கோவை குண்டு வீச்சு: எஸ்.டி.பி.ஐ., கட்சியினர் 2 பேர் கைது:கமிஷனர் பாலகிருஷ்ணன் தகவல்

Updated : செப் 25, 2022 | Added : செப் 25, 2022 | கருத்துகள் (16) | |
Advertisement
கோவை:கோவையில் நடந்த குண்டு வீச்சு சம்பவங்களில் தொடர்புடைய எஸ்.டி.பி.ஐ., கட்சியினர் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.கோவையில் மாவட்ட பா.ஜ., அலுவலகம் உட்பட 6 வெவ்வேறு இடங்களில், கெரசின் மற்றும் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. பெரும் பதட்டத்தை ஏற்படுத்திய இந்த சம்பவங்கள் தொடர்பாக விசாரிக்க, 18 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.தனிப்படையினர், 500க்கும் மேற்பட்ட இடங்களில்

கோவை:கோவையில் நடந்த குண்டு வீச்சு சம்பவங்களில் தொடர்புடைய எஸ்.டி.பி.ஐ., கட்சியினர் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.latest tamil newsகோவையில் மாவட்ட பா.ஜ., அலுவலகம் உட்பட 6 வெவ்வேறு இடங்களில், கெரசின் மற்றும் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. பெரும் பதட்டத்தை ஏற்படுத்திய இந்த சம்பவங்கள் தொடர்பாக விசாரிக்க, 18 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

தனிப்படையினர், 500க்கும் மேற்பட்ட இடங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட சிசிடிவி கண்காணிப்பு கேமரா காட்சிப்பதிவுகளை ஆய்வு செய்தனர். இதில், இரு வழக்குகளில் துப்பு துலங்கியுள்ளது.


இது குறித்து கமிஷனர் பாலகிருஷ்ணன் கூறியதாவது:செப்.,23ம் தேதி குனியமுத்துாரில் இந்து முன்னணி பொறுப்பாளர் ரகு வீட்டின் முன் நிறுத்தியிருந்த கார் மீது எரிபொருள் ஊற்றி, அதில் தீ பற்ற வைத்த சம்பவம் நடந்தது.அதே நாளில், குனியமுத்துாரில் பா.ஜ., உறுப்பினர் தியாகு என்பவர் வீட்டில், கெரசின் குண்டு வீசப்பட்டது.


இந்த சம்பவங்கள் தொடர்பாக, இரு சமூகத்தினர் இடையே பிளவு ஏற்படுத்தும் செயல், தீ வைத்து தாக்குதல் நடத்துவது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குகள் பதியப்பட்டது.

தனித்தனியாக மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. நுண்ணறிவு சேகரித்தல், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தல், மற்ற வகையில் புலன் விசாரணை செய்தல் ஆகியவற்றின் முடிவில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


முதல் சம்பவம் தொடர்பாக, மதுக்கரை அறிவொளி நகரில் வசிக்கும் ஜேசுராஜ், 34, என்பவர் கைது செய்யப்பட்டார். இவர், ஏற்கனவே குனியமுத்துாரில் வசித்தவர்.இரண்டாம் சம்பவம் தொடர்பாக, குனியமுத்துார் திருவள்ளுவர் நகரை சேர்ந்த இலியாஸ், 34, என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த இருவரும், எஸ்.டி.பி.ஐ., கட்சியில் பொறுப்பாளர்களாக இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.latest tamil newsகண்காணிப்பு கேமரா பதிவுகள் மற்றும் தொழில்நுட்ப விசாரணை, நுண்ணறிவு தகவல்கள் மூலமாகவும், இவர்கள் குற்றவாளிகள் என்று கண்டறியப்பட்டது.கோவை மாநகரில், மொத்தம் 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதில் 2 வழக்குகளில் தொடர்புடைய நபர்கள் கைது செய்யப் பட்டு உள்ளனர். மற்ற வழக்குகளிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.கூடிய விரைவில் கைது நடவடிக்கை இருக்கும்.இவ்வாறு கமிஷனர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார். பேட்டியின்போது, கோவை தெற்கு துணை கமிஷனர் சிலம்பரசன் உடன் இருந்தார்.
ஈரோட்டில் 4 பேர் கைது


ஈரோட்டில் டீசல் குண்டு வீசிய வழக்கில் எஸ்.டி.பி.ஐ.,கட்சியை சேர்ந்த ஒருவர் உட்பட 4 பேர் கைது.மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர் தகவல்.


சதாம் உசேன்,25. ஆஷிக்,23. ஜாபர்,27. கலீல் ரகுமான்,28. ஆகிய 4 பேர் ஆவர்.இதில் சதாம் உசேன் எஸ். டி.பி.ஐ.,கட்சியை சேர்ந்தவர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
26-செப்-202205:51:49 IST Report Abuse
NicoleThomson நான் பயந்து கொண்டிருந்தேன் அது நடக்க ஆரம்பித்துள்ளது , இதனை முளையிலேயே கிள்ளி எரிய வேண்டும் , மன்னா தயவு செய்து இலவச பிரியாணிக்காக நாட்டை கூறு போட்டு விடாதே
Rate this:
Cancel
25-செப்-202223:19:42 IST Report Abuse
Gopala Krishnan_பொள்ளாச்சி கைதுக்கு கூட ஜமாஅத் தலைவர்களை கூப்பிட்டு அனுமதி வாங்கி கைது செய்யப்பட்டு உள்ளது......சிறப்பு மிகச் சிறப்பாக சட்டம் தனது கடமையைச் செய்கிறது
Rate this:
Cancel
தியாகு - கன்னியாகுமரி ,இந்தியா
25-செப்-202221:59:54 IST Report Abuse
தியாகு கோவை குண்டு வீச்சு: எஸ்.டி.பி.ஐ., கட்சியினர் 2 பேர் கைது. ஹி...ஹி...ஹி...பக்கத்து மாநிலம் கேரளாவில் ஒரே நாளில் நூற்று முப்பது பேரை கைதுசெய்து அசம்பாவிதம் பரவாமல் பார்த்துக்கொண்டாரகள். நம்ம டுமிழகத்தில் பதினைந்து இடங்களில் குண்டு வெடித்த பிறகு வெறும் இரண்டு பேரை கைது செய்துள்ளார்கள். விளங்கிடும் டுமிழ்நாட்டு சட்டம் ஒழுங்கும் விடியாத ஆட்சியும்.
Rate this:
Cheran Perumal - Radhapuram,இந்தியா
26-செப்-202206:13:54 IST Report Abuse
Cheran Perumalஇந்த இரண்டு பேருமே அந்த கட்சித்தலைவர்களால் ஒப்புக்கு கொடுக்கப்பட்ட நபர்களாக இருப்பர். குற்றம் செய்தவர்கள் அடுத்த குற்றத்திற்கு தங்களை தயார் செய்து கொண்டிருப்பார்கள். இவர்களிடம்தான் தாக்கப்படவேண்டியவர்களின் லிஸ்ட் உள்ளதே?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X