இன்ஸ்டா ஸ்டோரீஸில் இனி 1 நிமிட வீடியோ பதிவேற்றலாம்| Dinamalar

'இன்ஸ்டா ஸ்டோரீஸில் இனி 1 நிமிட வீடியோ பதிவேற்றலாம்'

Updated : செப் 25, 2022 | Added : செப் 25, 2022 | கருத்துகள் (3) | |
இன்ஸ்டாகிராம் ஸ்டோரீஸில் இனி தடையின்றி ஒரு நிமிடம் வரை ஓடக்கூடிய வீடியோவை அப்லோடு செய்யும் வசதியை, பயன்பாட்டுக்கு கொண்டு வந்திருப்பதாக மெட்டா அறிவித்துள்ளது. கடந்தாண்டு குறிப்பிட்ட பயனர்களுக்கு சோதனை முறையில அறிமுகப்படுத்திய நிலையில், தற்போது அனைத்து பயனர்களுக்கும் உலகம் முழுவதும் வசதியை வழங்கி உள்ளது. மெட்டா செய்தி தொடர்பாளர் கூறுகையில், "ஸ்டோரீஸ்
இன்ஸ்டாகிராம், ஸ்டோரீஸ், ரீல்ஸ், வீடியோ, No longer, Broken,into Clips, தொழில்நுட்பம், Technology, Meta, மெட்டா, Facebook,பேஸ்புக்இன்ஸ்டாகிராம் ஸ்டோரீஸில் இனி தடையின்றி ஒரு நிமிடம் வரை ஓடக்கூடிய வீடியோவை அப்லோடு செய்யும் வசதியை, பயன்பாட்டுக்கு கொண்டு வந்திருப்பதாக மெட்டா அறிவித்துள்ளது.கடந்தாண்டு குறிப்பிட்ட பயனர்களுக்கு சோதனை முறையில அறிமுகப்படுத்திய நிலையில், தற்போது அனைத்து பயனர்களுக்கும் உலகம் முழுவதும் வசதியை வழங்கி உள்ளது. மெட்டா செய்தி தொடர்பாளர் கூறுகையில், "ஸ்டோரீஸ் அனுபவத்தை மேம்படுத்துவதற்கான வழிகளில், தொடர்ந்து பணியாற்றி வருகிறோம். இப்போது, தானாக 15 வினாடி வீடியோ துண்டுகளாக வெட்டப்படுவதற்குப் பதிலாக, நீங்கள் 60 வினாடிகள் வரை தொடர்ந்து ஸ்டோரீஸில் வீடியோவை அப்லோடு செய்யலாம் அல்லது உருவாக்கலாம்.”
இவ்வாறு அவர் கூறினார்.


latest tamil news


இனி பயனர்கள் தடையின்றி ஒரு நிமிடம் ஓடக்கூடிய வீடியோவை காணும் அதேநேரத்தில், வீடியோ 60 வினாடிகள் வரை என்பது நீண்டதாக இருப்பதால், டேப் செய்து அடுத்தடுத்து வீடியோவை பார்க்க இயலாத அனுபவத்தை பெற நேரிடும். மேலும் ஒரு நிமிட வீடியோவை பதிவிடும் போது ஸ்டோரீஸ் மற்றும் ரீல்ஸ் என உங்களுக்கு இரண்டு விருப்பங்கள் இருப்பதால், வீடியோக்களை பதிவிடுகையில், இரண்டுக்கும் இடையிலான வித்தியாசம் ஓரளவு மங்கலாக இருக்கும்.

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வீடியோவை பதிவேற்றுவதற்கான வைப்பதற்காக காலக்கெடுவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. முன்பு 60 நொடிகள் என்று இருந்ததை ஜூனில், 90 நிமிடங்களாக அதிகரித்தது. 15 நொடிகளுக்கு குறைவான வீடியோக்கள், தானாகவே ரீல்ஸ் வீடியோவாக மாறும் வசதியை ஏற்படுத்தியது. இன்ஸ்டாகிராமின் வீடியோ அம்சங்களில் அவ்வப்போது மாற்றங்கள் நிகழ்வது ஆச்சரியப்படுவதற்கில்லை.


latest tamil news

இன்ஸ்டாகிராம் தலைவர் ஆடம் மொசெரி கூறுகையில் ' 2022ம் ஆண்டிற்கான இன்ஸ்டாகிராமின் முன்னுரிமைகளை வகுத்த போது, ​​நிறுவனம் வீடியோவை இரட்டிப்பாக்க உறுதி கொண்டது. இன்ஸ்டாகிராம் அதன் அனைத்து வீடியோ தயாரிப்புகளையும் ரீல்ஸை ஒருங்கிணைத்து, சிறு வீடியோ தயாரிப்பைத் தொடர்ந்து வளர்க்கும். இது ஸ்டோரீஸ் மற்றும் ரீல்களுக்கு இடையிலான வித்தியாசம், இன்னமும் இருப்பதை குறிக்கிறது' என்றார்.


இவை அனைத்தும் மற்றொரு பிரபல சமூகவலைதளமான டிக் டாக், உடன் போட்டி போடும் வகையில், இன்ஸ்டாகிராம் செய்து வருகிறது. டிக்டாக் போன்று முழு திரையில் வீடியோ பார்க்கும் வசதியை அறிமுகப்படுத்த, அது பயனர்களுக்கு பிடிக்காததால் திரும்ப பெற்றது. அதன் தொடர்ச்சியாக ஸ்டோரீஸில் தற்போது வந்துள்ள மாற்றம், இன்ஸ்டாகிராம், இன்னும் தான் ஒரு வீடியோவை மையமாகக் கொண்ட தளம் என்பதில் பிடிவாதமாக இருப்பதை உணர்த்துகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X