தமிழ் பத்திரிகைகளுக்கு இனி நல்ல எதிர்காலம்?

Updated : செப் 26, 2022 | Added : செப் 26, 2022 | கருத்துகள் (11) | |
Advertisement
- இல.ஆதிமூலம்ஆமாம், இது நடக்கும் என்று நான் முழுமையாக நம்புகிறேன். சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு என் காதுகளில் அடிக்கடி விழுந்த வார்த்தை, 'அச்சு ஊடகத்திற்கு இனிமேல் அஸ்தமனம்' என்பது தான். பத்திரிகை உலகின் மிகப்பெரிய ஆளுமைகள் இதை அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தனர். ஆனால், ஒரு பிராந்திய மொழி நாளிதழின் உரிமையாளர் மற்றும் பதிப்பாளர் என்ற முறையில் இப்பிரச்னையை
Language Print Media, L_Adimoolam, Dinamalar, ABC, Regional Print Media, மொழிவாரி, தமிழ், பத்திரிகை, விளம்பரம், ஏபிசி

- இல.ஆதிமூலம்


ஆமாம், இது நடக்கும் என்று நான் முழுமையாக நம்புகிறேன். சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு என் காதுகளில் அடிக்கடி விழுந்த வார்த்தை, 'அச்சு ஊடகத்திற்கு இனிமேல் அஸ்தமனம்' என்பது தான். பத்திரிகை உலகின் மிகப்பெரிய ஆளுமைகள் இதை அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தனர். ஆனால், ஒரு பிராந்திய மொழி நாளிதழின் உரிமையாளர் மற்றும் பதிப்பாளர் என்ற முறையில் இப்பிரச்னையை சரிசெய்துவிட முடியும் என்று தொலைநோக்கு பார்வையில் பார்த்தேன்.இப்பொழுது ஏபிசி (ஆடிட் பீரோ ஆப் சர்குலேஷன் - ஒரு பத்திரிகை எவ்வளவு பிரதிகள் விற்கின்றன என்று தணிக்கை செய்யும் சுதந்திர அமைப்பு) இரண்டு ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு மீண்டும் வந்துள்ளது. பெரும்பாலான ஆங்கில நாளிதழ்கள் இப்பிரச்னையை புரிந்துகொண்டதாக தெரியவில்லை. பல விளம்பர நிறுவனங்கள் ஆங்கில நாளிதழ்களுக்கு அதிக கட்டணங்களில் தரவேண்டி இருப்பதாக ஆச்சரியத்துடன் தெரிவிக்கின்றன.இப்போது ஏபிசி இல்லாத அல்லது விற்பனை எண்ணிக்கை குறைந்த நிலையில் அதற்கு தகுந்தாற்போல் ஆங்கில நாளிதழ்கள் கட்டணத்தை பெறுவார்களா. பல ஆண்டுகளாக தங்களுக்கு இருந்த கிராக்கி மற்றும் நியாயமில்லாமல் சில விளம்பர நிறுவனங்கள் கொடுத்த ஆதரவு ஆகிய காரணங்களால் மற்ற அச்சு ஊடகங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது. கடந்த பல ஆண்டுகளாகவே வாடிக்கையாளர்களின் நலன்களை விளம்பர நிறுவனங்கள் கண்டுகொள்ளவில்லை என்றே எனக்கு தோன்றுகிறது.latest tamil news


