர்ந்து,நாட்டையும் முன்னுக்கு கொண்டு வருவதில்லை. 75 வருஷமாக இதே பொழைப்பு.
Rate this:
Cancel
rmr - chennai,இந்தியா
25-செப்-202223:08:32 IST Report Abuse
rmr உலக நிலவரத்தை பாக்கணும் ஏற்றுமதி இறக்குமதி எது எடுத்தாலும் டாலரை வைத்தே கணக்கு செய்யுறானுங்க இதெற்கு மாற்று வேணும் ஆயில் தருவது வேறு நாடு அனால் டாலரை தான் எல்லாரும் பயன்படுத்துகிறோம் சிந்தியுங்கள் அரசு அதெற்கு மாற்று செய்தால் தான் இதை கட்டுக்குள் வைக்க முடியும் அதை அமெரிக்கா அனுமதிக்குமா ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X