தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது: பெட்ரோல் குண்டு வீசுபவர்களுக்கு டிஜிபி எச்சரிக்கை

Updated : செப் 25, 2022 | Added : செப் 25, 2022 | கருத்துகள் (92) | |
Advertisement
சென்னை: பெட்ரோல் குண்டு வீசும் நபர்கள் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என போலீஸ் டிஜிபி சைலேந்திர பாபு எச்சரித்துள்ளார்.தமிழகத்தில் கோவை, திருப்பூர், மதுரை, சேலம், கன்னியாகுமரி உள்ளிட்ட இடங்களில் பா.ஜ., மற்றும் ஆர்எஸ்எஸ் பிரமுகர் வீடுகளில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. இதனால், கோவை மாவட்டத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. அங்கு போலீசார்
பெட்ரோல் குண்டு, டிஜிபி, சைலேந்திர பாபு, எச்சரிக்கை, கைது

சென்னை: பெட்ரோல் குண்டு வீசும் நபர்கள் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என போலீஸ் டிஜிபி சைலேந்திர பாபு எச்சரித்துள்ளார்.



தமிழகத்தில் கோவை, திருப்பூர், மதுரை, சேலம், கன்னியாகுமரி உள்ளிட்ட இடங்களில் பா.ஜ., மற்றும் ஆர்எஸ்எஸ் பிரமுகர் வீடுகளில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. இதனால், கோவை மாவட்டத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.



latest tamil news




இந்நிலையில், சைலேந்திரபாபு வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:


பெட்ரோல் குண்டு வீசும் நபர்கள், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்போர், குற்றச்செயலில் ஈடுபடுவோர் , தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள். குற்றச்செயலில் ஈடுபடுவோர்களை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடக்கிறது. இதுவரை 250 பேரிடம் விசாரணை நடக்கிறது. கோவையில் கூடுதலாக 3,500 போலீசார் பதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சில அமைப்பை சேர்ந்தோர், வீடு, கார் மீது கல்வீசியது தொடர்பாக 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.



பெட்ரோல் குண்டு வீச்சில் தொடர்புடைய குற்றவாளிகள் இன்று மாலைக்குள் கைது செய்யப்படுவார்கள் என டி.ஜி.பி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (92)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தியாகு - கன்னியாகுமரி ,இந்தியா
25-செப்-202218:52:26 IST Report Abuse
தியாகு சிரிப்பு போலீஸ் சைலேந்திரபாபு பூமர் அங்கிள் என்று விளையாட்டாக சொல்கிறார்கள் என்று நினைத்தேன், முதலாவது போட்டோவை இரண்டு நிமிடம் உற்று நோக்கினால் அது எந்த அளவிற்கு உண்மையான வார்த்தை என்று தெரிகிறது. நீங்களும் முதலாவது போட்டோவை இரண்டு நிமிடம் உற்று நோக்குங்களேன், உண்மை தெரியும்.
Rate this:
Cancel
தியாகு - கன்னியாகுமரி ,இந்தியா
25-செப்-202218:43:58 IST Report Abuse
தியாகு எனக்கு தெரிந்து சிரிப்பு போலீஸ் சைலேந்திரபாபு பூமர் அங்கிள் செய்யும் ஒரே ஒரு உருப்படியான வேலை நன்றாக முக சவரம் செய்துகொண்டு நீட்டாக அயர்ன் செய்த போலீஸ் டிரஸ் போட்டுகொண்டு கோபாலபுர குடும்ப உறுப்பினர்களுக்கு காவல் இருந்துகொண்டு சமயங்களில் விதவிதமான கலர்களில் சைக்கிள் டிரஸ் போட்டுகொன்டு சைக்கிளில் பவனி வந்து மாணவர்களுக்கு அறிவுரை கூறி வீடியோ போட்டு தற்பெருமை பேசிக்கொள்வது மட்டுமே. முப்பது நாட்களில் நூறு கொலைகள் நடந்திருக்கு, கட்டுமர திருட்டு திமுகவின் தலைமுறை குடும்ப கொத்தடிமை கழக அடாவடி அடிமை உடன்பிப்புகளும் அல்லக்கைகளும் செய்யும் அடாவடித்தனங்களை கட்டப்பஞ்சாயத்துக்களை கொலைகளை ஒடுக்க துப்பில்லை, மூர்க்க கும்பல் செய்யும் அட்டூழியங்களை ஒடுக்க துப்பில்லை, வீடியோ போட்டு போஸ் கொடுப்பதற்கு ஒன்று குறைச்சல் இல்லை. விளங்கிடும் தமிழ்நாட்டு சட்டம் ஒழுங்கு.
Rate this:
Cancel
தியாகு - கன்னியாகுமரி ,இந்தியா
25-செப்-202218:43:43 IST Report Abuse
தியாகு உலகத்திலேயே மூர்க்க தீவிரவாதிகளுக்கு மிகவம் பாதுகாப்பான இடங்கள் மூன்று மட்டுமே. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வளைகுடா நாடுகள். இந்தியாவிலேயே மூர்க்க தீவிரவாதிகளுக்கு மிகவும் பாதுகாப்பான இடங்கள் மூன்று மட்டுமே. கேரளா, மேற்கு வங்கம், தமிழ்நாடு. எதிர்காலத்தில் இந்த மூன்று மாநிலங்களும் பாகிஸ்தானாக மாற அநேக வாய்ப்புகள் உண்டு. உங்கள் குழந்தைகள், பேரன் பேத்திகள் நல்ல அரசியல் சமுதாய சூழ்நிலையில் வாழவேண்டுமானால் கட்டுமர திருட்டு திமுக, ஊழல் காங்கிரஸ், அடாவடி மமதை காங்கிரஸ், உண்டியல் குலுக்கிகள் இந்த கட்சிகளை தூர தள்ளிவைக்க பழகுங்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X