தினசரி இயக்கப்படுமா சிலம்பு எக்ஸ்பிரஸ்; தென்மாவட்ட பயணிகள் எதிர்பார்ப்பு

Updated : செப் 26, 2022 | Added : செப் 26, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
ஸ்ரீவில்லிபுத்தூர் : சென்னையில் இருந்து சிவகங்கை, விருதுநகர் வழியாக செங்கோட்டை வரை தற்போது வாரத்தில் மூன்று நாட்கள் இயங்கும் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயிலை, தினசரி சேவையாக இயக்க தென் மாவட்ட மக்கள் எதிர்பார்க்கின்றனர்.2013 ஜூன் மாதம் காரைக்குடி வரை இயக்கப்பட்ட சிலம்பு எக்ஸ்பிரஸ், பின்னர் மானாமதுரை வரை நீட்டிப்பு செய்யப்பட்டது. 2017ல் செங்கோட்டை வரை நீட்டிப்பு செய்யப்பட்டு
Silambu Express, train, Indian Railways,சிலம்பு எக்ஸ்பிரஸ்

ஸ்ரீவில்லிபுத்தூர் : சென்னையில் இருந்து சிவகங்கை, விருதுநகர் வழியாக செங்கோட்டை வரை தற்போது வாரத்தில் மூன்று நாட்கள் இயங்கும் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயிலை, தினசரி சேவையாக இயக்க தென் மாவட்ட மக்கள் எதிர்பார்க்கின்றனர்.



2013 ஜூன் மாதம் காரைக்குடி வரை இயக்கப்பட்ட சிலம்பு எக்ஸ்பிரஸ், பின்னர் மானாமதுரை வரை நீட்டிப்பு செய்யப்பட்டது. 2017ல் செங்கோட்டை வரை நீட்டிப்பு செய்யப்பட்டு தற்போது வாரம் மூன்று நாட்கள் மட்டுமே இயங்கி வருகிறது.இந்த ரயிலின் மூலம் திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கேரள மக்கள் பயனடைந்து வந்தனர்.இதனால் சிலம்பு எக்ஸ்பிரஸில் பயணிப்பவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது.



latest tamil news


பொதிகை எக்ஸ்பிரஸில் சீட் கிடைக்காதவர்கள் சிலம்பு ரயிலின் மூலம் பயணித்து வந்தனர்.தற்போது கொரோனா பரவல் முடிவடைந்து இயல்பு வாழ்க்கை துவங்கிய நிலையில் தென் மாவட்ட மக்கள் அதிகளவில் சென்னைக்கு பயணிக்கின்றனர். இதில் தென்காசி, விருதுநகர், சிவகங்கை மாவட்ட பயணிகள் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயிலை பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது.



ஆனால், ஞாயிறு, தொடர் விடுமுறை, கோடை விடுமுறை, பண்டிகை விடுமுறை நாட்களில் சிலம்பு எக்ஸ்பிரஸில் கூட டிக்கெட் கிடைப்பதில்லை. இதனால் தென் மாவட்ட பயணிகள் சிரமத்துடன் பயணிக்கின்றனர். தற்போது 10 ஆண்டுகளை தொடவுள்ள சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயிலை, தினசரி சேவையாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
26-செப்-202207:54:26 IST Report Abuse
அப்புசாமி என்னவோ தினசரி வாக் பிற மாதிரி எதிர்பாக்குறாங்க. சென்னை எழும்பூரில் ரேக்குகளை நிறுத்த இடமில்லை. கொஞ்சம் கொஞ்சமா செங்கல்பட்டு வரை ரேக்குகளை நிறுத்தி வைக்கிறார்கள். உள்கட்டமைப்பு இல்லாம ரயிலை ஓட்டு ரயிலை ஓட்டுன்னா எப்புடி?
Rate this:
Cancel
Desi - Chennai,இந்தியா
26-செப்-202201:46:58 IST Report Abuse
Desi The Vidiyal Arasuku தானே வோட்டு போட்டீங்க...அந்த 39 MPளை கேளுங்க
Rate this:
26-செப்-202216:54:30 IST Report Abuse
venugopal sஇப்படியே திமிராகப் பேசிக்கொண்டு இருங்கள், அடுத்த பாராளுமன்ற தேர்தலிலும் தமிழகத்தில் ஒரு தொகுதியிலும் வெற்றி பெற மாட்டீர்கள்!...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X