உக்ரனைிடம் சரண் அடையும் ரஷ்ய வீரர்களுக்கு 10 ஆண்டு சிறை: ரஷ்ய அதிபர் புடின்

Updated : செப் 25, 2022 | Added : செப் 25, 2022 | கருத்துகள் (5) | |
Advertisement
மாஸ்கோ: உக்ரைன் மீது ரஷ்யா போர் நடத்தி வரும் நிலையில், ரஷ்ய வீரர்கள் சரணடைய கூடாது, மீறினால் 10 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்படும் என ரஷ்ய அதிபர் புடின் எச்சரித்துள்ளார்.உக்ரைன் மீது ரஷ்யா போரை தொடங்கி 6 மாதங்கள் கடந்துவிட்ட போதிலும் போர் நிறுத்தம் குறித்த பேச்சுவார்த்தையிம் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. தொடர்ந்து நடந்து வரும் போரால் இரு தரப்பு ராணுவ வீரர்களும்
ரஷ்யவீரர், 10ஆண்டு, சிறை, தண்டனை, ரஷ்யஅதிபர், புடின், Vladimir Putin, புடின், விளாதிமிர்புடின், Russian , Putin, punishment,  voluntary,  surrender, desertion,  10years,  jail

மாஸ்கோ: உக்ரைன் மீது ரஷ்யா போர் நடத்தி வரும் நிலையில், ரஷ்ய வீரர்கள் சரணடைய கூடாது, மீறினால் 10 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்படும் என ரஷ்ய அதிபர் புடின் எச்சரித்துள்ளார்.


உக்ரைன் மீது ரஷ்யா போரை தொடங்கி 6 மாதங்கள் கடந்துவிட்ட போதிலும் போர் நிறுத்தம் குறித்த பேச்சுவார்த்தையிம் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. தொடர்ந்து நடந்து வரும் போரால் இரு தரப்பு ராணுவ வீரர்களும் உயிரிழந்து வருவதுடன், பொதுமக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.


இந்நிலையில் உக்ரைனில் போரில் ஈடுபட்டுள்ள ரஷ்ய ராணுவ வீரர்கள் எக்காரணம் கொண்டும் உக்ரைனிடம் சரணடைய கூடாது என ரஷ்ய அதிபர் புடின் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, சரணடையும் வீரர்களுக்கு 10 ஆண்டுகள் கடும் சிறை தண்டனை விதிக்கும் சட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளார்.



latest tamil news



உக்ரைனில் ஒரு ராணுவ நடவடிக்கையை எதிர்த்துப் போராடும் அவரது ராணுவத்தின் அணிகளை அதிகரிக்க வடிவமைக்கப்பட்ட அணிதிரட்டலைத் தொடர்ந்து, ரஷ்ய ராணுவத்தில் சேரும் வெளிநாட்டினருக்கு ரஷ்ய குடியுரிமையை அணுகுவதற்கான ஒரு தனி சட்டம் கையெழுத்திடப்பட்டதாக கூறப்படுகிறது.


புடினின் இந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரத்தில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் உக்ரைனிடம் சரணடையும் ரஷ்ய ராணுவ வீரர்கள் உக்ரைன் நாட்டு பொதுமக்களை போலவே கருதி நடத்தப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raajaa -  ( Posted via: Dinamalar Android App )
25-செப்-202221:51:30 IST Report Abuse
Raajaa JINGBING நிலைமை இவருக்கும் வரும்.
Rate this:
Cancel
25-செப்-202220:14:18 IST Report Abuse
SUBBU,MADURAI ரஷ்ய அதிபர் புடின் இன்னமும் பிடிவாதம் பிடிக்காமல் தன் வீராப்பை விட்டு விட்டு பிரதமர் மோடி சொன்னது போல் அமைதி பேச்சு வார்த்தை நடத்திதேவையில்லாமல் நடந்து கொண்டிருக்கிற இந்த போரை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும்.ஏனென்றால் போர்கள நிலவரம் அவருக்கு சாதகமாக இல்லை.இதனால் அந்த நாட்டில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக வின்னளவிற்கு உயர்ந்த விலையேற்றத்தியால் ரஷ்ய மக்கள் மிகவும் வெறுப்படைந்து போய் இருக்கிறார்கள்.எனவே ரஷ்ய அதிபர் புடின் போரை நிறுத்திக் கொள்வது அவருக்கும் நாட்டுக்கும் நல்லது.இல்லையென்றால் கோபத்தில் இருக்கும் ரஷ்ய மக்களின் புரட்சியால் அந்த நாடு இன்னும் மூன்று நான்கு நாடுகளாக சிதறுண்டு போவது உறுதி.
Rate this:
Cancel
Soumya - Trichy,இந்தியா
25-செப்-202219:59:03 IST Report Abuse
Soumya இங்க குண்டு தாக்குதல் காட்டேரி மூர்க்க பயங்கரவாதிகளை என்கவுண்டரில் கதையை முடிக்கனும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X