விடுதி பெண் ஊழியர் கொலை போராட்டத்தால் பதற்றம்

Updated : செப் 25, 2022 | Added : செப் 25, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
டேராடூன்:உத்தரகண்டில், பா.ஜ., தலைவரின் சொகுசு விடுதியில் பெண் ஊழியர் கொல்லப்பட்ட விவகாரத்தில் பெண்ணின் குடும்பத்தினர், உறவினர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவதால் அங்கு பதற்றம் நிலவுகிறது. உத்தரகண்டில், முதல்வர் புஷ்கர் சிங் தாமி தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, பவுரி மாவட்டம் ரிஷிகேஷ் அருகே யாம்கேஷ்வர் என்ற இடத்தில், பா.ஜ., மூத்த தலைவரானவினோத் ஆர்யாவின்

டேராடூன்:உத்தரகண்டில், பா.ஜ., தலைவரின் சொகுசு விடுதியில் பெண் ஊழியர் கொல்லப்பட்ட விவகாரத்தில் பெண்ணின் குடும்பத்தினர், உறவினர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவதால் அங்கு பதற்றம் நிலவுகிறது.



latest tamil news



உத்தரகண்டில், முதல்வர் புஷ்கர் சிங் தாமி தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, பவுரி மாவட்டம் ரிஷிகேஷ் அருகே யாம்கேஷ்வர் என்ற இடத்தில், பா.ஜ., மூத்த தலைவரான
வினோத் ஆர்யாவின் மகன் புல்கித் ஆர்யா சொகுசு விடுதி நடத்தி வந்தார். இங்கு, அங்கிதா

பண்டாரி, 19, என்ற பெண் வரவேற்பாளராக பணியாற்றினார்.


விடுதியில் தங்கும் விருந்தினர்களுடன் உல்லாசமாக இருக்க, அங்கிதாவை புல்கித் வற்புறுத்தியுள்ளார். மறுத்த அங்கிதாவை கொலை செய்து, அருகில் உள்ள கால்வாயில் வீசியுள்ளார்.

நேற்று முன்தினம் காலை, கால்வாயில் இருந்து அங்கிதா உடல் மீட்கப்பட்டது. இது குறித்து விசாரித்த போலீசார், புல்கித் ஆர்யா மற்றும் விடுதி நிர்வாகிகள் இருவர் என, மூன்று பேரை கைது செய்தனர்.


இந்நிலையில், அங்கிதா உடல் ரிஷிகேஷ் எய்ம்ஸ் மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டது. முதற்கட்ட அறிக்கையில், நீரில் மூழ்கியதால் அங்கிதா உயிரிழந்ததாக
கூறப்பட்டுள்ளது.இதை ஏற்க மறுத்த அங்கிதா குடும்பத்தினர் கூறியதாவது:
பா.ஜ., பிரமுகருக்கு சொந்தமான விடுதியை, அதிகாரிகள் அவசரம் அவசரமாக இடித்து
தள்ளியுள்ளனர். ஆதாரங்களை அழிப்பதற்காக, இதுபோல் நடந்திருக்கலாம் என சந்தேகம்

உள்ளது.


latest tamil news



எனவே, பிரேத பரிசோதனை தொடர்பான இறுதி அறிக்கை வரும் வரை, உடலை தகனம் செய்ய மாட்டோம்.இவ்வாறு அவர்கள் கூறினர். போலீசார் பேச்சு நடத்தியதை அடுத்து, பின்

சமாதானமாகி, உடலை தகனம் செய்ய சம்மதித்தனர். ஆனால், அந்த பகுதி மக்களுடன் இணைந்து,அங்கிதாவின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதால் பதற்றம் நிலவுகிறது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sampath Kumar - chennai,இந்தியா
27-செப்-202210:37:55 IST Report Abuse
Sampath Kumar பிஜேபி காரன் யாரும் இதுக்கு பதில் சொல்ல மாட்டான் வாயில் கொழுக்கட்டை வைத்து இருப்பான் கொலு சீசன் அப்படியே பம்பி ஓடி விடுவார்கள்
Rate this:
ram - mayiladuthurai,இந்தியா
27-செப்-202214:12:16 IST Report Abuse
ramஏற்கனவே அந்த நபரை கட்சியை விட்டு நீக்கி விட்டார்கள், அந்த விடுதியையும் இடித்து விட்டார்கள், அதில் சம்பந்தப்பட்ட நபரை கைது செய்து விட்டார்கள். அங்கு இங்கு இருக்கும் திருட்டு உருட்டு ஆட்சி கிடையாது....
Rate this:
Cancel
Manguni - bangalore,இந்தியா
26-செப்-202201:08:15 IST Report Abuse
Manguni இந்த aar
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X