தமிழகத்தில் 3.40 கோடி பேர் கொரோனா பூஸ்டர் தடுப்பூசி செலுத்தவில்லை: அமைச்சர்

Updated : செப் 25, 2022 | Added : செப் 25, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
சென்னை: இதுவரை பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் 86 லட்சத்து 31 ஆயிரத்து 976 பேர். இன்னும் 3 கோடியே 40 லட்சம் பேர் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தவில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.இது குறித்து, அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: மத்திய அரசின் அறிவிப்பின்படி பூஸ்டர் தடுப்பூசி தனியார் மருத்துவமனைகளில் ரூ.386.25 ரூபாய்
 தமிழகம், கொரோனா, பூஸ்டர், தடுப்பூசி, அமைச்சர், TN, Tamilnadu, தமிழகம், தமிழ்நாடு, மா.சுப்பிரமணியன்

சென்னை: இதுவரை பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் 86 லட்சத்து 31 ஆயிரத்து 976 பேர். இன்னும் 3 கோடியே 40 லட்சம் பேர் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தவில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.


இது குறித்து, அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: மத்திய அரசின் அறிவிப்பின்படி பூஸ்டர் தடுப்பூசி தனியார் மருத்துவமனைகளில் ரூ.386.25 ரூபாய் கட்டணம் செலுத்தி போட்டுக்கொண்டிருந்த நிலையில், அண்மையில் பவள விழா சுதந்திர தினத்தை முன்னிட்டு 75 நாட்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி இலவசம் என்ற அறிவிப்பு வெளியானது.


அந்த அறிவிப்பு வந்த நாளிலிருந்தே தொடர்ந்து வாரந்தோறும் இந்த தடுப்பூசி மெகா முகாம்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.தமிழகத்தில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ள தகுதியானவர்கள் 4 கோடியே 30 லட்சத்து 75 ஆயிரத்து 926 பேர்.


இதுவரை பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் 86 லட்சத்து 31 ஆயிரத்து 976 பேர். இன்னும் 3 கோடியே 40 லட்சம் பேர் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்யடிவர்கள்.


எனவே நாங்கள் விடுக்கிற வேண்டுகோள் என்பது, மத்திய அரசின் இலவச பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். தடுக்கி விழுகிற இடங்களில் எல்லாம் தடுப்பூசி முகாம்கள் என்கிற வகையில் தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடுகிற பணிகள் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எனவே இதை பொதுமக்கள் பயன்படுத்தி பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்" என்று அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
25-செப்-202222:00:27 IST Report Abuse
Ramesh Sargam குறிப்பாக தமிழகத்தில் மக்கள் இந்த கொரோனா வைரசுக்கு பயந்த காலம்போயி, இப்ப எங்க, எந்த நேரம் பெட்ரோல் குண்டு வெடிக்கும் என்று பயந்துகொண்டிருக்கிறார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X