ஆங்கில நாளிதழ்கள் விதிக்கும் அதிக கட்டணங்களை வாய்ப்பாக பயன்படுத்தி இந்த விளம்பர நிறுவனங்கள் வருவாய் ஈட்ட முயற்சித்ததாகவே தோன்றுகிறது. சில பதிப்பு நிறுவனங்கள் குறிப்பாக ஆங்கில பதிப்பகங்கள் விதித்த அதிக கட்டணங்கள், அச்சு ஊடகத்துறை பாதிக்கப்பட காரணமாக அமைந்துள்ளன. இது இப்படி இருக்க, இன்னொருபுறம் புறக்கணிக்கப்பட்ட அல்லது சுரண்டப்பட்ட மொழிவாரி நாளிதழ்கள் மாற்றத்தை விரும்பாமல் பழமை வாதத்தில் இருந்தன. இது எப்படி என்றால் ஆங்கிலத்தில் பேசத் தெரிந்தால் அவர் உயர்வானவர் என்றும், ஆளுமை உள்ளவர் என்றும், ஆங்கிலத்தில் பேசத் தெரியாவிட்டால் அவர் தாழ்வானவர் என்றும் அவருக்கு முக்கியத்துவம் தரத் தேவையில்லை எனக் கருதப்பட்டது.இன்னொரு காரணம், பல முன்னணி நிறுவனங்கள் ஆங்கில ஊடகங்களுக்கு 20 சதவீதத்திற்கும் அதிகமான செலவினங்களை ஒதுக்கின. மீதிதான் மொழி வாரி நாளிதழ்களுக்கு ஒதுக்கப்பட்டன. மொழிவாரி நாளிதழ்கள் சுரண்டப்படுவதற்கும், தரம் தாழ்த்தப்படுவதற்கும் இதுவே காரணமாக அமைந்தது. ஆங்கில நாளிதழ்களுக்காக அபரிமிதமாக செலவளித்த பெரும் நிறுவனங்கள் இப்பொழுது இந்தியாவிலேயே இல்லை என்பதை நீங்கள் நினைவுபடுத்திக் கொள்ளலாம். போர்டு, செவர்லே போல மேலும் பல நிறுவனங்களை உதாரணமாக சொல்லலாம்.latest tamil news


தேசிய அளவில் சென்றடைய வேண்டும் என்ற எண்ணத்தில் ஆங்கில நாளிதழ்களை நிறுவனங்கள் ஆதரித்தபோது, உண்மையில் உள்ளூர் சில்லரை விளம்பரங்களின் வீச்சை மொழிவாரி நாளிதழ்கள் தான் நிரூபித்துக்காட்டின. வாசகர் தரும் விலைக்கு தகுந்த பொருளடக்கத்திற்காக அதிக பக்கங்களை மொழிவாரி நாளிதழ்கள் கொடுத்து பக்கங்களை அதிகம் குறைக்காமல் சிரமமான நேரங்களிலும் துடிப்புடன் இருந்தன.இப்பொழுது இவற்றையெல்லாம் நான் ஏன் சொல்கிறேன். இந்த சகாப்தத்தை கோவிட்டுக்கு முன்பு, கோவிட்டுக்கு பின்பு என்று நாம் பிரித்துக்கொள்ளலாம். பல நாளிதழ்களின் வண்டவாளம் தெரிந்துவிட்டது (இவற்றில் பெரும்பாலனவை ஆங்கில நாளிதழ்கள்). பெரும்பாலன ஆங்கில நாளிதழ்கள் தொழில் தர்மத்தை கொஞ்சம்கூட பின்பற்றவில்லை. ஆடிட் பீரோ ஆப் சர்குலேஷனை ஒப்பிட்டுதான் இதை கூறுகிறேன். சந்தையில் ஒரு நாளிதழ் எத்தனை விற்கிறது என்பதற்கான உண்மையான சான்றிதழ் இதுதான்.latest tamil news


