" பருவநிலை மாற்றம் பெரும் சவாலாக உள்ளது " - பிரதமர் மோடி

Updated : செப் 25, 2022 | Added : செப் 25, 2022 | கருத்துகள் (16) | |
Advertisement
புதுடில்லி: பருவநிலை மாற்றம், கடல் சுற்றுச்சூழலுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி மன் கி பாத் ரேடியோ நிகழ்ச்சியில் பேசுகையில் கூறினார். அவர் மேலும் பேசியதாவது: சிவிங்கிகள் இந்தியாவிற்கு திரும்பி வந்தது குறித்து நாட்டின் அனைத்து பகுதிகளில் இருந்தும் மக்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளனர். இந்தியர்கள் பெருமையுடன் மகிழ்ச்சி
maankibaat, pmmodi, modi, narendramodi, pmnarendramodi, மன் கி பாத், மோடி, பிரதமர் மோடி, மனதின் குரல், மன்கி பாத், நரேந்திர மோடி,

புதுடில்லி: பருவநிலை மாற்றம், கடல் சுற்றுச்சூழலுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி மன் கி பாத் ரேடியோ நிகழ்ச்சியில் பேசுகையில் கூறினார்.



அவர் மேலும் பேசியதாவது:


சிவிங்கிகள் இந்தியாவிற்கு திரும்பி வந்தது குறித்து நாட்டின் அனைத்து பகுதிகளில் இருந்தும் மக்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளனர். இந்தியர்கள் பெருமையுடன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். சிவிங்கிகளை கண்காணிக்கவும், பார்வையாளர்கள் பார்வையிடவும் குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது. அவற்றிற்கு பெயர் வைப்பது குறித்து மக்கள் தங்களின் எண்ணங்களை தெரிவிக்கலாம். நமது பாரம்பரியத்திற்கு ஏற்ப பெயர் வைத்தால் சிறப்பானதாக இருக்கும், விலங்குகளை மனிதர்கள் எப்படி கையாள வேண்டும் என்பது குறித்தும் கருத்துகளை தெரிவிக்கலாம்.



காசநோய் இல்லாத தேசம்


உடல் மற்றும் மன நலனுக்கு யோகா உகந்ததாக உள்ளதை உலக நாடுகள் ஏற்று கொண்டுள்ளன. காசநோய் இல்லாத தேசமாக 2025க்குள் இந்தியா மாறும். உள்ளூர் தொழிலுக்கு மக்கள் ஆதரவு அளித்து உள்ளூர் தயாரிப்புகளை வாங்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டில் இந்தியா பல உயரங்களை எட்டியுள்ளது. மாற்றுத்திறனாளிகள் மத்தியில் அவர்களின் தன்னம்பிக்கையை ஏற்படுத்தவும், உடல்தகுதி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் பலரும் உழைக்கின்றனர்.



latest tamil news



சண்டிகர் விமான நிலையத்திற்கு பகத் சிங் பெயர் சூட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. புதிய இந்தியாவின் பயணத்தில் சுதந்திர போராட்ட வீரர்களின் பெயர்கள் நினைவில் கொள்ள வேண்டும். சுற்றுச்சூழலை பாதிக்கும் பாலித்தீன் பைகளை பயன்படுத்துவதை மக்கள் தவிர்க்க வேண்டும். அதற்கு மாற்றாக, சணல், பருத்தி, வாழை நார்களை கொண்டு தயாரிக்கப்படும் பைகளை பயன்படுத்தலாம். பருவ நிலை மாற்றம், கடல் சுற்றுச்சூழலுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. நமது கடலோரங்களில் கொட்டப்படும் குப்பைகள் கவலையளிக்கின்றன. இது போன்ற பிரச்சனைகளை கையாள்வது பெரும் சவாலாக உள்ளது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sampath Kumar - chennai,இந்தியா
25-செப்-202217:09:13 IST Report Abuse
Sampath Kumar அமர வேண்டியவர்கள் தலைமை பொறுப்பில் அமர்ந்தால் பருவ நிலை மாறும் ஜி
Rate this:
Cancel
25-செப்-202213:05:19 IST Report Abuse
அப்புசாமி எட்டு சிறுத்தைகளை கொண்டுவர, எட்டாயிரம் கேலன் கெரோசினை வீணாக்கி, சுற்றுச்சூழலை மேலும் கெடுத்து, பருவநிலை மாற்றம் சவாலாக இருக்குன்னு வடை. அந்த ப்ளேனுக்கு புலி வேஷ பெயிண்ட் வேற. தாங்கல முடியலை.
Rate this:
Girija - Chennai,இந்தியா
25-செப்-202213:21:52 IST Report Abuse
Girijaஅல்பசாமி இது விளம்பரத்திற்காக செய்யவில்லை. உயிரினங்கள் அழியாமல் காக்கவேண்டும் என்ற நோக்கத்துடன் தான் நடக்கிறது. முன்னாடியே கேட்டிருந்தா உங்களுக்கும் சிறுத்தைகளுக்கு பக்கத்தில் ஓர் சீட் போட்டு அந்த ப்ளைனில் உட்காரவைத்திருப்பர்...
Rate this:
விசு அய்யர் - Chennai ,இந்தியா
25-செப்-202215:50:41 IST Report Abuse
விசு அய்யர்.........
Rate this:
Cancel
25-செப்-202213:03:05 IST Report Abuse
மதுரை தருமி நமிபியாவிலேயே அதுங்களுக்கு பேர் வெச்சு அனுப்பிச்சுட்டாங்க. ஆஷா, சாஷா, சிபிலி, ஃப்ரெட்டி, ஓபான், சைஷா, சாஷா, சவன்னா. அதுங்களுக்கு இந்தியப் பேர் வெச்சு அந்நிய அடையாளங்களை நீக்குவோம். இதோ பேருங்க. கர்த்தா, கர்த்தவ்யா, கர்த்தி, கர்தவ்யி, கர்த்தவ்யூ, கர்த்தவ்யே, கர்த்தவ்யை. பரிசு எனக்கே...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X