”அன்னிய நேரடி முதலீடு 100 பில்லியன் டாலரை தொடும்” : மத்திய அரசு நம்பிக்கை

Updated : செப் 25, 2022 | Added : செப் 25, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
பொருளாதார சீர்திருத்தங்கள், எளிதாக தொழில் செய்ய ஏற்ற சூழல் காரணமாக இந்தியாவில் அன்னிய நேரடி முதலீடு, நடப்பு நிதியாண்டில் 100 பில்லியன் டாலரை தொடுமென மத்திய அரசு தெரிவித்துள்ளது.மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த 2021-22ம் நிதியாண்டில் 83.6 பில்லியன் அமெரிக்க டாலர்கள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு
அன்னிய நேரடி முதலீடு, 100 பில்லியன் டாலர், Foreign Direct Investment, India, இந்தியா, பொருளாதாரம், Make in India, மேக் இன் இந்தியா


பொருளாதார சீர்திருத்தங்கள், எளிதாக தொழில் செய்ய ஏற்ற சூழல் காரணமாக இந்தியாவில் அன்னிய நேரடி முதலீடு, நடப்பு நிதியாண்டில் 100 பில்லியன் டாலரை தொடுமென மத்திய அரசு தெரிவித்துள்ளது.மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கடந்த 2021-22ம் நிதியாண்டில் 83.6 பில்லியன் அமெரிக்க டாலர்கள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அன்னிய முதலீடு பதிவாகி இருந்தது. கடந்த நிதியாண்டில் 101 நாடுகளில் இருந்து வந்த அன்னிய நேரடி முதலீடு 31 யூனியன் பிரதேசங்கள் மற்றும் மாநிலங்களில், 57 துறைகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

சமீப ஆண்டுகளில் பொருளாதார சீர்திருத்தங்கள் மற்றும் எளிதாக தொழில் செய்ய ஏற்ற நாடாக விளங்குவதால், நடப்பு நிதியாண்டில் 100 பில்லியன் டாலர் அன்னிய நேரடி முதலீட்டை ஈர்க்கும் பாதையில் இந்தியா உள்ளது. வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக, அரசு தாராளமய மற்றும் வெளிப்படையான கொள்கையை வகுத்துள்ளது. அதில் பெரும்பாலான துறைகள் தன்னிச்சையாக அன்னிய நேரடி முதலீட்டுக்கு திறந்திருக்கும்.latest tamil news


மத்திய அரசின் சீர்திருத்த நடவடிக்கைகளில், தேவையற்ற சுமைகளைக் குறைப்பதற்கும், செலவுகளைக் குறைப்பதற்கும், தொழில் செய்வதை எளிதாக்கும் வழிகாட்டுதல்கள் மற்றும் ஒழுங்குமுறைகளின் தாராளமயமாக்கல் ஆகியவை அடங்கும். மேலும், நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டு காலத்தில், அதாவது ஏப்ரல்-ஜூனில், இந்தியாவில் அன்னிய நேரடி முதலீடு 6 சதவீதம் குறைந்து 16.6 பில்லியன் டாலர்களாக உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும், பொம்மைகள் இறக்குமதி குறித்து 'தரமற்ற, அபாயகரமான பொம்மைகளின் இறக்குமதியை குறைக்கவும், உள்நாட்டில் பொம்மைகளின் உற்பத்தியை மேம்படுத்துவதற்கும், அரசின் சார்பில் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், 2021-22 ஆம் ஆண்டில் பொம்மைகளின் இறக்குமதி 70 சதவீதம் குறைந்து 110 மில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. மறுபுறம், ஏற்றுமதி 61 சதவீதம் அதிகரித்து 326 மில்லியன் டாலராக உள்ளது' என தெரிவித்துள்ளது.

இந்த நிதியாண்டில் அன்னிய நேரடி முதலீடு, 100 பில்லியன் டாலராக அதிகரிக்குமென அரசின் கணிப்பை, பாங்க் ஆஃப் பரோடாவின் தலைமைப் பொருளாதார நிபுணர் மதன் சப்னாவிஸ் நிராகரித்துள்ளார். , கடந்த ஆண்டை போல, அன்னிய நேரடி முதலீடு பரவலானதாகவும், நிலையானதாகவும் இருக்கும் என தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
25-செப்-202217:30:20 IST Report Abuse
அப்புசாமி 100 பில்லியனைப் போட்டுட்டு இருக்கப் போறாங்கன்னு நினைக்காதீங்க.
Rate this:
Cancel
25-செப்-202215:48:25 IST Report Abuse
ஆரூர் ரங் சீனா ரஷ்யாவிலிருந்து முதலீடுகள்😄 வெளியேறும் நிலையில் அவை நமக்கு வரு‌ம் வாய்ப்பு அதிகம் .
Rate this:
Cancel
Duruvesan - Dharmapuri,இந்தியா
25-செப்-202214:51:39 IST Report Abuse
Duruvesan பாஸ் ரெண்டு நாளா மார்க்கெட் ரத்த குளியல் தான், FDI 20 T$ தொட்டாலே பெரிய விஷயம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X