எதிர்பார்த்ததற்கு முன்னதாகவே ஆங்கில நாளிதழ்களுக்கு அஸ்தமனம் ஏற்பட்டுவிடும். சில நாளிதழ்கள் சலுகை விலை என்ற பெயரில் ஒரு ரூபாய்க்கு அறிவுப்பூர்வமான ஒரு தயாரிப்பை விற்பனை செய்து விளம்பர கட்டணத்தை கண்ணாப்பின்னா என்று உயர்த்திவிட்டன. இதனால் பல நடுத்தர மற்றும் சிறு விளம்பரதாரர்கள் டிஜிட்டல் ஊடகங்கள் பக்கம் சாய்ந்துவிட்டனர். சந்தையில் இருந்த பல முன்னணி நிறுவனங்கள் இந்த நியாயமற்ற உத்தியால் ஒழிக்கப்பட்டன.துரதிர்ஷ்டவசமாக தமிழகத்தில் இருந்து வெளிவரும் ஆங்கில நாளிதழ்கள் தணிக்கைக்கே செல்லவில்லை. கடந்த ஜனவரி - ஜூன் 2022, காலக்கட்டத்தில் தமிழகத்தில் இருந்து தினத்தந்தி, தினமலர் ஆகிய இரு முன்னணி நாளிதழ்கள் தான் தணிக்கை சான்றிதழ்களை பெற்றன என்பதை பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இருப்பினும் பல தனித்துவமான மொழிவாரி நாளிதழ்கள் சான்றிதழ்களை பெற்ற நிலையில் ஆங்கில நாளிதழ்கள் என்று தங்களை கூறிக்கொண்ட பலர் தணிக்கைக்கே செல்லவில்லை. அப்படி தணிக்கைக்கு சென்ற சில ஆங்கில நாளிதழ்களின் விற்பனை பெரிய அளவில் சரிந்ததும் தெரியவந்தது.தங்கள் விற்பனை சரிந்து, வாசகர்களை சென்றடைவது குறைந்து, தங்களுக்கு அதுவரை கிடைத்த வீச்சு இருக்காது என புரிந்துவிடும், தங்கள் கனவு தகர்ந்து விடும் என்ற பயத்தில் ஆங்கில நாளிதழ்கள் தணிக்கைக்கே செல்லவில்லை. இவர்கள் நிலைமை இப்படி என்றால், மொழிவாரி நாளிதழ்களின் விற்பனை சரிவு பெரிய அளவில் இல்லை. ஏபிசி பட்டியலில் இல்லாத சில ஆங்கில நாளிதழ்களுக்கு விளம்பர ஏஜென்சிகள் அதிக மரியாதையும், மதிப்பும் கொடுத்து அதிக கட்டணத்தையும் தருகின்றன.30 லட்சம் விற்பனையுள்ள ஒரு நாளிதழின் ஜாக்கெட் விளம்பரத்திற்கு (முகப்பு பக்க விளம்பரம்) ரூ.2 கோடி கட்டணம் என்றால் 18 லட்சம் பிரதிகள் விற்பனை உள்ள மொழிவாரி நாளிதழுக்கு ரூ.50 லட்சம் கூட கட்டணம் தரப்படுவதில்லை. மொழிவாரி நாளிதழ்களுக்கு விற்பனை குறைவதால் ஏற்படும் பாதகத்தை விட சாதகமே அதிகம். மொழிவாரி நாளிதழ்களின் விலையும் அதிகம் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.latest tamil newsமுடிவாக எனது சில வேண்டுகோள்களும், ஆலோசனைகளும்:


