ராஜஸ்தானில் அடுத்த முதல்வர் யார்? கெலாட் ஆதரவு எம்.எல்.ஏக்கள் ராஜினாமா?

Updated : செப் 25, 2022 | Added : செப் 25, 2022 | கருத்துகள் (12) | |
Advertisement
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான்மாநிலத்தில் முதல்வர் கெலாட் ஆதரவு எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இதனால் யார் முதல்வர் ஆவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வராக இருந்து வருபவர் அசோக்கெலாட். சச்சின் பைலட் துணை முதல்வராக இருந்து வருகிறார். முதல்வர் பதவி வகிப்பதில் இருவருக்கும் மோதல் நிலவி வருகிறது.

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான்மாநிலத்தில் முதல்வர் கெலாட் ஆதரவு எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இதனால் யார் முதல்வர் ஆவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.



latest tamil news



ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வராக இருந்து வருபவர் அசோக்கெலாட். சச்சின் பைலட் துணை முதல்வராக இருந்து வருகிறார். முதல்வர் பதவி வகிப்பதில் இருவருக்கும் மோதல் நிலவி வருகிறது. இந்நிலையில் அடுத்து வரும் அக்டோபர் மாதத்தில் நடைபெற உள்ள காங்கிரஸ் கட்சி தேர்தலில் தலைமைப்பதவிக்கு அசோக் கெலாட் போட்டியிட உள்ளார். இதனையடுத்து முதல்வர் பதவிக்கு யார் வருவர் என்ற கேள்வி எழுந்தது. சச்சின் பைலட்டுக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் அசோக்கெலாட் ஆதரவு எம்.எல்.ஏக்கள் சச்சின் பைலட் முதல்வர் ஆவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதுடன் அவர் பா.ஜ., ஆதரவாளர் என கூறி வருகின்றனர்.


latest tamil news



இதனிடையே அசோக்கெலாட் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 82 பேர் வரையில் தங்களது பதவியை ராஜினாமா செய்ய தயாராக உள்ளதாகவும் ,அவர்கள் அனைவரும் சபாநாயகர் இல்லத்திற்கு செல்ல உள்ளாதகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


கெலாட் இல்லத்தில் ஆலோசனை


முதல்வர் கெலாட் தலைமையில் காங்கிரஸ் சட்டமன்றக்குழு கூட்டம் துவங்கியது. கூட்டத்தில் மல்லிகாஜூனே கார்கே, அஜய் மக்கான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் புதிய முதல்வர் தேர்வு பற்றி விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Fastrack - Redmond,இந்தியா
26-செப்-202206:08:57 IST Report Abuse
Fastrack கெஹலோட் மகனை முதல்வராக்கும் முயற்சி
Rate this:
Cancel
Cheran Perumal - Radhapuram,இந்தியா
26-செப்-202206:01:21 IST Report Abuse
Cheran Perumal அஹமது பட்டேல் போய்விட்டதால் தற்போது காங்கிரசின் பண மூட்டை கெலாட் தான். அவர் சொல்வதுதான் நடக்கும்.
Rate this:
Cancel
RAJAA -  ( Posted via: Dinamalar Android App )
26-செப்-202202:00:38 IST Report Abuse
RAJAA அதற்குத்தான் நல்ல நாள் ஹோரை யோகம் கர்ணம் பார்த்து யாத்திரை தொடங்க வேண்டும் என்பது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X