4, 5ம் வகுப்புகளுக்கு தொகுத்தறிதல் தேர்வு

Added : செப் 26, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
சென்னை : அரசு தொடக்க பள்ளிகளில் படிக்கும், நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, இன்று மாநில அளவிலான தொகுத்தறியும் தேர்வு நடக்கிறது.அரசு பள்ளிகளில் கல்வி கற்பித்தல், தேர்வு நடத்துதல், ஆசிரியர்கள் நியமனம் உள்ளிட்டவற்றில், பள்ளிக் கல்வி துறை பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறது.இதன்படி, அரசு பள்ளிகளில் நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, இந்த
தொகுத்தறியும் தேர்வு, அரசு பள்ளி, ஆசிரியர்கள், Comprehensive Examination, Govt School, Teachers,

சென்னை : அரசு தொடக்க பள்ளிகளில் படிக்கும், நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, இன்று மாநில அளவிலான தொகுத்தறியும் தேர்வு நடக்கிறது.



அரசு பள்ளிகளில் கல்வி கற்பித்தல், தேர்வு நடத்துதல், ஆசிரியர்கள் நியமனம் உள்ளிட்டவற்றில், பள்ளிக் கல்வி துறை பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறது.இதன்படி, அரசு பள்ளிகளில் நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, இந்த ஆண்டில் இருந்து முதல் பருவ தேர்வுக்கு பதில், தொகுத்தறியும் திறன் தேர்வு நடக்கிறது.மாநில அளவில், ஒரே வினாத்தாள் அடிப்படையில், பொது தேர்வுக்கு இணையாக நடத்தப்படுகிறது. ஒருங்கிணைந்த கல்வி திட்ட இயக்குனரகம் சார்பில், ஆசிரியர்களின் மொபைல் போன் செயலி வழியாக, தொகுத்தறிதல் தேர்வு நடக்கிறது.



இன்று முதல் மூன்று நாட்களுக்கு நடத்தப்பட உள்ள தேர்வு கண்காணிப்பு பணிக்கு, ஆசிரியர்கள் தனியாக நியமிக்கப்பட்டுள்ளனர்.தேர்வு முடிந்த பின், அதன் மதிப்பீடுகள், கல்வி அமைச்சகத்துக்கு தொகுப்பு அறிக்கையாக அனுப்பப்பட உள்ளதாக, கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
duruvasar - indraprastham,இந்தியா
26-செப்-202207:31:41 IST Report Abuse
duruvasar திமுகவின் உருட்டின் தாய் வார்த்தை ஜாலங்கள். இப்படி ரைமைமிங்காக வித்தை காட்டுவதை விட்டுவிட்டு தெளிவான சிந்திக்கும் அறிவு திறனை மேம்படுத்த வேண்டும். தொகுத்தறிவு, பகுத்தறிவு, அடுத்து வகுத்தறிவா? புள்ளைங்களை படிக்கவிடுங்க அய்யா. பாதி நாள் முதலமைச்சருடன் ஷுட்டிங். போகிற போக்கில் புள்ளைங்க கேமரா, ஆக்ஷன், ஸ்டார்ட் சொன்னால்தான் புத்தகத்தை கையில் எடுப்பார்கள் போல் இருக்கிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X