தமிழக அரசிடம் அறிக்கை கேட்டுள்ளோம்! மத்திய அமைச்சர்

Updated : செப் 26, 2022 | Added : செப் 26, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
ராமநாதபுரம், : ''பா.ஜ., தலைவர்களுக்கு எதிராக குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் குறித்த அறிக்கை தமிழக அரசிடம் கேட்கப்பட்டுள்ளது. அது பெறப்பட்டதும், தக்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, மத்திய சிறு குறு தொழில் இணை அமைச்சர் பானு பிரதாப்சிங் வர்மா கூறினார்.ராமநாதபுரத்தில் அவர் கூறியதாவது:புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 89 தொழில் குழுமங்களில், 27 தமிழகத்திற்கு ஒதுக்கீடு
Banu Pratap Singh Verma, BJP, TNGovt, தமிழக அரசு, மத்திய அரசு, அமைச்சர் பானு பிரதாப்சிங் வர்மா, பாஜ,   Government of Tamil Nadu, Central Government, Minister Banu Pratap Singh Verma,

ராமநாதபுரம், : ''பா.ஜ., தலைவர்களுக்கு எதிராக குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் குறித்த அறிக்கை தமிழக அரசிடம் கேட்கப்பட்டுள்ளது. அது பெறப்பட்டதும், தக்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, மத்திய சிறு குறு தொழில் இணை அமைச்சர் பானு பிரதாப்சிங் வர்மா கூறினார்.

ராமநாதபுரத்தில் அவர் கூறியதாவது:புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 89 தொழில் குழுமங்களில், 27 தமிழகத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தின் வளர்ச்சிக்கு தேவையான அனைத்தையும் மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. தமிழகத்தில் பா.ஜ., ஆதரவாளர்கள் மீதான வன்முறை தாக்குதல்கள் கண்டிக்கத்தக்கவை. குற்ற செயல்களில் ஈடுபடுவோர் குறித்த அறிக்கை, தமிழக அரசிடம் கேட்கப்பட்டுள்ளது.



அந்த அறிக்கை பெறப்பட்டதும், தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.தேசிய புலனாய்வு முகமை மற்றும் அமலாக்கப் பிரிவின் சோதனைகள் தமிழகத்தில் மட்டும் நடக்கவில்லை. நாட்டின் மற்ற மாநிலங்களிலும் நடத்தப்பட்டுள்ளது.தேச நலனுக்கு விரோதமாக செயல்படுவோர் யாராக இருந்தாலும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
John Miller - Hamilton,பெர்முடா
26-செப்-202220:09:05 IST Report Abuse
John Miller இவர் இன்ன உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் அசிஸ்டண்டா? சிறு குறு தொழில் அமைச்சர் அமிட்சாவின் அதிகரித்தால் தலையிட முடியுமா?
Rate this:
Cancel
Mohan - Thanjavur ,இந்தியா
26-செப்-202212:28:31 IST Report Abuse
Mohan அட என்ன அமைச்சரே இவ்வளவு வெள்ளந்தியா இருக்கீங்களே. பாஜக கட்சிக்காரங்க வீட்டுல பெட்ரோல் குண்டு வீசியது பாஜக தொண்டர்கள் தான்னு அறிக்கைய கொடுப்பாய்ங்களே இவிங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X