தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று(செப்.,25) இரவு பெய்த கனமழையின் காரணமாக கல்விராயன் பேட்டை பகுதியில் குறுவை அறுவடை நெற்கதிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது.

இதனால், இயந்திரம் நடுவயலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி வயல்களில் மழைநீர் தேங்கி நிற்பதால் அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் வேதனையடைந்னர்.

புதுகல்விராயன்ப்பேட்டை பகுதியில் குறுவை நெற்கதிர்களை, இயந்திரம் மூலம் அறுவடை செய்து கொண்டிருந்தபோது பலத்த மழை பெய்தது. இவர்களுக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும்.