அனைத்து மாநிலங்களிலும் திராவிட மாடல் கொள்கை: முதல்வர் ஸ்டாலின் ஆசை

Updated : செப் 26, 2022 | Added : செப் 26, 2022 | கருத்துகள் (34) | |
Advertisement
சென்னை : ''தமிழகத்தை உச்சத்துக்கு கொண்டு வருவதற்காகவே, திராவிட மாடல் கொள்கை வடிவமைக்கப்பட்டு உள்ளது. திராவிட மாடல் கொள்கை, அனைத்து மாநிலங்களுக்கும் பரவ வேண்டும்,'' என, முதல்வர் ஸ்டாலின் பேசினார்.கனடா நாட்டின் டொரோன்டோ நகரில் நடந்த, மூன்றாவது பன்னாட்டு மனிதநேயம்- சமூக நீதி மாநாட்டில், 'ஆன்லைன்' வாயிலாக பங்கேற்று, முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: இந்த மாநாட்டில்,
DMK, MK Stalin, Stalin, ஸ்டாலின்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை : ''தமிழகத்தை உச்சத்துக்கு கொண்டு வருவதற்காகவே, திராவிட மாடல் கொள்கை வடிவமைக்கப்பட்டு உள்ளது. திராவிட மாடல் கொள்கை, அனைத்து மாநிலங்களுக்கும் பரவ வேண்டும்,'' என, முதல்வர் ஸ்டாலின் பேசினார்.



கனடா நாட்டின் டொரோன்டோ நகரில் நடந்த, மூன்றாவது பன்னாட்டு மனிதநேயம்- சமூக நீதி மாநாட்டில், 'ஆன்லைன்' வாயிலாக பங்கேற்று, முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: இந்த மாநாட்டில், சமூக நீதி மண்ணில் இருந்தபடியே நான் பங்கேற்கிறேன். திராவிட மாடல் ஆட்சி நடக்கும் தமிழகத்தில் இருந்து பேசுகிறேன். திராவிட மாடல் ஆட்சியின் மைய கொள்கை என்பது மனிதநேயமும், சமூக நீதியும் தான்.



அனைத்து இடங்களிலும், சமூக நீதியை நிலைநாட்டி வருகிறோம். வகுப்புரிமை எனப்படும், இடஒதுக்கீடு அனைவருக்கும் சம விகிதத்தில் தரப்பட்டு வருகிறது. பெண்களின் பொருளாதார முன்னேற்றத்துக்காக இலவச பஸ் பயண வசதி செய்து தரப்பட்டுள்ளது.தமிழ் தாய் வாழ்த்து, மாநில பாடலாக அறிவிக்கப்பட்டு உள்ளது. வேலைவாய்ப்பை அடைவதற்கு, தாய்மொழி அறிவு கட்டாயமாகி உள்ளது.



latest tamil news


உயர் கல்வி பெறும், அரசு பள்ளி மாணவியருக்கு மாதம் 1,000 ரூபாய் தரப்படுகிறது. அரசு பள்ளி பிள்ளைகளுக்கு காலை உணவு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து மாணவ, மாணவியரையும் தகுதியுள்ளவர்களாக்க, 'நான் முதல்வர் திட்டம்' அமலில் உள்ளது. இப்படி எண்ணற்ற திராவிட மாடல் திட்டங்களை தீட்டி, தமிழகத்தை வளப்படுத்தி வருகிறோம்.



கடந்த, 50 ஆண்டு காலமாக உருவாக்கப்பட்ட இடஒதுக்கீட்டு உரிமைகள், இரு மொழி கொள்கை, தமிழ்மொழி மேம்பாடு, உள்கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றின் காரணமாக, தமிழகம் மிகப்பெரிய வளர்ச்சியை பெற்றுள்ளது.



தமிழகத்தை மேலும் உச்சத்துக்கு கொண்டு வருவதற்காகவே, திராவிட மாடல் கொள்கை வடிவமைக்கப்பட்டு உள்ளது. இந்தக் கொள்கை, நாட்டின் அனைத்து மாநிலங்களுக்கும் பரவ வேண்டும். பல்வேறு மாநில அரசு களும், திராவிட மாடல் கொள்கை, கோட்பாடுகளை அறிவதற்கு ஆர்வமாக இருக்கின்றன. தங்கள் மாநிலத்தில், அதை நடைமுறைப்படுத்த துடிப்புடன் இருக்கின்றன.இவ்வாறு முதல்வர் பேசினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (34)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
26-செப்-202219:05:41 IST Report Abuse
Sathyanarayanan Sathyasekaren ......
Rate this:
Cancel
26-செப்-202215:43:07 IST Report Abuse
ஆரூர் ரங் திராவிட🙃🙃 மாடல் என்றால் அதுதானே?.
Rate this:
Cancel
26-செப்-202213:14:40 IST Report Abuse
அருணா ஒரு ராசா ஒரு திருமா ஒரு திக தலைவர் போதுமா ஆசைக்கு. நிராசை தான்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X