தங்களிடம் உள்ள புள்ளி விவரங்களை மட்டும் வைத்து எடைபோடாமல், மொழிவாரி பத்திரிகைகளின் சக்தியையும் சந்தையில் அவற்றுக்கு உள்ள பலத்தையும் முன்னணி விளம்பர நிறுவனங்கள் புரிந்துக்கொள்ள வேண்டும். கோவிட்டுக்கு பிந்தைய காலத்திலாவது, மொழி பத்திரிகைகளுக்கு அதிக விளம்பரங்களை தர வேண்டும் என்பதை பிராண்டுகளின் வளர்ச்சிக்கு உதவும் பிரபல விளம்பர நிறுவனங்கள் புரிந்துக்கொள்ளும் என நம்புகிறேன். தமிழ் பத்திரிகைகள் உட்பட பிற மாநில பத்திரிகைகளுக்கும் நல்ல எதிர்காலம் உள்ளது.அதிக விற்பனை உள்ளதாக கூறி அபரிமிதமான கட்டணத்தை வசூல் செய்துக்கொண்டிருந்த பல ஆங்கில நாளிதழ்கள், விற்பனையில் திடீர் சரிவு ஏற்பட்டதால், உண்மையான விற்பனையை மறைப்பதற்காக ஏபிசி தணிக்கைக்கு செல்லவில்லை. இதனால் ஆங்கில ஊடகங்களுக்கு அஸ்தமனம் ஏற்பட்டுள்ளது நன்கு தெரிகின்றது. இதை வாடிக்கையாளர்களும்/ஏஜென்சிகளும் புரிந்து கொள்வார்களா? பல மொழிவாரி நாளிதழ்களின் துணிச்சலை பாராட்டுவார்களா? ஆங்கில ஊடகங்கள் தங்கள் விற்பனை விலையை சரிசெய்வார்களா? இதன்மூலம் வரும் பணம், மொழிவாரி பத்திரிகைகளின் விளம்பரங்களுக்கு தரப்படுமா அல்லது மற்ற ஊடகங்களுக்கு செல்லுமா? அச்சு ஊடகங்களுக்கு என்று ஈடுசெய்ய முடியாத சில தனித்துவமான குணங்கள் உள்ளன என்பதை அனைவரும் புரிந்து கொள்வார்களா?எனது தோழர்களுக்கு நான் சொல்லிக்கொள்வது; நம் நாட்டின் நான்காவது தூணாக பத்திரிகைகள் கருதப்படுகின்றன. நம்பகத்தன்மைக்கும், வர்த்தகத்தை அதிகரிக்கவும் அச்சு ஊடகங்கள் தான் மிகச் சிறந்தவை. இந்த துறையில் இருப்பவர்கள் என்ற முறையில் பணத்திற்காக தவறான வழியில் செல்லாமல் தொழில் தர்மத்தை பின்பற்றுவோம்.இப்போதே இந்த குறைகளை நாம் சரிசெய்துவிட்டால், நமது தொழில்துறை, ஒட்டுமொத்தமாக வளர்ச்சி பெற்று வாசகர்களுக்கும், விளம்பரதாரர்களுக்கும் மிகப்பெரிய அளவில் உதவிகரமாகவும் மதிப்பீடுகளையும் ஏற்படுத்தும் என நான் நிச்சயமாக நம்புகிறேன்.புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
26-செப்-202214:46:42 IST Report Abuse
Chandran,Ooty ,,,,,
Rate this:
Cancel
Bharathanban Vs - tirupur,இந்தியா
26-செப்-202214:41:22 IST Report Abuse
Bharathanban Vs எனது மகனும், மகளும் ஆங்கில மீடியம் தனியார் பள்ளியில் படிக்கின்றனர். தினமும் தினமலர் வீட்டில் வாங்குகிறோம். முதலில் சிறுவர் மலர், விளையாட்டுச் செய்திகளில் ஆர்வம் காட்டி படித்த அவர்கள் தற்போது தினமும் தினமலர் படிக்காமல் இருப்பதில்லை. தமிழ் மொழியை எழுத்துப்பிழையில்லாமல் எழுதவும், படிக்கவும் செய்கின்றனர். தற்போது இரண்டு வாழ்நாள் தினமலர் வாசகர்கள் என் வீட்டில் உருவாகியுள்ளனர். ஆனால் இந்த வசதி மற்ற மாணவர்களுக்கு கிடைக்குமா என்று தெரியவில்லை. அனைத்து பள்ளிக்கு செல்லும் அனைத்து மாணவர்களுக்கும் (தனியார், அரசு பள்ளி என்று வேறுபாடு பார்க்காமல்) தினமலர் இலவச பிரதி (குறைந்தது 4 பக்கம்) அளிக்க வேண்டும். அதன் மூலம் அவர்களது தமிழ் மொழியறிவு வளர்வதுடன், தினமலரின் நிரந்தர வாசகர்கள் ஆவார்கள். இது செலவல்ல... முதலீடு என்று தினமலர் நிர்வாகம் பார்க்க வேண்டும். அத்தோடு தமிழ் மொழிக்கு செய்யும் சேவையும் கூட.
Rate this:
Cancel
nalledran - Madurai,இந்தியா
26-செப்-202214:33:08 IST Report Abuse
nalledran ......
Rate this:
Bharathanban Vs - tirupur,இந்தியா
26-செப்-202214:59:48 IST Report Abuse
Bharathanban Vsஐயா... அரைகுறையாக செய்தியை படித்து பார்த்துவிட்டு, அதை சரியான தகவலா என்று பார்க்காமல் தட்டியுடன் இரு எம்.பிக்கள் சென்று உளறியது தமிழகத்தின் சாபம். எய்ம்ஸ் போன்ற கட்டிடங்கள் கட்டுவதற்கு பூர்வாங்கப் பணிகள் மிக அதிகம். அதில் 95 சதவீதம் முடிந்துவிட்டது, கட்டுமானப்பணிகள் முடிந்து பிரதமர் திறப்பார் என்று தான் திரு.நட்டா பேசினார். இதை புரிந்து கொள்ளாமல், 95 வீத கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டுவிட்டதாக கருதி கேவல அரசியல் நடத்தியுள்ளனர் இரு அரசியல்வாதிகள். இது அடுத்த நாளே அம்பலப்பட்டுவிட்டது. இப்போதும் நட்டாவின் உரை யூடியூப்களில் உள்ளது சரிபார்த்துக் கொள்ளலாம் (ஆங்கிலம் தெரிந்தால்). இல்லையெனில் மோடியின் உரை திரித்து இதுவரை உளறிக் கொண்டிருப்பதைபோலவே நீங்களும் உளறலாம்.......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X