ஹிந்து மத எதிர்ப்பு விவகாரம்: கோஷத்தை மாற்றியது தி.மு.க.,

Updated : செப் 26, 2022 | Added : செப் 26, 2022 | கருத்துகள் (71) | |
Advertisement
சென்னை: 'ஹிந்து மத எதிர்ப்பு' என்பது தி.மு.க.வுக்கு எதிராக திரும்புவதால் பா.ஜ. வளர்ச்சியை தடுக்க 'சனாதன எதிர்ப்பை' தி.மு.க. கையில் எடுத்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்தனர்.ஹிந்து மத எதிர்ப்பை கொள்கையாக உடைய தி.மு.க. தலைமை இதுவரை வெளிப்படையாகவே 'மூட நம்பிக்கை ஒழிப்பு பகுத்தறிவு' என்ற பெயரில் ஹிந்து மதத்தை விமர்சித்து வந்தது. முன் எப்போதும் இல்லாத அளவிற்கு
DMK, MK Stalin, Hindu, சனாதனம், ஹிந்து, திமுக, பாஜ,

சென்னை: 'ஹிந்து மத எதிர்ப்பு' என்பது தி.மு.க.வுக்கு எதிராக திரும்புவதால் பா.ஜ. வளர்ச்சியை தடுக்க 'சனாதன எதிர்ப்பை' தி.மு.க. கையில் எடுத்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்தனர்.ஹிந்து மத எதிர்ப்பை கொள்கையாக உடைய தி.மு.க. தலைமை இதுவரை வெளிப்படையாகவே 'மூட நம்பிக்கை ஒழிப்பு பகுத்தறிவு' என்ற பெயரில் ஹிந்து மதத்தை விமர்சித்து வந்தது. முன் எப்போதும் இல்லாத அளவிற்கு தி.மு.க.வின் ஹிந்து விரோத பேச்சுக்கு உடனடியாக பதிலடி கிடைக்கிறது. மேலும் தி.மு.க.வுக்கு எதிரான மனநிலை ஹிந்து மக்களிடையே எழுந்துள்ளது.தி.மு.க. துணை பொதுச்செயலர் ஆ.ராஜாவின் ஹிந்து எதிர்ப்பு பேச்சுக்கு தமிழக மக்களிடையே பலத்த எதிர்ப்பு கிளம்பியது. அவரது சொந்த தொகுதியிலேயே கடை அடைப்பு நடந்தது ஆளுங்கட்சிக்கு பெரும் அவமானத்தை கொடுத்துள்ளது. இதனால் இனி 'ஹிந்து' எனக் கூறி விமர்சனங்களை முன்வைப்பதை தவிர்க்குமாறும் அதற்கு பதிலாக 'சனாதன எதிர்ப்பு' என்ற வார்த்தையை பயன்படுத்தவும் தி.மு.க. பேச்சாளர்களுக்கு அக்கட்சி தலைமை உத்தரவிட்டுள்ளது.


latest tamil newsஆனால் 'சனாதனம் என்பது பிறப்பின் அடிப்படையில் பேதத்தை முன்வைக்கும் தத்துவம் அல்ல. சனாதன தர்மம் என்பது வாழ்வின் அடித்தளமாக இருக்கிறது' என்று ஆன்மிகவாதிகள் கூறுகின்றனர்.'இந்திய மண்ணில் பல்லாயிரம் ஆண்டுகளாக நிலைத்திருக்கும் தத்துவமான சனாதனத்தை கெட்ட வார்த்தையாக ஹிந்துக்களை பிளவுப்படுத்தும் தத்துவமாக முன்வைக்க தி.மு.க. விரும்புகிறது. அதன் வெளிப்பாடு தான் ஆ.ராஜா போன்றவர்களின் பேச்சு' என்று பா.ஜ. மகளிரணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.இது தொடர்பாக அரசியல் விமர்சகர்கள் கூறியதாவது: தமிழகத்தில் பா.ஜ. மெல்ல வளர்ந்து வருகிறது என்பதை மறுக்க முடியாது. சிறுபான்மையினர் ஓட்டுக்காக ஹிந்துக்களை இழிவுப்படுத்தி பேசுகின்றனர் என்பது வெளிச்சத்துக்கு வந்து விட்டது. தி.மு.க.வின் ஹிந்து எதிர்ப்பு பேச்சை தமிழக பா.ஜ. தன் அரசியல் முன்னேற்றத்திற்கு பயன்படுத்திக் கொள்கிறது.மக்களிடையே ஹிந்துக்களுக்கு எதிரான கட்சி தி.மு.க. என்ற எண்ணத்தையும்; ஹிந்து மக்களுக்காக பா.ஜ. மட்டும் தான் தமிழகத்தில் இருக்கிறது என்ற எண்ணத்தையும் ஒரு சேர மக்களிடையே விதைத்து வருகின்றனர்.குறிப்பாக சிறுபான்மையினர் கணிசமாக வசிக்கும் பகுதிகளில் பா.ஜ. வளர்ச்சி அதிகமாகவே இருக்கிறது. இதனால் இனி வெளிப்படையாக ஹிந்து மத எதிர்ப்பை கையிலெடுக்க முடியாது. எனவே தான் சனாதனம் என்ற பெயரில் ஜாதி பேதத்தை கற்பிக்கிறது என்றெல்லாம் ஆ.ராஜா போன்றவர்கள் பேச துவங்கியுள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினார்.


