தி.மு.க., ஆட்சி தூக்கி எறியப்படும்: பொள்ளாச்சி ஜெயராமன் பேச்சு

Updated : செப் 26, 2022 | Added : செப் 26, 2022 | கருத்துகள் (18) | |
Advertisement
திருப்பூர்: ''தி.மு.க., ஆட்சி மக்களால் துாக்கி எறியப்படும்'' என, பொள்ளாச்சி ஜெயராமன் பேசினார்.திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க., சார்பில் கண்டன பொதுக்கூட்டம், அரிசிக்கடை வீதியில் நேற்று நடந்தது. முன்னாள் எம்.எல்.ஏ., குணசேகரன் தலைமைவகித்தார்.மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் பேசுகையில், ''தொழில் வரி, சொத்துவரி, மின்கட்டணம் என அனைத்து வரிகளையும்
 DMK, AIADMK, Pollachi Jayaraman, திமுக, அதிமுக, பொள்ளாச்சி ஜெயராமன், Tirupur,திருப்பூர்,

திருப்பூர்: ''தி.மு.க., ஆட்சி மக்களால் துாக்கி எறியப்படும்'' என, பொள்ளாச்சி ஜெயராமன் பேசினார்.

திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க., சார்பில் கண்டன பொதுக்கூட்டம், அரிசிக்கடை வீதியில் நேற்று நடந்தது. முன்னாள் எம்.எல்.ஏ., குணசேகரன் தலைமைவகித்தார்.
மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் பேசுகையில், ''தொழில் வரி, சொத்துவரி, மின்கட்டணம் என அனைத்து வரிகளையும் உயர்த்திவிட்டனர். இதற்கு எதிராக போராடும் ஒரே கட்சி அ.தி.மு.க., தான். தமிழகத்தில் அ.தி.மு.க., போராட்டத்தை கையில் எடுத்தால் மட்டும்தான், தி.மு.க., பயப்படுகிறது. அடுத்த தேர்தலில், மக்களால், இந்த தி.மு.க., ஆட்சி துாக்கி எறியப்படும்'' என்றார்.

நடிகை விந்தியா பேசியதாவது:
தி.மு.க., ஆட்சியில், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாகிவிட்டது. அ.தி.மு.க., ஆட்சி காலத்தில், போலீசார் துணிச்சலுடன் பணிபுரிந்தனர். தற்போது போலீஸ் ஸ்டேஷன்களில் கட்டப்பஞ்சாயத்து நடக்கிறது.கடந்த மாதம் மட்டும் தமிழகத்தில் 135 கொலைகள் நடந்துள்ளன; இது அரசு கொடுத்த கணக்கு. கணக்கில் வராத கொலைகள் எத்தனை என்பது தெரியவில்லை. மக்களை ஏமாற்றுவதற்காக தி.மு.க., கையில் எடுத்துள்ள ஆயு தம்தான், பகுத்தறிவு.

ஆட்சியை காப்பாற்றிக்கொள்ளவேண்டும் என்கிற பயம் ஸ்டாலினுக்கு வந்துவிட்டது; அதனால்தான், எதிர் கட்சியாக இருந்தபோது கருப்புக்கொடி காட்டிய அதே ஸ்டாலின், தற்போது பிரதமர் மோடியை வரவேற்கிறார்.
இவ்வாறு, அவர் பேசினார்.
எம்.எல்.ஏ.,க்கள் விஜயகுமார், ஆனந்தன், முன்னாள் எம்.பி., சிவசாமி உள்பட கட்சியினர் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Girija - Chennai,இந்தியா
26-செப்-202218:35:23 IST Report Abuse
Girija ஏதோ ஒரு படத்துல ஆணி வேண்டாம் என்று சொல்லவரில்லே ?
Rate this:
Cancel
Mohankumar - Trichy,இந்தியா
26-செப்-202218:05:50 IST Report Abuse
Mohankumar ........
Rate this:
Cancel
Mohankumar - Trichy,இந்தியா
26-செப்-202218:05:17 IST Report Abuse
Mohankumar இவனும் இவன் மவனும்தான் பொள்ளாச்சி கொடூரத்தில் முக்கியமானவன்....இவனை இதுவரை வெளியில் விட்டுவைத்திருப்பது மிகவும் தவறு....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X