பா.ஜ.,வினர் மீது நடவடிக்கை ஏன்? : செந்தில் பாலாஜி விளக்கம்

Updated : செப் 26, 2022 | Added : செப் 26, 2022 | கருத்துகள் (49) | |
Advertisement
கோவை---கோவையில் நடந்த, தமிழ்நாடு பிசியோதெரபிமருத்துவ சங்க விழாவில் பங்கேற்ற மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதாவது:பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக, போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்; தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. பா.ஜ.,வினர் தங்களது கோரிக்கை இருந்தால், கலெக்டர், போலீஸ் அதிகாரிகளிடம் முறையிடலாம்.அதை விடுத்து, மறியலில்ஈடுபடுவது, சட்டம் -ஒழுங்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

கோவை---கோவையில் நடந்த, தமிழ்நாடு பிசியோதெரபிமருத்துவ சங்க விழாவில் பங்கேற்ற மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதாவது:பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக, போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்; தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. பா.ஜ.,வினர் தங்களது கோரிக்கை இருந்தால், கலெக்டர், போலீஸ் அதிகாரிகளிடம் முறையிடலாம்.



latest tamil news


அதை விடுத்து, மறியலில்ஈடுபடுவது, சட்டம் -ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் செயல்படுவது போன்ற நிகழ்வுகளில் ஈடுபட்டதால், போலீசார் கைது நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.சமுக வலைதளங்களிலும், தொலைக்காட்சிகளிலும், கோவையில் பதற்றமான சூழ்நிலை நிலவுவது போல செய்திகள் வருகின்றன; இவற்றை தவிர்க்க வேண்டும்.


latest tamil news



கோவை மாவட்டத்தில் எவ்வித அசம்பாவிதமும் நடக்காத வகையில், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.அன்னுார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி, சிகிச்சையின் போது, மின்சாரம் தடைபட்டதால் உடல் நலம் பாதிக்கப்பட்டார் என்று கூறப்படுகிறது.அங்கு மின் தடை, 5 நிமிடங்கள் மட்டுமே இருந்தது. உடனடியாக சரி செய்யப்பட்டு விட்டது; நாள் முழுக்க மின் தடை ஏற்படவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.



புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (49)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jayvee - chennai,இந்தியா
27-செப்-202211:21:58 IST Report Abuse
jayvee ஆளும் கட்சியாக இருந்த போதே, சாலை மறியல் போராட்டம் செய்த கட்சி திமுக.. நீங்கள் அதை பற்றி பேசலாமா ..அமைச்சரே
Rate this:
Cancel
26-செப்-202218:09:25 IST Report Abuse
பேசும் தமிழன் திமுக... ராசா பேசியது தவறு என்று கூட்டம் நடத்தினால் கைது..... குண்டு வீசும் ஆட்களை தேடி கொண்டே இருப்பீர்கள்.... அப்படி தானே.... மக்கள் பார்த்து கொண்டு தான் இருக்கிறார்கள்..
Rate this:
Cancel
neo - Nagercoil,இந்தியா
26-செப்-202216:58:14 IST Report Abuse
neo ஒருவேளை சோற்றுக்கு வழி இல்லனாலும், நாங்க போராடத்தான் செய்வோம்,
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X