சென்னை : தமிழகத்தில், 14 மாவட்டங்களில் இன்று(செப்., 26) கனமழை பெய்யும் என, வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, பல மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
விழுப்புரம், கடலுார், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, பெரம்பலுார், அரியலுார், திருச்சி, புதுக்கோட்டை, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில், இன்று கன மழை பெய்யும்.

சென்னையில் வானம் மேகமூட்டமாக காணப்படும்; இன்று மிதமான மழை பெய்யும். அதிகபட்சம், 27 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவாகும்.நேற்று காலை நிலவரப்படி, மாநிலத்தில் அதிகபட்சமாக, தஞ்சாவூர் மாவட்டம் மஞ்சளாறில், 4 செ.மீ., மழை பெய்துள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.