அரசியல் ஆதாயம் தேடுவதா? பா.ஜ.,வுக்கு பி.எப்.ஐ., கண்டிப்பு!

Updated : செப் 26, 2022 | Added : செப் 26, 2022 | கருத்துகள் (71) | |
Advertisement
சென்னை: ''தமிழகத்தில் பதற்றத்தை உருவாக்கி, பா.ஜ., அரசியல் ஆதாயம் தேடுகிறது,'' என, 'பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா' அமைப்பின் மாநில தலைவர் முஹம்மது ஷேக் அன்சாரி கூறினார்.அவர் அளித்த பேட்டி: மத்திய அரசின் துாண்டுதலில், தேசிய புலனாய்வு முகமை, பாப்புலர் ப்ரண்ட் அலுவலகங்களில் சோதனை நடத்தி, தேசிய, மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகளை கைது செய்து, சிறையில் அடைத்துள்ளது.
BJP,PFI,Popular Front of India

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: ''தமிழகத்தில் பதற்றத்தை உருவாக்கி, பா.ஜ., அரசியல் ஆதாயம் தேடுகிறது,'' என, 'பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா' அமைப்பின் மாநில தலைவர் முஹம்மது ஷேக் அன்சாரி கூறினார்.

அவர் அளித்த பேட்டி: மத்திய அரசின் துாண்டுதலில், தேசிய புலனாய்வு முகமை, பாப்புலர் ப்ரண்ட் அலுவலகங்களில் சோதனை நடத்தி, தேசிய, மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகளை கைது செய்து, சிறையில் அடைத்துள்ளது. எதற்காக, என்ன வழக்கில் அவர்களை கைது செய்தனர் என்பதை, நீதிமன்றத்தில் கூட தெரிவிக்கவில்லை.



இதை கண்டித்து, அனைத்து தலைநகரங்களிலும், பொது மக்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். தேசிய புலனாய்வு முகமை சோதனைக்கு எதிராக நடக்கும் மக்கள் போராட்டங்களை திசை திருப்ப, பா.ஜ., திட்டமிட்டு வருகிறது. சென்னை தாம்பரத்தில் நடந்த கூட்டத்தில், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை எச்சரிக்கும் தொனியில் பேசியுள்ளார்.



latest tamil news


அரசியல் லாபத்திற்காக பதற்றத்தை உருவாக்கி வருவதுடன், தமிழக அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் நோக்கத்துடன் பா.ஜ., செயல்படுகிறது. மேலும், மத்திய அரசின் பெயரைச் சொல்லி, தமிழக அரசை மிரட்டி வருகிறது. அண்ணாமலை மிரட்டல், சட்டத்திற்கு விரோதமானது.



இரு சமூகங்களுக்கு இடையே மோதலை ஏற்படுத்தி, அரசியல் ஆதாயம் அடைய எண்ணுகிறார். அவரின் அநாகரிக பேச்சுக்கு எதிராக, வழக்கு பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு அன்சாரி கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (71)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankar - சென்னை,இந்தியா
26-செப்-202221:56:30 IST Report Abuse
sankar அதன் புத்தியே அது தானே.
Rate this:
Cancel
sankar - சென்னை,இந்தியா
26-செப்-202221:53:51 IST Report Abuse
sankar யாரை விலைக்கு வாங்கணும், யாரோ கவிழ்க்கணும், யாரை வளைக்கனும் என்று ஆதாயம் தேடுவதில் பிஜேபீக்கு நிகரான கில்லாடிகள் யாரும் இல்லை.
Rate this:
Cancel
Desi - Chennai,இந்தியா
26-செப்-202221:53:29 IST Report Abuse
Desi இவரைகளை கூண்டோடு வெளியில் வராதபடி உள்ளே போடா வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X