சட்டம் - ஒழுங்கு மோசம்: அர்ஜுன் சம்பத் காட்டம்

Updated : செப் 26, 2022 | Added : செப் 26, 2022 | கருத்துகள் (32) | |
Advertisement
கோவை: ''தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. மத்திய அரசு, தமிழக முதல்வரை அழைத்து விளக்கம் கேட்க வேண்டும்,'' என, இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கூறினார்.கோவையில், தி.மு.க., எம்.பி., ராஜாவை கண்டித்து, இந்து மக்கள் கட்சி ஆர்ப்பாட்டத்தின் போது, நிருபர்களிடம் அவர் கூறியதாவது: ஹிந்து அமைப்புகள் - இஸ்லாமியர்கள் இடையே எந்த பிரச்னையும் இல்லை. ஆனால், ஒரு சில
DMK, Arjun Sampath, A Raja, அர்ஜுன் சம்பத், திமுக, தமிழகம்,  ராஜா, மத்திய அரசு,

கோவை: ''தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. மத்திய அரசு, தமிழக முதல்வரை அழைத்து விளக்கம் கேட்க வேண்டும்,'' என, இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கூறினார்.



கோவையில், தி.மு.க., எம்.பி., ராஜாவை கண்டித்து, இந்து மக்கள் கட்சி ஆர்ப்பாட்டத்தின் போது, நிருபர்களிடம் அவர் கூறியதாவது: ஹிந்து அமைப்புகள் - இஸ்லாமியர்கள் இடையே எந்த பிரச்னையும் இல்லை. ஆனால், ஒரு சில அமைப்புகள் தான் கலவரத்தை உருவாக்க திட்டமிடுகின்றன.


latest tamil news



தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலையிட்டு பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். தி.மு.க., அரசு பழிவாங்கும் நோக்கில், கோவை பா.ஜ., மாவட்ட தலைவரை, பி.சி.ஆர்., சட்டத்தில் கைது செய்துள்ளது; உடனே அவரை விடுவிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Devanand Louis - Bangalore,இந்தியா
26-செப்-202221:18:39 IST Report Abuse
Devanand Louis தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்துள்ளது மட்டுமில்லை , எங்கும் எதிலும் லஞ்சம் ஊழல்கள் நிறைந்துள்ளது .தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் தீடிரென்று பல அலுவலகங்களுக்கு பார்வையிடுகிறார் ஆய்வு செய்கிறார், அதேபோல் மதுரை திருமங்கலம் மின்சாரவாரியத்தின் அலுவலர்களையும் பார்வையிட வேண்டுமென்பது அந்த ஏரியா மக்களின் கோரிக்கைகள். மதுரை திருமங்கலம் மின்வாரியத்திலுள்ள அனைத்து பொறியாளர்களின் லஞ்சம் வாங்கும் கொள்ளைக்கூடாரம் - அங்குள்ள பொறியாளர்கள் எல்லோரும் லஞ்சப்பணத்தை பகிர்ந்து கொள்கிறார்கள், மக்கள் மிகவும் முகம் சுளிக்குமளவிற்கு லஞ்சம் வாங்கும் கூடாரமாகவே திகழ்கிறது மதுரை திருமங்கலம் மின்வாரிய கோட்டத்திற்கு, மின்சார பராமரிப்பு பணிகளில்லாமல் திருமங்கலத்தில் அடிக்கடி மின்வெட்டு அதிகரித்துள்ளது
Rate this:
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
26-செப்-202220:09:19 IST Report Abuse
Sampath Kumar இப்போ என்னோமோ சட்டம் ஒழுங்கு தமிழா நாட்டில் கேட்டு விட்டதாம்
Rate this:
Cancel
Nagarajan D - Coimbatore,இந்தியா
26-செப்-202219:45:31 IST Report Abuse
Nagarajan D இருப்பது தான் மோசம் ஆகும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு இருக்கிறதா அர்ஜுன் சம்பத் அவர்களே? அந்த வி...ரி மகன் ஒதுக்கீட்டு சீட்டு பெற்ற ஒரு MP கயவன் ஒட்டு மொத்த ஹிந்துக்களை எவ்வளவு கேவலமாக பேசினான் அவனையே ஒன்றும் செய்ய வக்கில்லாத அரசிடம் வேறு என்ன எதிர்பார்க்கமுடியும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X