புனே, : ''மற்ற நாடுகளின் கரன்சி மதிப்புடன் ஒப்பிடுகையில், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சீராகவே உள்ளது,'' என, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், மஹாராஷ்டிரா மாநிலம் புனேயில் நேற்று கூறியதாவது: அமெரிக்க டாலரின் மதிப்பு சரிவடைந்துள்ளதால், பெரும்பாலான நாடுகளின் கரன்சி மதிப்பு களில் ஏற்றத்தாழ்வுகள் உள்ளன.
இந்த ஏற்றத்தாழ்வையும், நிலையற்ற தன்மையையும் தாக்குப் பிடித்து சீராக உள்ளது என்றால், அது இந்திய ரூபாயின் மதிப்பு தான். இந்த விவகாரத்தை மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் கூர்ந்து கவனித்து வருகின்றன. ஆசிய சந்தைகளில் பல நாடுகளின் கரன்சி மதிப்பு வீழ்ச்சி அடைந்துள்ளது. ஆனால், இந்த நாடுகளை ஒப்பிடுகையில் நம் நாட்டின் ரூபாய் மதிப்பு சீராகவே உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.