'மிருக குணம் கொண்டோர் நாட்டில் திரியக் கூடாது'

Updated : செப் 26, 2022 | Added : செப் 26, 2022 | கருத்துகள் (61) | |
Advertisement
சென்னை : மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் அறிக்கை:தமிழகத்தில் ஹிந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ்., மற்றும் பா.ஜ.,வைச் சேர்ந்தோரின் வீடு, வாகனங்கள் மீதான பெட்ரோல் குண்டு வீச்சு, தீவைப்பு சம்பவங்கள் மிகவும் அதிர்ச்சி அளிக்கின்றன.ஒரே நாளில் பல இடங்களில் வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளன. இதைத் தொடர்ந்து, ஆயிரக்கணக்கான போலீசார் மற்றும் அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டுள்ளது,
Kamal, Petrol Bomb, MNM, கமல், பெட்ரோல் குண்டு, அமைதிப்பூங்கா, தமிழகம், சென்னை, மக்கள் நீதி மய்யம்,Tamil Nadu, Chennai, Makkal neethi maiyam,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphoneசென்னை : மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் அறிக்கை:தமிழகத்தில் ஹிந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ்., மற்றும் பா.ஜ.,வைச் சேர்ந்தோரின் வீடு, வாகனங்கள் மீதான பெட்ரோல் குண்டு வீச்சு, தீவைப்பு சம்பவங்கள் மிகவும் அதிர்ச்சி அளிக்கின்றன.ஒரே நாளில் பல இடங்களில் வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளன. இதைத் தொடர்ந்து, ஆயிரக்கணக்கான போலீசார் மற்றும் அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டுள்ளது,மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவங்களில் ஈடுபட்ட மர்ம நபர்களில் யாரும், இதுவரை கைது செய்யப்படவில்லை. ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ள யாரும், இதுபோன்ற வன்முறையை பார்த்து அமைதியாக இருக்க மாட்டார்கள். இதுபோன்ற சம்பவங்கள், மிகப்பெரிய அளவில் கலவரங்களை துாண்டி விடும் அபாயம் கொண்டவை.மக்கள் நீதி மய்யம், பா.ஜ., ரசிகர்கள் அல்ல. ஆனால், ஜனநாயகத்தின் தொண்டர்கள். அரசியல் மக்களுக்கானது; வன்முறையால், அதை வெல்ல முற்படுவது மிருக குணம்.அத்ததைய மிருக குணம் கொண்டோர் யாராக இருந்தாலும், அவர்கள் நாட்டில் திரிய வேண்டியவர்களே அல்ல.latest tamil news


'அமைதிப் பூங்கா' என்று பெயரெடுத்த தமிழகத்தை, வெடிகுண்டு கலவர கலாசாரத்துக்கு மாற்ற முயல்வோரை, இரும்புக்கரம் கொண்டு அடக்கி, சட்டம்- - ஒழுங்கையும், அமைதியையும் பாதுகாக்க வேண்டும்.இவ்வாறு கமல் கூறியுள்ளார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (61)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jayvee - chennai,இந்தியா
27-செப்-202211:20:35 IST Report Abuse
jayvee மையம் தலைவர் .. மய்யம் தலைவர்.. கடவுள் பாதி மிருகம் பாதி..
Rate this:
Cancel
venugopal s -  ( Posted via: Dinamalar Android App )
26-செப்-202223:46:46 IST Report Abuse
venugopal s இவர் வழக்கம் போல் குட்டையைக் குழப்பி யாருக்கும் புரியாத மாதிரி அறிக்கை விட்டு விட்டார்.
Rate this:
Cancel
S.Baliah Seer - Chennai,இந்தியா
26-செப்-202218:18:25 IST Report Abuse
S.Baliah Seer ஜீ -சொல் செயல் இரண்டிலுமே மிருக குணம் கூடாது.இரண்டு பேர் பைக்கில் எதிரும் புதிருமாக வந்தபோது இலேசாக மோதிக்கொள்கிறார்கள்.அதில் ஒருவருடைய பின் இருக்கையில் அவர் மனைவி இருக்கிறார்.அந்த மனிதர் உடனே எதிராளியைப் பார்த்து என்னசார் இப்படி தப்பா வரீங்க என்று கேட்டிருக்கலாம் .மாறாகா ஏய் மொட்டை பார்த்து வரமாட்டே என்று சொல்லி அசிங்கமாக பேச எதிர் மனிதனோ அந்த மனிதரின் மனைவியை இழுத்து அசிங்கமாக பேச சந்தி சிரித்ததுதான் மிச்சம் இதனால்தான் நம் தேசப்பிதா கிறுக்குத்தனமான கருத்துக்கள் கூட ஒரு மனிதனை வெறியனாக்கி விடும் என்றிருக்கிறார்.நம் வட மாநிலத்தவர்கள் 300-வருடங்கள் இஸ்லாமியர் ஆதிக்கத்துக்கு உட்பட்டிருந்தார்கள் என்பதற்காக இன்று பழி தீர்க்கும் நடவடிக்கைகளுக்கு தென் மாநிலங்களை பகடைக் காய்களாக ஆக்க முயற்சிப்பது தவறு.அதுமட்டுமல்ல வடமாநிலத்தவரின் கோரப்பிடியில் தென் மாநிலங்கள் சிக்கி வருவதால் அதை திசை திருப்பவே வன்முறைகள் நடை பெறுகின்றன.வெறும் 450 -சதுர அடி மனையை 40/50 -லட்சம் என்கிறார்கள்.இதை நம் மக்களால் வாங்க முடியாது.இதை வாங்கிக் குவிப்பவர்கள் யார் என்று நமக்குத் தெரியும்.மக்களின் வாழ்வாதார பிரச்சினை சாதி/மத பிரச்சினையாக மாற்றப்படுகிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X