டிவிஎஸ் நிறுவன தலைவர் வேணு சீனிவாசன் தாயார் மறைவு

Added : செப் 26, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
சென்னை : 'டி.வி.எஸ்., மோட்டார்' நிறுவனத்தின் தலைவர் வேணு சீனிவாசனின் தாயார் பிரேமா சீனிவாசன், நேற்று காலமானார்.டி.வி.எஸ்., மோட்டார் நிறுவனத்தின் நிறுவனர், சுந்தரம் அய்யங்காரின் இளைய மகன் டி.எஸ்.சீனிவாசனின் மனைவி பிரேமா, 90. இவர்களுக்கு வேணு சீனிவாசன் மற்றும் கோபால் சீனிவாசன் என்ற இரு மகன்கள் உள்ளனர்.வேணு சீனிவாசன், டி.வி.எஸ்., மோட்டார் நிறுவனத்தின் தலைவராக உள்ளார். கோபால்
Venu Srinivasan, Prema Srinivasan, TVS Motor, டிவிஎஸ், வேணு சீனிவாசன் , பிரேமா சீனிவாசன், டிவிஎஸ் மோட்டார், TVS,

சென்னை : 'டி.வி.எஸ்., மோட்டார்' நிறுவனத்தின் தலைவர் வேணு சீனிவாசனின் தாயார் பிரேமா சீனிவாசன், நேற்று காலமானார்.டி.வி.எஸ்., மோட்டார் நிறுவனத்தின் நிறுவனர், சுந்தரம் அய்யங்காரின் இளைய மகன் டி.எஸ்.சீனிவாசனின் மனைவி பிரேமா, 90. இவர்களுக்கு வேணு சீனிவாசன் மற்றும் கோபால் சீனிவாசன் என்ற இரு மகன்கள் உள்ளனர்.வேணு சீனிவாசன், டி.வி.எஸ்., மோட்டார் நிறுவனத்தின் தலைவராக உள்ளார்.கோபால் சீனிவாசன், டி.வி.எஸ்., 'கேபிடல்' நிதி நிறுவனத்தின் தலைவராக உள்ளார். இவர்களின் தாயார் பிரேமா, உடல்நலக் குறைவு காரணமாக நேற்று காலமானார். இவர், சைவ உணவுகள் மற்றும் கலை பண்பாடு தொடர்பாக ஏராளமான புத்தகங்களை எழுதி உள்ளார். 'கோல்ப்' விளையாட்டு, இவருக்கு மிகவும் பிடித்தமான ஒன்று.முதல்வர் இரங்கல்


வேணு சீனிவாசன் தாயார் மறைவுக்கு, முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை: டி.வி.எஸ்., மோட்டார் நிறுவனத்தின் தலைவர் வேணு சீனிவாசனின் தாயார் பிரேமா சீனிவாசன் இயற்கை எய்தினார் என்று அறிந்து, மிகவும் வருத்தமுற்றேன். போற்றி வளர்த்த அன்னையை இழந்து தவிக்கும் வேணு சீனிவாசன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krishnan - Chennai,யூ.எஸ்.ஏ
26-செப்-202221:27:45 IST Report Abuse
Krishnan இறந்தவரின் ஆத்மா சாந்தி அடையட்டும். ஓம் ஷாந்தி.
Rate this:
Cancel
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
26-செப்-202219:45:41 IST Report Abuse
Ramesh Sargam ஓம் சாந்தி.
Rate this:
Cancel
N.Sivathanu Pillai - Nagercoil,இந்தியா
26-செப்-202212:21:17 IST Report Abuse
N.Sivathanu Pillai உமக்கு வீர வணக்கங்கள் இறைவன் நிழலில் உங்கள் ஆன்மா இளைப்பாற பிரார்த்திக்கிறேன்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X