'தி.மு.க., ஆட்சி கலைப்பு' கோரிக்கையை கையில எடுத்துட்டீங்களா?

Updated : செப் 26, 2022 | Added : செப் 26, 2022 | கருத்துகள் (11) | |
Advertisement
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் பேட்டி:தி.மு.க., ஆட்சியில் தற்போது குண்டு வெடிப்பு சம்பவங்கள், சர்வ சாதாரணமாக நடந்து வருகின்றன. இதிலிருந்து ஒன்று மட்டும் நன்றாக தெரிகிறது... அது என்னவென்றால், இந்திய அரசியல் அமைப்பு சட்டம், 356வது பிரிவை நோக்கி, தி.மு.க., அரசு செல்கிறது என்பது தான்.அப்பாடா... உங்க தலைவியின் தாரக மந்திரமான, 'தி.மு.க., ஆட்சி கலைப்பு' கோரிக்கையை
ஜெயகுமார், அன்புமணி, ஜான் பாண்டியன், அதிமுக, திமுக, Jayakumar, Anbumani, John Pandian, AIADMK, DMK,


அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் பேட்டி:


தி.மு.க., ஆட்சியில் தற்போது குண்டு வெடிப்பு சம்பவங்கள், சர்வ சாதாரணமாக நடந்து வருகின்றன. இதிலிருந்து ஒன்று மட்டும் நன்றாக தெரிகிறது... அது என்னவென்றால், இந்திய அரசியல் அமைப்பு சட்டம், 356வது பிரிவை நோக்கி, தி.மு.க., அரசு செல்கிறது என்பது தான்.

அப்பாடா... உங்க தலைவியின் தாரக மந்திரமான, 'தி.மு.க., ஆட்சி கலைப்பு' கோரிக்கையை கையில எடுத்துட்டீங்களா?




மக்கள் நீதி மய்யம் கட்சி அறிக்கை:

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, வரலாறு காணாத வகையில், 81 ரூபாயாக சரிந்துள்ளது. இந்த சரிவு, உடனடியாக பங்குச் சந்தைகளில் எதிரொலித்து வர்த்தகமும் பாதித்துள்ளது. இதனால், பொருட்களின் விலை உயரக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவுக்கு, இலங்கையின் நிலை ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

இலங்கையின் அரசியல், பொருளாதார சூழல் வேறு; நம் நாட்டின் சூழல் வேறு என்பது, 'மேதாவி'யான உங்க கட்சி தலைவருக்கு நன்கு தெரியுமே!




பா.ம.க., தலைவர் அன்புமணி அறிக்கை:

சென்னை காலநிலை செயல் திட்ட வரைவு அறிக்கையை எவ்வித முன் அறிவிப்புமின்றி, செப்டம்பர் 12ல் ஆங்கிலத்தில் வெளியிட்ட சென்னை மாநகராட்சி, செப்டம்பர் 26-க்குள் அதுபற்றி கருத்து தெரிவிக்குமாறு அறிவித்துள்ளது. மிக முக்கியத்துவம் வாய்ந்த இந்த அறிக்கையை, தமிழில் வெளியிடாமல், மிகக் குறைந்த கால அவகாசத்தில் கருத்துகளைக் கோருவது நியாயமற்றது.

'தமிழை பாதுகாத்துட்டோம்' என சமீபத்துல கூட ஒரு விழாவுல முதல்வர் முழங்குனாரே... அதெல்லாம் உண்மை இல்லையா?




தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் தலைவர் ஜான் பாண்டியன் அறிக்கை:

கோவையில் பெட்ரோல் குண்டு வீச்சு, கெரசின் குண்டு வீச்சு, கார் எரிப்பு உள்ளிட்ட சம்பவங்கள் பெரும் பதற்றத்தையும், மக்கள் மத்தியில் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசு சிறப்பு கவனம் செலுத்தி, கோவை மட்டுமின்றி தமிழகம் முழுதும் அமைதி பூங்காவாக திகழவும், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் இருக்கவும், உண்மை குற்றவாளிகளை கண்டறிந்து கடும் தண்டனை வழங்க வேண்டும்.


latest tamil news



வன்முறைக்கு எதிராக, தங்களிடம் இருந்து அறிக்கை வந்திருப்பது ஆச்சரியம் தான்!




ஹிந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை:

அமைதிப் பூங்காவான தமிழகத்தில், பெட்ரோல் குண்டு வீச்சு, வாகனங்களுக்கு தீ வைப்பு என, தொடர்ந்து வன்முறை நடக்கிறது. போராட்டம் நடத்த அனைவருக்கும் உரிமை உள்ளது. ஆனால், அற வழியில் போராடாமல், பெட்ரோல் குண்டு வீசுவது, மக்களுக்கு இடையூறு செய்வது, ஹிந்து அமைப்பு நிர்வாகிகளின் வாகனங்களுக்கு தீ வைப்பது, வீடுகளை தாக்குவது கண்டனத்துக்கு உரியது.

தேசவிரோத செயல்களில் ஈடுபட்டதற்காக சோதனை நடத்தியதை கண்டித்து, தேச விரோத செயல்களில் ஈடுபடுவோரை இரும்புக்கரத்தால் ஒடுக்க வேண்டும்!


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Duruvesan - Dharmapuri,இந்தியா
26-செப்-202221:20:24 IST Report Abuse
Duruvesan மூர்கன் புது பெயரில் திருராம், வெட்கம் ketta🥱
Rate this:
Cancel
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
26-செப்-202220:00:35 IST Report Abuse
Ramesh Sargam திமுக ஆட்சியில் தீபாவளி பண்டிகைக்கு ஹிந்துக்கள் பட்டாசு வெடிக்க நேரம் குறிக்கிறது இந்த திமுக அரசு. ஆனால், தினம் தினம் பெட்ரோல் குண்டு வீசி வெடிக்க, நாள் பூராவும் வெடிக்க அனுமதி கொடுப்பார்களாம்? என்ன கொடுமைடா இது?
Rate this:
Cancel
26-செப்-202213:06:48 IST Report Abuse
ராமகிருஷ்ணன் பி ஜே பி யினர் மீது தனது அல்லக்கைகளை ஏவி விட்டு ⛽ குண்டுகளை வீசி கொலைவெறி தாக்குதல் நடத்தி வருவதே திமுக தானே. பேருக்கு கூலிக்கு கைதாகும் இரண்டு பேரை வைத்து வழக்கை முடிவுக்கு கொண்டு வந்து அண்ணா பிறந்த நாள்ல விடுதலை செய்து விடுவார்கள். இதற்காக சிறப்பு பயிற்சி பெறுபவர்கள் கம்யூனிஸ்ட், விசிக வில் இருக்கிறார்கள்.
Rate this:
தமிழ்நாட்டுபற்றாளன் - கலைஞர் கருணாநிதி நகர் ,இந்தியா
26-செப்-202213:50:55 IST Report Abuse
தமிழ்நாட்டுபற்றாளன்,,,,,,...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X