சுதந்திரமாக செயல்பட முடியாத போலீசார்: அண்ணாமலை குற்றச்சாட்டு

Updated : செப் 26, 2022 | Added : செப் 25, 2022 | கருத்துகள் (30) | |
Advertisement
கோவை: போலீசார் கைகள் கட்டப்பட்டுள்ளதால், அவர்களால் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.நிருபர்களை சந்தித்த அண்ணாமலை கூறியதாவது: டிஜிபி., அறிவிப்பை வரவேற்கிறேன். சொல்வதோடு நிறுத்தாமல் குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. பா.ஜ., தொண்டர்கள் அமைதி காக்க வேண்டும். குற்றவாளிகள்
BJP, ANNAMALAI, petrol bomb, k.annamalai, பாஜ, அண்ணாமலை, பெட்ரோல் குண்டு,

கோவை: போலீசார் கைகள் கட்டப்பட்டுள்ளதால், அவர்களால் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.



நிருபர்களை சந்தித்த அண்ணாமலை கூறியதாவது: டிஜிபி., அறிவிப்பை வரவேற்கிறேன். சொல்வதோடு நிறுத்தாமல் குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. பா.ஜ., தொண்டர்கள் அமைதி காக்க வேண்டும். குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என நம்புகிறோம்.



latest tamil news



தமிழக போலீஸ் கைகள் கட்டப்பட்டுள்ளன. இதனால், அவர்களால் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை. இதனை பல முறை கூறி வருகிறோம். அதுன் உச்சம்தான் தற்போது தொட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பா.ஜ., தொண்டர்களுக்கு உதவுவோம். தாக்குதல் நடத்துவதால், பா.ஜ.,வின் வளர்ச்சியை தடுக்க முடியாது. இதே சூழ்நிலை தொடர்ந்தால், தொண்டர்களின் கோபத்திற்கு மாநில அரசு ஆளாகும் என எச்சரித்து கொள்கிறேன்.


மாநில அரசு இன்னும் ஆக்ரோஷமாக நடவடிக்கை எடுக்க வேண்டும். குண்டுவீச்சு சம்பவத்தில் தொடர்புள்ளவர்களை விரைவில் கைது செய்ய வேண்டும். பெட்ரோல் குண்டுவீச்சு குறித்து முன்கூட்டியே எடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. ஆரம்பத்தில் போலீசார் சுணக்கமாக செயல்பட்டாலும், தற்போது வரைவாக செயல்படுகின்றனர்.



பா.ஜ.வினரை உளவுத்துறையினர் உன்னிப்பாக கவனிக்கின்றனர். அண்ணாமலை என்ன செய்கிறார். என்ன சாப்பிடுகிறார் என கண்காணிப்பவர்கள், கலவரம் செய்பவர்களை கண்காணிப்பதில் என்ன பிரச்னை. பா.ஜ., தொண்டர்களை கைது செய்யும் அளவிற்கு என்ன கோபம். மாநில அரசிற்கு எச்சரிக்கும் விதமாக நாளை கோவையில் போராட்டம் நடக்க உள்ளது. புகார் மீது நடவடிக்கை எடுக்காமல், புகார் அளித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
raja - Cotonou,பெனின்
27-செப்-202212:07:25 IST Report Abuse
raja கேடுகெட்ட கோவால் புர கோமாளிகள் ஆட்சியில் இது எல்லாம் சகஜம் தானே....
Rate this:
Cancel
sankar - சென்னை,இந்தியா
26-செப்-202222:08:19 IST Report Abuse
sankar அண்ணாமல, போலிஸ் மாத்திரந்தானா? வருமான வரித்துறை, மத்திய புலனாய்வுத்துறை, அமலாக்கத்துறை எல்லாம் உங்க ஆட்சியில் எப்பவோ பப்பெட் ஆயிடிச்சே. தெரியாதா? என்ன அதிகாரியோ.
Rate this:
Cancel
sankar - சென்னை,இந்தியா
26-செப்-202215:35:22 IST Report Abuse
sankar வருமான வரித்துறை, மத்திய புலனாய்வுத்துறை, அமலாக்கத்துறை எல்லாம் தெரியாதா? என்ன அதிகாரியோ.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X