'குதிரை பேரம்' என்கிற வார்த்தை எவ்வாறு அரசியலுக்குள் நுழைந்தது?

Updated : செப் 26, 2022 | Added : செப் 26, 2022 | கருத்துகள் (15) | |
Advertisement
'குதிரை பேரம்' என்கிற வார்த்தையை நாம் நாட்டு அரசியல் கூட்டணிப் பேச்சுவார்த்தையின்போது செய்தி தொலைக்காட்சிகளில் அடிக்கடி கேட்டிருப்போம். குதிரை பேரத்துக்கும் அரசியலுக்கும் என்ன தொடர்பு என குழம்பியும் இருப்போம். இதன் பின்னால் இருக்கும் சுவாரஸ்ய கதை பற்றித் தெரிந்துகொள்ளலாமா?அரேபியா, ஸ்பெயின், ஸ்காட்லாந்து ஆகிய நாடுகள் 17 ஆம் நூற்றாண்டில் குதிரை விற்பனைக்குப்
குதிரை பேரம், அரசியல், Horse Bargain, Horse Trading, Politics

'குதிரை பேரம்' என்கிற வார்த்தையை நாம் நாட்டு அரசியல் கூட்டணிப் பேச்சுவார்த்தையின்போது செய்தி தொலைக்காட்சிகளில் அடிக்கடி கேட்டிருப்போம். குதிரை பேரத்துக்கும் அரசியலுக்கும் என்ன தொடர்பு என குழம்பியும் இருப்போம். இதன் பின்னால் இருக்கும் சுவாரஸ்ய கதை பற்றித் தெரிந்துகொள்ளலாமா?

அரேபியா, ஸ்பெயின், ஸ்காட்லாந்து ஆகிய நாடுகள் 17 ஆம் நூற்றாண்டில் குதிரை விற்பனைக்குப் பெயர்போனதாக இருந்தன. வாகனப் போக்குவரத்து இல்லாத அந்த காலத்தில் சரக்குப் போக்குவரத்துக்கு குதிரையை நம்பியே உலக நாடுகள் இருந்தன. இதனால் அப்போது குதிரைகள் விற்கும் சந்தை பெருகத் துவங்கியது. குதிரைகளை வளர்த்து, விற்பது லாபகரமான தொழிலாகப் பார்க்கப்பட்டது.


latest tamil newsகுதிரைகளை பேரம் பேசி குறைந்த விலைக்கு வாங்க வாடிக்கையாளர்கள் அநியாயமாக குறைந்த விலைக்குப் பேரம் பேசி வாங்குவர். வியாபாரிகளும் இவர்களுக்கு சளைத்தவர்கள் அல்ல. கழுதையைக் கூட குதிரை என ஏமாற்றி அதிக விலைக்கு வாடிக்கையாளர் தலையில் கட்டுவர். இவ்வாறாக குதிரை சந்தை ஓர் மோசமான சந்தையாக விளங்கியது. இதனால் பிரிட்டிஷ்காரர்கள் குதிரை பேரம் என்கிற வார்த்தைக்கு மோசமான அர்த்தத்தைக் கற்பித்தனர். அதாவது எங்கெல்லாம் அநியாயமாகத் தொழில் உடன்படிக்கை நடைபெறுகிறதோ அங்கு குதிரை பேரம் நடைபெறுவதாகக் கூறினார். நாளடைவில் இந்த வார்த்தை அரசியலிலும் புகுந்தது.

சட்டமன்ற உறுப்பினர்களின் கட்சித் தாவல், அவர்களை விலைக்கு வாங்குதல், பதவியில் இருந்து ராஜினாமா செய்ய பணம் கொடுத்தல் உள்ளிட்ட அரசியலின் முறைக்கேடான செயல்களுக்கு குதிரை பேரம் செய்வது எனப் பெயர்சூட்டப்பட்டது. இதனாலேயே தேர்தல்களின்போது குதிரை பேரம் என்கிற வார்த்தை அதிகளவில் பிரயோகிக்கப்படுகிறது

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
பிரபு - மதுரை,இந்தியா
27-செப்-202203:46:02 IST Report Abuse
பிரபு 'குதிரை பேரம்' என்கிற வார்த்தையை கேட்காத இந்தியனே இருக்க முடியாது.
Rate this:
Cancel
jagan - Chennai,இலங்கை
27-செப்-202202:48:21 IST Report Abuse
jagan நடப்பது கழுதை பேரம் தான் (நிஜ கழுதைகள் மன்னிக்க)
Rate this:
Cancel
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
26-செப்-202221:43:07 IST Report Abuse
Ramesh Sargam இன்று இந்த குதிரை பேரத்தில் உலகளவில், இந்திய அரசியல் கட்சிகளை மிஞ்ச எந்த ஒரு நாடும் கிடையாது. அந்த அளவுக்கு பேர்போனவர்கள் இந்திய அரசியல் கட்சியின் தலைவர்கள்.
Rate this:
jagan - Chennai,இலங்கை
27-செப்-202202:49:46 IST Report Abuse
jaganநீர் எவ்ளோ நாடு போயிருக்கீர், வசித்திருக்கீர் ? கி போர்ட் கையில் இருப்பதால் கண்டபடி அடிச்சு விடவேண்டியது ஹா ஹா ஹா ரிலாக்ஸ் சார்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X