மருமகனுக்கு உதவி கேட்ட பிரதமர்: பாக்., அரசியலில் பெரும் குழப்பம்

Updated : செப் 26, 2022 | Added : செப் 26, 2022 | கருத்துகள் (10) | |
Advertisement
இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் பிரதமர், தன் உறவினருக்கு விதிமுறையை மீறி உதவும்படி அதிகாரிக்கு உத்தரவிடும் 'ஆடியோ' வெளியாகி அந்நாட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.நம் அண்டை நாடான பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் தெஹ்ரீக் - இ-- இன்சாப் கட்சியை சேர்ந்த பவத் சவுத்ரி சமூக வலைதளத்தில் ஒரு ஆடியோ பதிவிட்டுள்ளார்.அதில் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்,
Pakistan PM, Shehbaz Sharif,பாகிஸ்தான்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் பிரதமர், தன் உறவினருக்கு விதிமுறையை மீறி உதவும்படி அதிகாரிக்கு உத்தரவிடும் 'ஆடியோ' வெளியாகி அந்நாட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.நம் அண்டை நாடான பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் தெஹ்ரீக் - இ-- இன்சாப் கட்சியை சேர்ந்த பவத் சவுத்ரி சமூக வலைதளத்தில் ஒரு ஆடியோ பதிவிட்டுள்ளார்.அதில் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், அரசின் உயர் அதிகாரியிடம் பேசுகிறார். இந்தியாவில் இருந்து மின் உலைக்கான இயந்திர இறக்குமதிக்கு, தன் மருமகனான ரஹீல் என்பவருக்கு சில விதிமுறைகளை தளர்த்தி உதவும்படி கூறுகிறார்.


latest tamil newsஅந்த அதிகாரி, 'விதிமுறையை மீறி இப்படி செய்தால், அமைச்சரவை ஒப்புதலுக்கு செல்லும்போது, உண்மை தெரிந்து விடும். மேலும் அரசியல் ரீதியாகவும் மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தும்' என கூறுகிறார். சமூக வலைதளத்தில் இந்த ஆடியோவை ஏராளமானோர் பகிர்ந்து, பிரதமருக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதனால் பாகிஸ்தான் அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
26-செப்-202221:34:20 IST Report Abuse
Ramesh Sargam அங்கு மருமகனுக்கு உதவி கேட்கிறார் அந்நாட்டு பிரதமர். இங்கு தமிழகத்தில், முதல்வரின் மருமகனிடம் கையேந்தி உதவி கேட்கிறார்கள் இங்குள்ள அதிகாரிகள்.
Rate this:
Cancel
sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
26-செப்-202220:21:49 IST Report Abuse
sankaranarayanan மகன் மகள் மருமகன் என்ற அரசியல் வாரிசு ஜனநாயகத்துக்கே ஆபத்துக்கு. ஏன் கட்சியில் மற்ற வயதில் மூத்த அனுபவம் கொண்ட நபர்கள் கிடையாதா? சர்வாதிகார போக்கைப்பற்றி நன்கு அறிந்த படித்தவர்கள்தான் ஆட்சி செய்கிறார்கள். அப்படியிருந்தும் அவர்களுக்கு ஏன் இந்த வாரிசு அரசியல் மோகம்? பாவம் அவல நிலைமைக்குத்தள்ளப்படுகிறார்கள். விளைவுகள் விபரியதாமாகத்தான் முடியும். இது எல்லாருக்கும் பொருந்தும்.
Rate this:
Cancel
... - ,
26-செப்-202212:44:33 IST Report Abuse
... இது இந்துத்துவா சனாதன சக்திகளின் சதி ன்னு குருமா, ஆ ராசா கிட்ட இருந்து அறிக்கை வந்தாலும் வரும்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X