ஓட்டுப்பதிவு சதவீதம் உயர தகவல் ஆணையம் யோசனை

Updated : செப் 26, 2022 | Added : செப் 26, 2022 | கருத்துகள் (6) | |
Advertisement
சென்னை : 'பிரதமர், முதல்வர்கள், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள், உள்ளாட்சி பிரதிநிதிகளின் பணிகளை, ஆர்.டி.ஐ., வாயிலாக மக்கள் அறிந்து கொள்ள, தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, மாநில தகவல் ஆணையம் ஆலோசனை வழங்கியுள்ளது.சென்னை, திருவொற்றியூரை சேர்ந்த துாயமூர்த்தி என்பவர், 2021-ல் தாக்கல் செய்த மனுவை விசாரித்த, மாநில தகவல் ஆணையர் எஸ்.முத்துராஜ் பிறப்பித்த உத்தரவு:

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை : 'பிரதமர், முதல்வர்கள், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள், உள்ளாட்சி பிரதிநிதிகளின் பணிகளை, ஆர்.டி.ஐ., வாயிலாக மக்கள் அறிந்து கொள்ள, தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, மாநில தகவல் ஆணையம் ஆலோசனை வழங்கியுள்ளது.latest tamil newsசென்னை, திருவொற்றியூரை சேர்ந்த துாயமூர்த்தி என்பவர், 2021-ல் தாக்கல் செய்த மனுவை விசாரித்த, மாநில தகவல் ஆணையர் எஸ்.முத்துராஜ் பிறப்பித்த உத்தரவு: அரசியல்வாதிகளை குறை சொல்வதை, நவீன சமுதாயத்தில் பெருமையாக கருதுகின்றனர். ஏராளமான எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மக்கள் நல்லது செய்கின்றனர்; அதை யாரும் பாராட்டுவதுஇல்லை.ஓட்டு போடுவது பற்றிய தவறான கருத்தால் தான், ஓட்டு சதவீதம் குறைகிறது. சென்னையில் சில வார்டுகளில், 31 சதவீதம் ஓட்டு பதிவாகிஉள்ளது. இப்படி ஓட்டு சதவீதம் குறைந்தால், ஜனநாயகம் தோற்கடிக்கப்பட்டு விடும். இந்த நிலை வந்து விடக் கூடாது. இந்த தகவல்களும் மக்களுக்கு தெரிய வேண்டும்.


latest tamil newsபிரதமர், முதல்வர்கள், மத்திய - மாநில அமைச்சர்கள், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் செய்யும் மக்கள் பணிகள், ஆர்.டி.ஐ.,-யின் கீழ் கிடைக்க, தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான், 100 சதவீத ஓட்டுப் பதிவு சாத்தியமாகும். இவ்வாறு உத்தரவில் கூறியுள்ளார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.Baliah Seer - Chennai,இந்தியா
26-செப்-202218:39:37 IST Report Abuse
S.Baliah Seer மின்னணு வாக்கு எந்திரங்கள் வந்ததில் இருந்து மக்களிடம் வாக்கு அளிக்கும் ஆசை குறைந்து வருகிறது.ஆமாம் நாம் போடும் ஒட்டு எவனுக்கோ போய் சேருகிறது என்கிறார்கள். இரண்டாவது ஒரே நபரையே திருப்பித் திருப்பி வேட்பாளர்களாக போடும் மோசமான செயல்களை எல்லா அரசியல் கட்சிகளும் செய்கின்றன.பணக்காரர்களையும் குற்ற செயல்களில் ஈடுபடுவோர்களையும் வேட்பாளர்களாகப் போடுவதால் மக்களுக்கு தேர்தல்களில் ஆர்வம் இல்லை. அதனால்தான் அரசியல் கட்சிகள் ஏழை எளிய மக்களிடம் பணம் பொருள் கொடுத்து வாக்குப் பெறுகின்றன.சுயேச்சை வேட்பாளர்களில் ஓரிருவரை மட்டுமே குலுக்கள் முறையில் தேர்ந்தெடுத்து போட்டியிட சட்டத்தில் மாற்றம் வரவேண்டும். வாக்குச்சீட்டில் ஆறு அல்லது ஏழு பெயர்களுக்கு மேல் இருக்கக் கூடாது.இப்போது நடை பெறுபவை தேர்தல் மோசடிகள்.ஆகவே நடுத்தர மக்கள் தேர்தல்களில் ஆர்வம் காட்டுவதில்லை.
Rate this:
Cancel
neo - Nagercoil,இந்தியா
26-செப்-202216:56:17 IST Report Abuse
neo மன்னராட்சியில எதுக்குங்க தேவையில்லாம ஒரு கண்துடைப்பு ஓட்டுப்பதிவு, எல்லாத்ததையும்தான் தன்னோட கைக்குள்ள கொண்டுவந்தாச்சே.
Rate this:
Cancel
26-செப்-202213:09:38 IST Report Abuse
சிந்தனை கைப்பேசி வழியே லக்ஷம் ரூபாய் பணம் அனுப்ப முடியும் என்றால், ஏன் ஓட்டுப் போட முடியாது. இந்த வாய்ப்பு வந்தால் ஓட்டு சதவீதம் கணிசமாக உயரும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X