latest tamil newsகடந்த 2021 சட்டசபை தேர்தலில் ஒன்பது கட்சி கூட்டணியுடன் தி.மு.க. போட்டியிட்டது. அ.தி.மு.க. பிளவுபட்டிருந்தது. 10 ஆண்டுகள் அ.தி.மு.க. ஆட்சியில் இருந்ததால் ஆட்சிக்கு எதிரான மனநிலையும் மக்களிடம் இருந்தது. இந்த சாதகமான அம்சங்கள் இருந்தும் அ.தி.மு.க. அணியை விட தி.மு.க. கூட்டணிக்கு 6 சதவீதம் அதிக ஓட்டுகள் மட்டுமே கிடைத்தன.ஹிந்து ஓட்டு வங்கி உள்ள கன்னியாகுமரி கொங்கு மண்டலத்தில் தி.மு.க.வுக்கு தோல்வி தான் கிடைத்தது.இவற்றை மனதில் வைத்து தான் பிற்படுத்தப்பட்டோர் ஆதிதிராவிடர் பழங்குடியினர் பா.ஜ. பக்கம் செல்வதை தடுக்க சனாதன எதிர்ப்பு என்பதை தி.மு.க. கையில் எடுத்திருப்பதாக அக்கட்சியினர் கூறுகின்றனர்.தி.மு.க. மட்டுமல்லாது அதன் கூட்டணி கட்சிகளான மார்க்சிஸ்ட் இந்திய கம்யூனிஸ்ட் வி.சி. உள்ளிட்ட கட்சிகளும் பா.ஜ.வை விமர்சிக்க 'சனாதன எதிர்ப்பு சனாதன ஒழிப்பு' என்ற வார்த்தைகளை பயன்படுத்த துவங்கியுள்ளன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (71)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
27-செப்-202208:12:54 IST Report Abuse
பேசும் தமிழன் இந்த அண்ணாமலை மற்றும் பிஜேபி கட்சியினர்.. இந்துக்களை மிகவும் கெடுத்து வைத்து உள்ளார்கள்.. எல்லோரையும் உப்பு போட்டு சாப்பிட சொல்லி உள்ளார்கள்.. முன்பெல்லாம் இந்துக்களை பற்றி எவ்வளவு கேவலமாக பேசினாலும்.. வாயை மூடிக் கொண்டு இருப்பார்கள்.. ஆனால் இப்போது உடனுக்குடன் பதிலடி கொடுத்து விடுகிறார்கள்.. விடியாத தலைவர் மைண்ட் வாய்ஸ்
Rate this:
Cancel
செந்தில்குமார் திருப்பூர் எதையாவது ஒருவரிடமிருந்து வாங்கினால்(1ருபாய் மிட்டாயாக இருந்தாலும்) வலது கையில் தான் வாங்க வேண்டும் அது தான் தமிழர் பண்பாடு தமிழ் கடவுள் முருகனின் ஆயுதம் வேல் அதை இடது கையில் வாங்குகிறார் இதுவும் திராவிட மாடல் வழக்கமா ???
Rate this:
Cancel
Desi - Chennai,இந்தியா
26-செப்-202222:03:31 IST Report Abuse
Desi இனி தீயமுக பழனிக்கே பால் காவடி எடுத்தாலும் மண்ணை கவ்வுவதை இவர்கள் கோவில் கோவிலாக படையெடுத்து பொய் பக்தி காட்டி ஏமாற்றும் கடவுளின் ரூபங்களினாலும் தடுக்க முடியாது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X