தென் ஆப்ரிக்காவில் பாரதி பெயரில் விருது

Added : செப் 26, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
ஜோஹான்னஸ்பர்க் : தென் ஆப்ரிக்காவில், மகாகவி சுப்ரமணிய பாரதியார் பெயரில் வழங்கப்படும் விருதுகள் வழங்கும் விழா, கொரோனா பரவலால் ஏற்பட்ட இரண்டாண்டு தடங்கலுக்கு பின் இந்த ஆண்டு மீண்டும் துவங்கியது.தென் ஆப்ரிக்காவின் தெற்கு ஜோஹான்னஸ்பர்கில் உள்ள லெனேஷியா என்ற இடத்தில், சிவஞான சபை என்ற ஆன்மிக அமைப்பு செயல்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் செப்டம்பர் மாதத்தை பாரம்பரிய
South Africa, Bharatiyar, Awards, தென் ஆப்ரிக்கா, சுப்ரமணிய பாரதி, பாரதியார், விருதுகள்,  Subramania Bharati,



ஜோஹான்னஸ்பர்க் : தென் ஆப்ரிக்காவில், மகாகவி சுப்ரமணிய பாரதியார் பெயரில் வழங்கப்படும் விருதுகள் வழங்கும் விழா, கொரோனா பரவலால் ஏற்பட்ட இரண்டாண்டு தடங்கலுக்கு பின் இந்த ஆண்டு மீண்டும் துவங்கியது.



தென் ஆப்ரிக்காவின் தெற்கு ஜோஹான்னஸ்பர்கில் உள்ள லெனேஷியா என்ற இடத்தில், சிவஞான சபை என்ற ஆன்மிக அமைப்பு செயல்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் செப்டம்பர் மாதத்தை பாரம்பரிய மாதமாக இந்த அமைப்பினர் கொண்டாடி வருகின்றனர். அப்போது, மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் பெயரில் விருதுகள் வழங்குவதை வழக்கமாக வைத்துள்ளனர்.



கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த விருது வழங்கும் நிகழ்வு தடைபட்டது. இந்த ஆண்டு மீண்டும் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்த முறை, கொரோனா தொற்று பரவலின் போது சிறப்பான சேவையாற்றிய தனிநபர்கள், தொண்டு அமைப்புகள் என, மொத்தம் 22 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன. ஆம்புலன்ஸ் சேவை, டாக்டர்கள், மருந்து கடையினர், மருத்துவமனை என, பல்வேறு தரப்பினருக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
26-செப்-202207:23:01 IST Report Abuse
N SASIKUMAR YADHAV பாரதி பிறந்த மண்ணில் பிராமணர் என்ற ஒரே காரணத்துக்காக தமிழக திராவிட களவானிங்க அரசு சிறுபான்களின் ஓட்டுப்பிச்சைக்காக பாரதியை புறக்கணிக்கிறது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X