கோடம்பாக்கத்தில் தலைதூக்கும் 'பேனர்' கலாசாரம்

Updated : செப் 26, 2022 | Added : செப் 26, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
கோடம்பாக்கம்: சென்னையில், வாகன ஓட்டிகளின் கவனத்தை திசை திரும்பும் வகையில் அமைக்கப்பட்ட 'கட் அவுட்' எனும் விளம்பர பேனர்களால், ஏராளமான விபத்துகளும், உயிரிழப்பு சம்பவங்களும் நடந்தன.இதையடுத்து, நகரின் எந்த பகுதியிலும், விளம்பர பலகைகள், பேனர்கள் வைக்கக் கூடாது என, சென்னை உயர் நீதிமன்றம் கண்டிப்பான உத்தரவு பிறப்பித்தது. ஆனால், மாநகராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின்

கோடம்பாக்கம்: சென்னையில், வாகன ஓட்டிகளின் கவனத்தை திசை திரும்பும் வகையில் அமைக்கப்பட்ட 'கட் அவுட்' எனும் விளம்பர பேனர்களால், ஏராளமான விபத்துகளும், உயிரிழப்பு சம்பவங்களும் நடந்தன.

இதையடுத்து, நகரின் எந்த பகுதியிலும், விளம்பர பலகைகள், பேனர்கள் வைக்கக் கூடாது என, சென்னை உயர் நீதிமன்றம் கண்டிப்பான உத்தரவு பிறப்பித்தது. ஆனால், மாநகராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் அலட்சியத்தால், மீண்டும் பல இடங்களில் விளம்பர பலகைகள் முளைத்துள்ளன.



latest tamil news




குறிப்பாக, சென்னை மாநகராட்சி கோடம்பாக்கம் மண்டலத்தில், நீதிமன்ற உத்தரவை காற்றில் பறக்க விட்டு, வடபழநி, அசோக் நகர், தி.நகர் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில், மீண்டும் விளம்பர பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.இதில், கோடம்பாக்கம் மேம்பாலம் அருகே உள்ள கட்டடங்களில் விளம்பர பலகை வரிசை கட்டுகின்றன. இதை தடுக்க வேண்டிய அதிகாரிகளோ கண்டுகொள்வதாக தெரியவில்லை. அசம்பாவிதங்கள் ஏற்படும்முன், அதிகாரிகள் விழித்துக்கொள்ள வேண்டும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
26-செப்-202210:47:29 IST Report Abuse
அசோக்ராஜ் ஸ்டாலின் இறையன்பு சைலேந்திரபாபு மூவருமே இந்த பேனர்களால் பாதிக்கப்படப் போவதில்லை. அதனால் அவை நீக்கப்பட வேண்டியதில்லை. த்ராவிஷ மாடல்.
Rate this:
Cancel
Mohan - Thanjavur ,இந்தியா
26-செப்-202210:05:54 IST Report Abuse
Mohan இன்னும் 10பேர் தலையை தூக்கினாலும் பேனரை தூக்க மாட்டாங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X