திருப்பதிக்கு புறப்பட்ட வெண்பட்டு குடைகள்; செண்டை மேளம் முழங்கிட அதிர்ந்தன !

Updated : செப் 25, 2022 | Added : செப் 25, 2022 | கருத்துகள் (5) | |
Advertisement
சென்னை: திருமலை திருப்பதி பிரம்மோற்சவத்தின்போது ஹிந்து தர்மார்த்த சமிதி சார்பில் சமர்ப்பிக்கப்பட உள்ள 11 வெண்பட்டுக் குடைகள் சென்னை பூக்கடை சென்ன கேசவ பெருமாள் கோயிலில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டன.வருடாந்திர பிரமோற்சவம் திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் செப்., 27ஆம் தேதி முதல் கொடியேற்றத்துடன் துவங்கி ஒன்பது நாட்களுக்கு வருடாந்திர
திருப்பதி, திருமலை, தேவஸ்தானம், பெருமாள், சென்னை, வெண்ட்டு , குடைகள், பிரமோற்சவம்


சென்னை: திருமலை திருப்பதி பிரம்மோற்சவத்தின்போது ஹிந்து தர்மார்த்த சமிதி சார்பில் சமர்ப்பிக்கப்பட உள்ள 11 வெண்பட்டுக் குடைகள் சென்னை பூக்கடை சென்ன கேசவ பெருமாள் கோயிலில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டன.வருடாந்திர பிரமோற்சவம்


திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் செப்., 27ஆம் தேதி முதல் கொடியேற்றத்துடன் துவங்கி ஒன்பது நாட்களுக்கு வருடாந்திர பிரமோற்சவம் நடைபெற உள்ளது. இந்த ஆண்டு புரட்டாசி மாதம் நடைபெற உள்ள பிரம்மோற்சவ விழாவில் கோவிலின் 4 மாட வீதிகளில் வாகன சேவை பிரம்மாண்டமாக நடக்கவுள்ளது. கோவிட் காரணமாக தற்போது 2 ஆண்டுகளுக்கு பின் பிரம்மோற்சவம் சிறப்பாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.latest tamil newsகேசவ பெருமாள் கோயிலில் இருந்து புறப்பட்ட ஊர்வலத்தை விசாகா ஸ்ரீ சாரதா பீடம் உத்தர பீடாதிபதி ஸ்ரீஸ்ரீஸ்ரீ ஸ்வாத்மானந்தேந்த்ர சரஸ்வதி சுவாமிகள் கொடியசைத்து துவக்கி வைத்தார். அருகில் ஹிந்து தர்மார்த்த சமிதி டிரஸ்ட் நிர்வாக அறங்காவலர் வேதாந்தம், இந்து தர்மார்த்த சமிதி அறங்காவலர் ஆர்.ஆர். கோபால்ஜி, விசுவ ஹிந்து வித்யா கேந்திரா பொதுச் செயலாளர் கிரிஜா சேஷாத்திரி, திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவின் சிறப்பு அழைப்பாளர் சேகர்ரெட்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.latest tamil news

ஹிந்து தர்மார்த்த சமிதி சார்பில் ஸ்ரீ வாரி பாதம் எடுத்து செல்லப்பட்டது.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். செண்டை மேளங்கள் முழங்க ஊர்வலம் பக்தர்களை மகிழ்வித்தன. இந்த நிகழ்ச்சி தினமலர் இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.latest tamil newsஅக்., 1ம் தேதி இரவு 7 மணிக்கு திருப்பதியில் கருட சேவை நடைபெற உள்ளது. அன்றைய தினம் புரட்டாசி மாதம் 3-வது சனிக்கிழமை என்பது சிறப்பாகும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
26-செப்-202205:01:52 IST Report Abuse
Kasimani Baskaran இந்து தர்மம் நிலைக்க பகவானே வருவான்.
Rate this:
Cancel
25-செப்-202220:43:10 IST Report Abuse
பேசும் தமிழன் இங்கு வந்தவர்கள்.... கோவிலுக்கு வந்தால் மட்டும் போதாது..... இந்து விரோத திமுக க்கு ஓட்டு போட. மாட்டோம் என்று உறுதி எடுக்க வேண்டும்
Rate this:
Cancel
a natanasabapathy - vadalur,இந்தியா
25-செப்-202219:37:39 IST Report Abuse
a natanasabapathy Kovilkakil paarambariya melam (thavil) mattume vaasikka vendum . Yevano kamishanukku aasaippattu Sendai melaththai keralaavil irunthu irakkumathi seythu vittaan. Thamizharkalun kalaasaaram konjam konjamaaka azhikkappattu varukirathu.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X