பாலாற்றின் குறுக்கே புதிதாக தடுப்பணை முயற்சியை முதல்வர் ஸ்டாலின் தடுக்கணும்: இபிஎஸ் சாடல்

Updated : செப் 25, 2022 | Added : செப் 25, 2022 | கருத்துகள் (6) | |
Advertisement
சென்னை: பாலாற்றின் குறுக்கே புதிதாக தடுப்பணைகளை கட்ட முயற்சிக்கும் ஆந்திர அரசின் முயற்சிகளை திமுக அரசின் முதல்வர் உடனடியாக தடுக்கவேண்டும் என அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.இது அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் 5 மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் ஆந்திர மாநில அரசு பாலாற்றின் குறுக்கே

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: பாலாற்றின் குறுக்கே புதிதாக தடுப்பணைகளை கட்ட முயற்சிக்கும் ஆந்திர அரசின் முயற்சிகளை திமுக அரசின் முதல்வர் உடனடியாக தடுக்கவேண்டும் என அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
latest tamil newsஇது அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் 5 மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் ஆந்திர மாநில அரசு பாலாற்றின் குறுக்கே புதிதாக தடுப்பணைகளை கட்டப்போவதாக அறிவித்துள்ளது.


தமிழக மக்களுக்கு விடியலைத் தருவோம் என்று பசப்பு வார்த்தைகளைக் கூறி ஆட்சிக்கு வந்த இந்த கையாலாகாத அரசு இதை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்காதது வெட்கக் கேடானது. பாலாற்றின் குறுக்கே புதிதாக தடுப்பணைகளை கட்ட முயற்சிக்கும் ஆந்திர அரசின் முயற்சிகளை திமுக அரசின் முதல்வர் உடனடியாக தடுக்கவேண்டும். ஆந்திராவில் தற்போது ஆட்சியில் இருக்கும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் அரசு தமிழக மக்களை வஞ்சிக்கும் வகையில், பல்வேறு அணை கட்டும் திட்டங்களை முன்னெடுத்து வருகிறது.


எந்த ஒரு மாநிலமும், தன் கீழ் பகுதி மாநிலங்களின் ஒப்புதல் இல்லாமல் ஆற்றின் குறுக்கே எந்தவித கட்டுமான பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது என்று நீதிமன்ற தீர்ப்பு உள்ளது. தற்போதைய ஆந்திர அரசு இதையெல்லாம் கடைபிடிக்காமல், தான்தோன்றித் தனமாக பல்வேறு கட்டுமான பணிகளை பாலாற்றின் குறுக்கே மேற்கொள்வது வேதனையை தருகிறது.


தமிழக எல்லையில் உள்ள ஆந்திர மாநிலம், குப்பம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அணி மிகனிபள்ளே என்ற இடத்தில் பொதுக் கூட்டம் ஒன்றில் அம்மாநில முதல்வர் பேசும்போது, தமிழகம் மற்றும் ஆந்திர எல்லையில் கனகதாச்சியம்மன் கோவில் அருகே இருக்கும் நீர்தேக்கத்தில் தண்ணீர் சேகரிக்கும் அளவை உயர்த்தப் போவதாக கூறியுள்ளார்.


இதற்காக 120 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளதாகவும் அறிவித்துள்ளார். குடிப்பள்ளி என்ற இடத்திலும், சாந்திபுரம் என்ற இடத்திலும் நீர் தேக்கங்கள் கட்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், இதற்காக 250 கோடி ஒதுக்கியுள்ளதாகவும் ஆந்திர முதல்வர் அறிவித்துள்ளார்.


கர்நாடகத்தின் நந்திதுர்கா மலையில் உருவாகி, ஆந்திராவில் 93 கி.மீ. தூரம் பயணித்து, அம்மாநிலத்தின் குப்பம் மாவட்டத்தில் 33 கி.மீ. பயணிக்கிறது. பின்பு நம் தமிழகத்தின் வாணியம்பாடி அருகே புல்லூரில் தடம் பதிக்கிறது. சென்னையை அடுத்த கல்பாக்கம் அருகே வயலூரில் கடலில் கலக்கிறது.latest tamil newsஆண்டுதோறும் பாலாற்றில் குறைந்த பட்சம் 80 டிஎம்சி தண்ணீர் உற்பத்தியாகிறது என்று அளவீடுகள் தெரிவிக்கின்றன. இதில் கர்நாடகா 20 டிஎம்சியும், ஆந்திரா 20 டிஎம்சியும், தமிழகம் 40 டிஎம்சி தண்ணீரும் பங்கீட்டு கொள்ள வேண்டும் என்பது மூன்று மாநிலங்களுக்கிடையிலான ஒப்பந்தம்.


ஆனால், தற்போது கூடுதல் நீர்தேக்கம் கட்ட ஆந்திர அரசு நடவடிக்கை எடுத்து வருவது தமிழக விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் செயலாகும். ஆந்திர அரசின் இந்த அதிரடி திட்டம் குறித்து நன்கு அறிந்தும், திமுக அரசின் முதல்வர் ஸ்டாலினும், நீர்வளத்துறையும் எதிர்ப்பு தெரிவிக்காமல் கள்ள மவுனம் சாதிப்பது ஏன் என்று தெரியவில்லை.latest tamil newsகும்பகர்ண தூக்கத்தை கைவிட்டு விட்டு, உடனடியாக ஆந்திர அரசின் இந்த போக்கை தடுத்து நிறுத்த வேண்டும் என்று அதிமுக வலியுறுத்துகிறது. இந்த அரசு நீதிமன்றத்தின் மூலமாக இதற்கு தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Balasubramanyan - Chennai,இந்தியா
26-செப்-202204:45:54 IST Report Abuse
Balasubramanyan When you and cvshanmugam.and munusamy demonstrate against Andra Cmin Palar river or at Kuppam continuously till end or one day demonstration.
Rate this:
Cancel
Aarkay - Pondy,இந்தியா
26-செப்-202200:11:50 IST Report Abuse
Aarkay கர்நாடகத்திலிருந்து வரும் தண்ணீர் வீணாய் கடலில் கலக்கிறதே உங்கள் ஆட்சிக்காலத்தில் நீங்கள் வீணாகும் நீரை சேமிக்க எவ்வளவு தடுப்பணைகள் கட்டினீர். எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள். எதிர்க்கட்சி வரிசையில் அமரும்போது முதலைக்கண்ணீர் விடுவதும், ஆட்சியில் அமர்ந்தபின் நாற்காலியை காப்பாற்றிகொள்ள எல்லாவிதமான சமரசங்களை செய்துகொள்வதும். எங்கள் நிலைமை கூரைக்கு கொல்லி வைக்கும் மகனே நல்லவன் என சொல்லிக்கொள்ளும் தாய் போன்றாகிவிட்டது. மக்களை கொள்ளை அடிப்பவர்கள் மக்கள் பிரதிநிதிகள்.
Rate this:
Cancel
Mohan - Thanjavur ,இந்தியா
25-செப்-202221:55:02 IST Report Abuse
Mohan இங்க தமிழகத்துல இந்துக்களுக்கு குறுக்கே பெரிய அணை கட்டிக்கிட்டு இருக்கானுங்க. அதைப்பற்றி குரல் உடுங்கப்பு.
Rate this:
Democracy - Madurai,இந்தியா
26-செப்-202200:01:04 IST Report Abuse
Democracyசுயமரியாதை உள்ளவனுக்கு அது அணை இல்லை. அது படிக்கட்டு....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X